Saturday, March 26, 2011

சந்தேகம் எப்போதும் நிரந்தரமாவதில்லை..!

புரிந்து கொள்வதில் ஏற்படும் ..
தடுமாற்றமே..!

சந்தேகம்...!

சந்தேகம் எப்போதும் நிரந்தரமாவதில்லை..!
நொடி பொழுதின் கணிப்பின் தவறுதல்...
தலை எழுத்தையே பிழையாக்கிடும்..!

சில நேரம்
சந்தேகம் நேசத்தை பாசமாய் மற்றிவிடும்....!

பலநேரம் ..
பாசத்தில் விஷம் சேர்த்துவிடும்..!

உங்கள் சந்தேகம் முறையானது என ..
உங்கள் மனசாட்சி ஒப்புக்கொண்டால்...
உடனே மனம் திறந்து
உங்கள் உணர்வுகளை
அவர்களிடமே   வெளிப்படுதுங்கள்..!

உங்கள் அக்கறையையும்... பரிவையையும்..
உணர்வின் மூச்சாக மாற்றி ...
மாறிகொள்வார்கள்...!

ஒருபோதும்...
உங்கள் மனமே ஒப்புக்கொண்டாலும் ..
சந்தேகங்களை அவர்களை விட்டு ..
மற்றவர்களிடம் பகிர்ந்து..
ஆறுதல் தேட முயளாதீர்கள்..!

மரண வாழ்க்கையை அனுபவிக்க
செய்த பாவம்
உங்களை மட்டுமே எப்போதும் சார்ந்து விடும்..!

சந்தேகப்படுவது குற்றம் என்பது எப்படி சரியோ...
அதேபோல்...
சந்தேகபபடும் விசயங்களை..
நிவர்த்தி செய்யாமல் வேண்டுமென்றே..தொடர்வதும்
மாபெரும் குற்றம்..!பாவமும்கூட...!

புரிந்து கொள்ளுதலை..பலப்படுத்தினாலே...போதும்
சந்தேகம் பிறக்க வழியுமில்லை...!வாய்ப்புமில்லை...!

சந்தேகபபடுவதை...குற்றம் சொல்லாமல்..
புரிய வையுங்கள்...புது வாழ்க்கையின் அர்த்தமும் புரியும்...
நம்பிக்கையும் பிறக்கும்...!

புரியாவைத்து..புரிந்து கொண்டாலே போதும்...
சந்தேகம்....
சரி செய்து கொள்ளப்படும்...!

Tuesday, March 22, 2011

இழப்பு இயற்கை அல்ல...!

இழப்பு எல்லோருக்கும் பொதுவானது..!
எதை இழந்தோம் என்பது முக்கியம் என்றாலும்...
ஏன்..எப்படி..எதனால்...
என ஆராய்ச்சியை அவசியமாக்குவதும் முதன்மையானது..!

இயற்கையின் இழப்புகளை அலச வேண்டும்
என்பது அவசியமில்லை...அது நிரந்தரமானது...!

நம் இழப்புகளை ஆழமாய் ஆராய்ந்தால்....
புது புது...சுய மதிப்பீடு வெளிப்படும்...!

மரியாதை இழப்பு...மாபெரும் அவமானம்...!
பழியை பிறரிடம் போடுவதை சற்று மாற்றி
பிறரிடம் உங்கள் மரியாதை மட்டுபட
துணை தந்த உங்கள் செயல்களை
மறுபரிசீலனை செய்து பாருங்கள்...
இழந்த மரியாதை மீண்டும் உங்கள் வசம்...!

பொருளாதார நஷ்டம் மூலம்..இழப்பு..
நடைப்பிணத்தின் நிஜம்...!
ராசி...அதிர்ஷ்டம்..தோசம்..மூடநம்பிக்கை
என காரணம் காட்டி சமாதானம் ஆகாமல்...
உண்மை காரணங்களை தேடி கண்டுபிடித்து
சரி செய்து பாருங்கள்...
உங்கள் மனதளவில் நீங்கள் மட்டுமே முதல் இடம்
உலக செல்வந்தார்கள் வரிசையில்...!

காதலில் இழப்பு...முதலிலே முடிவாக்கப்படும் முதலெழுத்து...!
உங்கள் கதையை முடிக்கும் முற்றுப்புள்ளி அல்ல...!
காதலில் இன்பங்களை விட சோகம் தான் சுகமானது...!
எதிர்பார்ப்புகள் ஈடேறி விட்டால்..காதல் கசந்து போகும்..!
காதலில் காமத்தை கட்டாயமாக்காமல்...அனுபவித்து பாருங்கள்..
உள்ளம் மட்டுமல்ல உடல்கள் இணைவது கூட புனிதப்படும்...!

இழப்பு இயற்கை அல்ல...!
உங்கள் செயல்களின் வெளிப்பாடு...!
மறப்பதும்...மாற்றுவதும்..தடுப்பதும்...தவிர்ப்பதும்...
உங்களால் மட்டுமே முடியும்...!

Monday, March 21, 2011

எண்ணங்கள்

நம் எண்ணங்களின் படி ..
வாழ்க்கை தொடர்ந்தால்
எவ்வளவு சுகமாக இருக்கும்....!
ஆனால்
சுவையாக இருக்குமா..?

நம் எண்ணங்கள் பொருளாதார ரீதியில்...
கற்பனையை விதைத்தால்..
நிம்மதி தொலைந்து போகும்...!

கட்டாயமாக்கப்பட்ட
எண்ணங்களின் வெளிபாட்டால்....
மனிதாபிமானம் மரத்து போகும்...!

காதல் வயப்படும் போது ..
எண்ணங்களின் மாற்றங்களை
தடுக்க முடியாது...
அனுபவிக்க மட்டுமே முடியும்...!

எண்ணங்கள் அப்படியே நிறைவேற தொடங்கினால்..
ஆணவமும்...சுய தம்பட்டமும்..
நம்மிடம் இருந்து வெளிப்படுவதை
மறுக்கவே முடியாது...!

எண்ணங்கள் நிறைவேறாமல் போனால்
எல்லாமே எதிரிகளாக மாறிவிடும் .....
கடவுள் உட்பட.....!

எண்ணங்களை நம்மோடு மட்டும்
நிறுத்திக்கொள்ளாமல்
மற்றவர்களுக்கும்
அதை கட்டாயமாக்கும்போதுதான்..
விரோதம்..பகைமை..எதிர்ப்பு
என
எல்லாமே முரண்பட்டு போகும்...!

எண்ணங்களை செதுக்கி கொள்ளுங்கள்..
சீர் படுத்தி பாருங்கள்..
நியாயப்படுத்தி பாருங்கள்...
நடுநிலைமையை கடைப்பிடியுங்கள்...
பிறகென்ன...
உங்கள் எண்ணங்கள் ...
வரலாற்று பதிவாக மாறுவதை ...
யாராலும் தடுக்க முடியாது...!

எண்ணங்களால் ஏமாற்றி..
ஏமாறுவதை மாற்றி...
எண்ணங்களையே மாற்ற தொடங்குவோம்...!

Friday, March 18, 2011

இந்தியன் என்ற உணர்வு உங்களுக்கும் உண்டா...?

இந்தியன் என்ற உணர்வு சரியாக வெளிப்படுகிறதா...?
விரல் விட்டு எண்ணி பாருங்கள்...!

விளயாட்டு விஷயங்களில்..
இந்தியா ஜெயிக்க வேண்டுமென்ற
எதிர்பார்ப்பு மட்டுமே
உங்களால் வெளிப்படுத்த முடியும்...
பங்களிப்பை நிரூபிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை..!

வெளிநாடுகளில் இந்தியர்கள் புரியும் சாதனையை...
மேற்கோள் காட்டி பெருமை தான் பட முடியும்..!
பகிர்ந்து கொண்டு பங்கு போட
மனதளவில் கூட முடியாது....!

எல்லைகளில்
இந்திய வீரர்களின்
உணர்வுகளை
கடமைகளை..
தியாககங்களை.....
விழிகளில் வழியும் கண்ணீர் கொண்டு
ஏக்கமாய் தான்
வெளிப்படுத்த முடியும்...
அவர்கள் தோளொடு தோள் நின்று
எல்லைகளை பாதுகாக்க
நீங்கள் துணை தர முடிவதில்லை....!

சேவை புரிய....யாரோ சிலர்....!
அவர்களோடு
நம் தொடர்பு என்ன
என்று விளக்கவும் வழியில்லை...!

காசுக்காக அரசு பணியில் பலர்...
கடமை என அவர்கள் செய்யும் பணி...
நேரம்பார்த்து மட்டுமே வெளிப்படும்..!

காசுக்காக..அரசையே விலை பேசும் சிலர்....
அதை தடுக்க எப்போதும் முயலாமல்...
குற்றம் என நிரூபித்து
சுயலாப  குளிர் காய நினைக்கும் பலர்..!

அரசியல் கொததடிமைகளாய்..மாறி
காட்சிக்காக ..
நாட்டையே காட்டி கொடுக்கும்..
வெள்ளை உடை..கொள்ளையர்களை..
வேரருக்க வழியின்றி
அவர்களிடமே விலை போகும்..பலர்..
அதற்க்காக எதையும் செய்யும் சிலர்...!

இந்தியன் என்ற உணர்வு உங்களுக்கும் உண்டா...?

உண்மை என்றால் உணர்ந்து பாருங்கள் ..!

எதையெல்லாம்...
எப்படியெல்லாம்...
எப்போது எல்லாம்
இந்தியன் என உங்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள்..?

மனசாட்சியை மறந்து சொல்ல வேண்டாம்..?

ஒரு விசயம் யோசித்தீர்களா...?

நாம் இந்தியன்
என்ற உணர்வு வெளிப்படுத்த
முதல் படியாக...
அடிப்படையாக..
எளிதான..
ஒரு விஷயம் உண்டு...

அது...
வாக்களிக்க வேண்டும்....!

அவசியம்..என்பதை விட..
கட்டாயமாக்கி கொள்ளுங்கள்...!

விலை போய் விடாதீர்கள்...!

வரும் தேர்தலில்
நூறு சதவீதம் வாக்களித்து
நாமும் இந்தியன்
என
நிமிர்ந்து நிற்க தொடங்குவோம்...!

Wednesday, March 9, 2011

நீங்கள் தான் .. திறமைசாலிகள்...!

வெளிப்படுத்தப்பட்ட..
திறமைகளை மட்டுமே..
பெருமையாய் பேசி..பேசி...
உங்கள் வளர்ச்சிக்கு...
நீங்களே ...
முட்டுகட்டை...
போட்டு கொள்ளாதீர்கள்...!

மறைந்து இருக்கும் ...
உங்கள் திறமைகள்..
வெளிப்படாமலே...
போய் விட கூடும்...!

திறமைகள்...
என்பதின் முழு அர்த்தமும்..
உங்களுக்குள் ....
புரிந்து கொள்ள பட வேண்டும் ...!

உங்கள் ....
செயல்களின் வெளிப்பாடு...
உங்களுக்கு..
முதலில் திருப்தி தரவேண்டும்...!

மற்றவர்களின்
எண்ணமும்...வரவேற்பும்...
ஒத்துக்கொள்வதும்...ஏற்று கொள்வதும்....
அடுத்த பட்சம்தான்...
என ....
பரி பூரணமாக ....
உணர்ந்து கொள்ளுதல்தான் ....
முக்கியமான அடிப்படை...!

அதுதான் ...
உங்கள்...
திறமைகளுக்கான அங்கீகாரமும் கூட...!

சாதாரண செயல்கள்.....
உங்களின் திறமைகள்..
என... 
அறிமுகம் செய்யப்பட்டால்.....
பரிகாசம்மட்டுமே பரிசாக கிடைக்கும்...!

உங்களின் ...
அற்புதமான திறமைகள் ...
சராசரிதான் ...
என ..
உங்களால் அறிமுகபபடுத்த பட்டால்....
பலரிடம்..பலமுறை..
பெருமை படுத்தப்படும் ..
பெரு மதிப்பு ...
என்றுமே ...
நிலைத்து நிற்கும்...!

எல்லோருக்கும் திறமைகள் உண்டு....!
வெளிப்படுத்தவும் முடியும்...!
ஆனால்...
அங்கீகாரம் கிடைப்பதும்..
அவமதிக்கபபடுவதும்...
உங்களின்
செயல்களால்தான்....
முடிவு செய்யப்படும்...!

உங்கள் திறமைகள் ...
உங்களால் பேசப்படுவதை விட..
மற்றவர்களால்...
உணர பட வேண்டும்..!

இதை உணர தொடங்கி விட்டாலே ...

நீங்கள் தான் ..
திறமைசாலிகள்...!

துரோகியாக உருமாறதீர்கள்...!

பகைவன்...எதிரி....விரோதி...துரோகி....
இப்படி உங்களுடன் பழகுபவர்களை
வகைப்படுதுங்கள்...!

உங்களை பற்றி
நீங்களே மதிப்பிட்டு கொள்ளலாம்...!

யார் யாரெல்லாம் ...
உங்கள் வளர்ச்சி...
உங்கள் உயர்வு..
உங்களின் வெற்றி..என
எல்லாவற்றையுமே தரக்குறைவாக...விமர்சிகிறார்களோ....
அவர்கள்தான்
உங்கள் பகைவர்கள்....!

நீங்கள்
எத்தனை பேர்களுக்கு
பகைவர்களாக மாற
தொடங்கி இருக்கிறீர்கள்...
கணக்கெடுத்து கொள்ளுங்கள்...!
 
காரணமே இல்லாமல்...
குறைகளை பெரிதாக்கி..
உங்களை தவிர்த்து...
சிறு சிறு விஷயங்களை
புலம்பி தள்ளுபவர்கள்..
உங்களை வெறுத்து ஒதுக்குபவர்கள்....
நிச்சயம்
விரோதிகளில் அடங்குவர்....!

நீங்கள் யார் யாருக்கு விரோதி ...
விரல் விட்டு எண்ணி வையுங்கள்..!

எதிலுமே தடை ஏற்படுத்துவது....
முன்னேற்றங்களை..முறியடிபபது....
முதலுக்கே மோசம் செய்வது...
இப்படி உள்ளவர்களை
உங்கள் எதிரிகள் என்று
அறிமுகம் செய்து கொள்ளுங்கள்....!

எத்தனை பேர்களுடன்
எதிரியாய் அறிமுகப்படுத்தபடுவீர்கள்....
வரிசை படுத்துங்கள்...!

உங்களுடன் ...உங்களுக்குக்காகவே....
எதையுமே  செய்யத் துணிந்தது போலவும்....
வாழ்க்கையை உங்களுக்காக..
அர்பணித்தது போலவும்
பொய் வேசம் காட்டுபவர்களை ...
இனம் கண்டு துரோகிகள்
என முத்திரை குத்தி..
ஒதுக்கி வைத்து விடுங்கள்...!

நீங்கள் யார் யாருக்கு துரோகி என மாறினீர்கள்....?
வரிசைப்படுத்தி கொள்ளுங்கள்...!

உங்களுடன் யார் யாரெல்லாம்....
பகைவன்...எதிரி....விரோதி...துரோகி...
என
வரிசைப்படுத்தியதையும்..
வகைப்படுத்தியதையும்....விட்டு தள்ளுங்கள்...!

நீங்கள் யார் யாருக்கெல்லாம்...
பகைவன்...எதிரி....விரோதி...துரோகி...
என
மாறததொடங்குவதை..
மாற்றி கொள்ளுங்கள்...!

அது சாத்தியமில்லை என்றால்.....
குறைந்த பட்சம்..
துரோகியாக உருமாறதீர்கள்...!

அது ..
மனித குலத்திற்கே...
நீங்கள் செய்யும் ....
மாபெரும் துரோகம்...!

Friday, March 4, 2011

போட்டிகள் நிறைந்த வாழ்க்கையை வரவேற்போம்...!

திறமை உள்ளவர்கள்
போட்டிகளை கண்டு
பயப்படுவதில்லை...!
பட்டை தீட்டி கொள்வார்கள்..!

போட்டிகள் நிறைந்த வாழ்க்கையை வரவேற்போம்...!

எது போட்டி என்று
வரிசைப்படுத்தி பாருங்கள்...
வகை படுத்தியும் பாருங்கள்...!
போட்டி என்று நினைப்பதே
பொய் என்று புரியும்..!

உங்களால் முடியாததை
யாராலும் தொடர முடியாது..
ஏன்..
தொட கூட முடியாது
என மனப்பூர்வமாக நம்புங்கள்...!
உங்களுக்கு இணை என
யாராலும்..யாரையும்...
சமபடுத்தி பார்க்க முடியாது...!

தனித்துவம் உங்கள் தன்னம்பிக்கை...!

போட்டிகளை
தவிர்பது...தடுப்பது..தடுமாறுவது..என
எதையுமே  நீங்கள்
அவசரமாய் செயல் படுத்த
முயல வேண்டாம்...!
துணிச்சலுடன் போட்டிகளை
எதிர்த்து நின்று பாருங்கள்...
எது...போட்டி என்று
உங்களாலே கண்டுபிடிக்க முடியாது...!

போட்டிகளை
பொக்கிஷமாய் பத்திரப்படுத்துங்கள்...!
பொறாமையாக மாற
விட்டு விடாதீர்கள்...!

போட்டிகள் இல்லை என்றால்...
உங்களுக்குள்
புது வேகம் பிறப்பேடுக்காது...!

நாம் பிறருக்கு
போட்டியாய் மாறுவோம்...!

நமக்கு
போட்டியாய்..
யாருமில்லை என
எப்போதும்...
நம்புவோம்...!