Friday, March 14, 2014

என்னை உயிரோடு புதைத்து கொன்றுவிடு..!

அந்த
ஒரு நொடி முதல்..
என்னை
எனக்கே
மீட்டெடுக்க முடியவில்லை...!

வலிக்கும்
வார்த்தைகளை
வாழ்க்கையில்
பலமுறை
சந்தித்து
சங்கடம்
சந்தித்தது..
சகஜம்தான்..!

ஆனால்..

வார்த்தை தராத வலி..
உன்
நிராகரிப்பும்..
உதாசினமும்..
அலட்சியமும்..
அணுவை துளைத்து
ஒவ்வொரு அணுவிலும்..
அணு அணுவாய்
சித்திரவதை செய்து கொண்டே
என்
வாழ்நாள் முழுவதும்
தொடர்ந்து
துளைத்து கொண்டே இருக்கும்..!

இந்த நிஜம்
எனக்கு புதியது..
அறிமுகமி ல்லாதது...!

நடந்து வந்த
இனிமையான நேரங்களையும்..
கடந்து வந்த
சுகமான தருணங்களையும்...
அனுபவித்த
சுகங்கள் அத்தனையும்..
பேசிய..கழித்த
சந்தோசங்களையும்...
தொட்டு தீண்டி..
எல்லை மீறிய..
அதிசயங்களையும்..
நெருங்கியே இருந்த..
அருகாமையின் அனுபவங்களும்...
உன் செய்கையால்..
செயலிழந்து..
நொறுங்கி...
போனது
இன்னமும் சீராகவில்லை..!

எங்கும்..
எதிலும்..
எப்போதும்..
அந்த கணம் மட்டுமே
நெஞ்சில் கனமாகிறது.. !
ரணமாகிறது..!

வாழ்க்கையே
மரண வேதனை
அனுபவம்..அடைந்து
தொடர்கிறது..!

இந்த நிலை
உன்னால் மாறலாம்..!
மீண்டும்
நீ
நீயாக
எனக்கு
சுகம் தரலாம்..!

நீ தந்த
இந்த
கொடூர காயங்கள் கூட
ஆறி போகலாம்..!

ஆனால்

நினைவு படுத்தி..
என்ன
உயிரோடு
கொன்று போகும்..
நீ
நிரந்தரமாக்கிய
வடுக்களை
என்ன செய்ய முடியும் ?
என்ன செய்ய போகிறாய்..!

ஒன்றை மட்டும் செய்..!

மீண்டும்
என்னை வதைத்து
சந்தோசம் அடையும்
ஆசைவாந்தால்..
என்னை
உயிரோடு புதைத்து
கொன்றுவிடு..!

அப்புறம்
நீ
நினைப்பதை
நடத்தி கொள்..
கொல்...!

எனது பெயர்!!!!

என்னை நானே
மதிப்பிட்டு கொண்டேன்... !
எனது சந்தோஷம்..
என்னுள் இருக்கும்
எதனால்?

முக வசீகரம் ,,,, !!

இல்லை இல்லை
நேற்றைய முகம்
இன்று இல்லை !
இன்றைய முகம்
நாளை இல்லை ... !

பழகி மகிழ்விக்கும்
எனது இயல்பா?...

அதுவும் இல்லை...
பல சமயம்
சோகத்தில் மூழ்குகிறேன்.. !
சில சமயம்
ஏக்கத்தில் ஏமாறுகிறேன்...!
மொத்தத்தில்
கோபத்தில்
எல்லாம் இழக்கிறேன்...!!

எது
எனக்கு சொந்தம்?...

எனது தாயா?
தாரம் வந்ததும்
தாய்
இரண்டாம் பட்சம்.....!!.

தாரமா?...
மகள் பிறந்தவுடன்
தாரம் கூட
அடுத்தது தான்..... !!!

எனது புகழ்...
எனது செல்வம்...
எனது அந்தஸ்து....
எனது பதவி....
எதுவுமே
எனக்கு சொந்தமானது இல்லை.... !!!

எனக்கென்ற
சொந்தம் எது?????
யோசித்தேன்.......... ,,,
யோசித்தேன்........ ,,,
யோசித்தேன்....... ,,,
என்னை
அழைக்கும் குரல்
கேட்டவுடன் தெளிந்தேன்..... !

பிறந்தது முதல்... ,,
வளர்ந்து
வாழும் வரை
மாறாதது
என்னை விட்டு
போகதது... ,,
எனக்கான அடையாளம்
எது
என தெரிந்தேன்... புரிந்தேன்… !

எனது பெயர்!!!! (SHAFI)

வாழும் போது மட்டும் அல்லாமல்
வாழ்த்து முடிந்த பிறகும்
நிலைத்து வாழ்வது
எனது பெயர் ஒன்று
மட்டுமே !!!!

Wednesday, March 12, 2014

இன்றைய நிஜம்.. இனிமை..!

நாளைய நிகழ்வுகளை..
கற்பனை செய்து..
கலங்கி...
கவலைப்பட்டு..
இன்றைய சந்தோசங்களை..
ஒதுக்கி..
ஓரம் கட்ட வேண்டாம்..!

நேற்றைய..சம்பவங்கள்..
உங்களுக்குள்
இன்று
என்ன உணர்வுகளை
உணர்த்துகின்றன...
ஏறக்குறைய
மறந்தும் இருக்கலாம்..
மரத்தும் போய் இருக்கலாம்...!

அதே நிலை தான்
நாளை
நமக்கு நடப்பதும்..!
ஏதோ ஏதோ
கற்பனைகள்..
அவநம்பிக்கைகள்..
மதிப்பீடுகள்..
உங்களுக்குள் வளர்த்து..
இன்றைய நிஜங்களை..
நிர்மூல படுததவேண்டாம்..!

சந்தோசம் கொண்ட உணர்வுகள்..
உங்களுக்குள் வரும்
அந்த நொடியை
உங்களை
ஆட்கொள்ள விட்டுவிடுங்கள்..!

வழி மாற்றி..
திசை மாற்றி..
நாளைய கற்பனைகளை..
நேற்றைய..கழிவுகளை..
கலக்க விட்டு...
இன்றைய..
மகிழ்வுகளை..
சிதைத்து
சின்னாபின்னமாக்கி
சீறழித்து விட வேண்டாம்..!

நேற்றும் இன்றும் நாளையும்..
நீங்கள் மட்டுமே
கடந்து வந்திருக்கலாம்..
உங்கள் உணர்வகளோ..
உள்ளமோ..
அனுபவித்து..
அதை
அந்தக்கணமே
அழித்து..
ஒழித்து..
புதைத்து..
மீண்டு
சந்தோசங்களை மட்டுமே
அனுபவிக்க
இன்றும்
மீண்டும் ஜனித்திருக்கலாம்..
அதை
கொன்று ..
நாளை
சுகபிரசவம் நடக்கும்
என சமாதானம்
செய்து கொள்ள வேண்டாம்..!
நேற்றை..
முழுவதுமாக
துடைத் தெரியுங்கள்...
நாளையை..
முளையிலேயே..
கிள்ளி எறியுங்கள்...

பிறகென்ன
இன்றைய நிஜம்..
இனிமையை..
இப்போது மட்டுமல்ல..
எப்போதும்..
உங்களுக்கு மட்டுமல்லாமல்
உங்களை சுற்றியும்..
ஊற்றாய்...
வாழ்ந்து கொண்டிருக்கும்..!

நீங்களும்
சுகமாய் வாழ்க்கை
தொடர்ந்து கொண்டிருப்பீர்கள்...!

Friday, March 7, 2014

மகளிர் தின வாழ்த்துக்கள்...!

நினைத்து பார்க்கிறேன்..!
ஒவ்வொரு நொடியிலும்...
நீ மட்டுமே..
என் வாழ்க்கை...முழுவதும்..!

பிரசவித்த
முதல் கணம்..
என்
கண்ணீரை துடைத்தாய்...
உன் வலிகளை
மறந்து
என்னை மகிழ்வித்தாய்..
நீ
என் தாய்
என்றாலும்
நீ  பெண்..!


விட்டு கொடுத்தது..
உனக்கே
உரித்தான ஒன்று...
எனக்கு பிடிக்கும்..
அது உனக்கும்
நிரம்ப பிடித்திருந்தாலும்...
முழு மனதோடு
எனக்கு தரும்
அந்த ஒவ்வொன்றும்..
என்
தங்கையின் அடையாளம்
என்றாலும்
நீ பெண்...!

இளமைக்கே
உரித்தான..
குறும்புகள்..
வரம்பு மீறும்போதும்
பேசிய நேரங்களில்..
பார்வைகள்
எல்லைகள் மீறி
உன் உடலை மேய்ந்ததும்..
என்னை விட
உனக்கு நன்றாகவே
தெரியும்..புரியும்..!
எப்போது சமயம்
கிடைத்தாலும்
உன்னை சாய்க்கலாம்..
என்பதே
என் குறிக்கோள்...
ஆனாலும்
உன்
தோள் தந்து
என் தோல்விகளை
தடுத்த...
நீ தோழி 
என்றாலும்...
நீ பெண்...!

நடைமுறைக்கு
சாத்தியமில்லாத..
கண்டிப்புகள்...
செயல்முறைக்கு
ஓத்துவராத கட்டளைகள்...
தன்..சுகம் மட்டுமே
அவசியமாக்கும்..
ஆணதிக்க
அசிங்கங்கள்..!
பிற
ஆண்களிடம் பேச
ஏன்
பார்த்தாலும் கூட  ..
சந்தேகம்..வளர்த்து..
கற்பை
களங்கபடுத்தினாலும்..
உடம்பெல்லாம் ..
காயபபடுத்தினாலும்..
மனம் முழுவதும்
என்னையே..
வணங்கும்
நீ என் காதலி
என்றாலும்
நீ பெண்...!

உன் விருப்பு..
வெறுப்பு..
ஆசை..
எதிர்பார்ப்பு..
எல்லாவற்றையும் புதைத்து...
என் மனதோடு..
உன் மனதை
இணைத்து
புனிதமான உறவு
என
நீ வாழ்க்கை
தொடங்கினாலும்..
என் வக்கிரங்களையும்..
அசிங்கங்களையும்..
இறக்கி வைக்கும்
வடிகால்..நீ
என தெரிந்தும்..
முழு மனத்தோடு
என்னையே
வணங்கி வாழும்
நீ என் மனைவி
என்றாலும்..
நீ பெண்..!..

எத்தனை அவதாரம்
எத்தனை ஜன்மம்..
எத்தனை பிறவி
எடுத்தாலும்..
ஆணுக்கு அடங்கியவள்
பெண் என்ற
இலக்கணம்
உடைத்தெறியும் போது...

மகளிர் தினம்
கடமைக்காக கொண்டாடும்
நிலை மாறி
பெண்மையை ..
வழிபடும் தினம்..
என
வரலாறு படைக்கும்...!

அது வரை
இன்று
ஒரு நாளாவது..
பெண்மையை ..
உணர்ந்து..
மகளிர்
கொண்டாட
வாய்ப்பு தருவோம்..!!

மகளிர் தின வாழ்த்துக்கள்...!