Monday, September 30, 2013

அன்பு கூட அவஸ்தையாகுமா.. !

அன்பு கூட
அவஸ்தையாகுமா.. !

அனுபவித்தவர்களுக்கும்..
அனுபவித்துகொண்டிருப்பவர்களுக்கம்...
தெரியும்..
புரியும்...!

நேசிப்பவர்களின் ..
அன்பை பெறும் வரை..
உங்களின் அவஸ்தை ..
அளவிட முடியாதது...!

அன்பை உறுதி செய்த பின்தான் ..
உண்மை அவஸ்தையே ..
தொடங்கும்..!
உங்களை தவிர ..
வேறு யாருடனும்..
பேசினாலும்..
சிரித்ாலும்
உங்கள்
உள்மனது..
அவஸ்தை பட ..
ஆரம்பித்துவிடும்..!

அன்பு ..
சுகத்தை மட்டுமே ..
நமக்கு தந்தால்..
அதில் ..
சுறுசுறுப்பு இருக்காது..!

அன்பு..
பாசம் மட்டுமே ..
பொழிந்தால்..
பரபரப்பே இருக்காது..!

அன்பு ..
நிம்மதியை மட்டுமே ..
தந்தால்..
நிரந்தரமாய் தொடராது...!

அன்பு ...
திருப்தியை மட்டுமே ..
கொடுத்தால் ..
திகட்டி போகும்..!

அன்பு எனும் ..
உணர்வின் ..
அடிப்படை இலக்கணமே ..
அது ..
அவஸ்தையை தந்து கொண்டே ..
இருக்க வேண்டும்...!

அதன் ...
அர்த்தம்
பல வழிகளிலும்..
வகைகளிலும்..
உயிருள்ளவரை
உங்களோடு
வாழ தொடங்கிவிடும் ..!

உங்கள் ..
உயிருக்கு....
வாழ ...
எதிர்பார்ப்புகளை ..
உருவாக்கி தந்து விடும்...!

அன்பு..
அக்கறை. மட்டுமல்ல..!

அன்பு..
புரிந்துகொள்ளல் மட்டுமல்ல...!

அன்பு ..
அரவணைப்பு மட்டுமல்ல...

அன்பு ...
விட்டுக்கோடுத்தல் மட்டுமல்ல..

அன்பு ..
அவஸதையும் அடங்கியது...!

அந்த ..
அவஸ்தைக்கு
இது வரை ..
எதுவுமே இணையாகாது..!
இனியும்
இணையாக
எதுவுமே கிடயாது..!

அன்பை ..
இனி ..
"அவஸ்தையுடன் "
அனுபவிப்போமா..!

Saturday, September 28, 2013

பிடித்திருக்கிறது....!

பிடித்திருக்கிறது....!

சொன்னாலும் சரி...
கேட்டாலும் சரி...
மனதை மயக்கும்
மந்திர சொல்...!

எந்த காலகட்டத்திலும்..
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும்...
யாரிடம் சொன்னாலும்
மனம் அடிமைபடும்...
தந்திர சொல்..!

எதை தொடங்கினாலும்..
எப்படி முடித்தாலும்
பிடித்திருக்கிறது என்று
சொல்லிபாருங்கள்...
சொக்கி போவார்கள்...!

குழந்தையிடம் பிடித்திருக்கிறது
என சொன்னால்
நம் கன்னங்களை
முத்தமழை கொண்டு
ஈரமாக்கும்..!

குமாரியிடம் பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்..
வாழ்வே
நீங்கள் தான் என
வரம் தருவார்கள்...!

தோழ மையிடம்
பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்...!
ஆத்மார்த்த உறவு நிலைப்பபடும்...!

உறவுகளிடம் பிடித்திருக்கிறது
என சொல்லி பாருங்கள்...
பாசம் பத்திரபடும்...!

செய்யும் தொழில் பிடித்திருக்கிறது
என.. சொல்லிப் பாருங்கள்...!
திருப்தியின் உண்மை உணரப் படும்...!

தனிமை உங்களுக்கு பிடித்திருந்தால்..
மனம் கவர்ந்தவர்களின்
நினைவுகளை அனுபவிக்கிறீர்கள்...!

இசை உங்களுக்கு பிடித்திருந்தால்
இதயத்தில் யாரையோ
பத்திரபடூத்துகிறீர்கள்...!

காத்திருப்பது பிடித்திருந்தால்
உங்கள் உறவு
உறுதியாகிரது..!

விழிகள் பிடித்திருந்தால்..
உங்கள் உள்ளம் வரை
உங்களை உணர்ந்தவர்களின்
பார்வை ஊடுருவி
பதிந்து
பத்திரப் பட்டுவிட்டது..!

ஒவ்வொரு சொல்லும் ..
பிடித்திருந்தால்..
உங்கள் நேசம் நிஜம்...!

சின்ன சின்ன தீண்டல்களும்
ஸ்பரிசங்களும் பிடித்திருந்தால்...
உங்களை
நம்பிக்கையுடன்
ஒப்படைக்க ஆரம்பிக்கிறீர்கள்..!

கனவுகளும்
நினைவுகளும் பிடித்திருந்தால்...
வாழ்க்கை துவங்கும்..!

பிடித்திருக்கிறது..
என்ற ஒருவார்த்தை..
எல்லாவற்றையும்
உங்கள் வசமாக்கும்..!

Friday, September 27, 2013

நம்பிக்கை துரோகம்...!

நம்பிக்கை துரோகம்...
திட்டமிட்டு செய்வதும்....
தற்செயலாய் செய்வதும்..
விளயாட்டாய் செய்வதும்..
தெரிந்தே செய்வதும்..
சுயலாபத்திர்க்காக செய்வதும்..
என எப்படி ...
நியாயபபடுத்தினாலும்..
மன்னிக்க முடியாத
மாபாவம்...!

இதைவிட..
ஒருமுறை
மன்னிக்கப் பட்ட
நம்பிக்கை துரோகம்..
மறுபடியும் ...
இன்னொருமுறை ...
துளிர் விட்டால்..
அது -
மீளவே முடியாத
மிகபெரிய சாபம்...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட்டிப்பார்க்கிறது ...
என யார் சொன்னாலும்..
எதிர் வாதம் வேண்டாம்..
வேரோடு ..
அழிக்க முயலுங்கள்...
உங்கள் வாழ்க்கை ...
பலம் பெறும்...!

நீங்கள் புரிந்த ..
நம்பிக்கை துரோகத்தை ...
ஒருபோதும்..
நியாயபபடுத்தா தீர்கள்...!
தவிர்த்து விடுங்கள் ..
மனித தன்மை ...
உங்களுக்குள் வாழும்...!

நம்பிக்கை துரோகாதீர்க்கான ..
காரணங்களை ..
வரிசை படுத்த வேண்டாம்...
விட்டு விலகுங்கள்..
உறவுகளில் ....
உண்மை விதைக்கபடும்...!

நம்பிக்கை துரோகத்தினால் ...
நீங்கள் அடைந்த ...
சுய லாபம்..
உங்களுக்குள் ...
கலக்கும் நச்சு..
சுத்தப்படுங்கள்..
சுகமான ..
சுதந்திர திருப்தி ...
உங்களிடம் மட்டுமே...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட் டி பார்த்தால்...
எல்லாமே ..
கேவல பட்டு போகும்...!
தோல்வியும்..
விரக்தியும் ..
நஷ்டமும்...
சோகமும்...
தடையும்..
தொடர்ந்து கொண்டே போகும்..!


நம்பிக்கை துரோகம் 
நம் வாழ்க்கை
அகராதியில்
நீக்கபட வேண்டும்...!

பிறகென்ன ....

நமது வாழ்க்கை
முழுவதும்
நம்மோடு
நம்பிக்கையும்
துணை வரும்.....!...!

Thursday, September 26, 2013

காத்திருப்பது சுகமானதுதான்..!

காத்திருப்பது..
சுகமா....!?சோகமா....?!
உணர்ந்து பாருங்கள்
உறவின் வலி அனுபவிக்கபடும்.!

வாசலில் அசையும்
வெறுமையின் நிழல் கூட
உள்ளத்தை சில்லிட வைக்கும்..!

நொடிகள் கூட
நீண்டு போய்
யுகமாய் மாறும்..!

ஒரு நொடி எதிர்பார்ப்பும்...
மறு நொடி ஏமாற்றமும்..
ஒரே மாதிரி
சுகம் தருவதும்
காத்திருப்பதில்தான்...!

காத்திருக்கும் நேரங்கள்
உண்மையில்
உறவுகளை பலபடுத்தும்
அஸ்திவாரம்..!

காத்திருக்கும் கணங்களில்
உருவான எண்ணங்கள்....
கானல் நீரா..?காற்று குமிழியா...
காத்திருப்பத்தின் காரணம்
நிறைவேறியதும்
கலைந்து போனது எப்படி..?

காத்திருக்கும்போது
உங்கள் துணை சேர்ந்த..
கடிகாரம் கூட
தட்டுத்தடுமாறி நேரம் காட்டும்..
அல்லது கூட்டும்..!

விழிகளின் இமைகள் கூட
இயங்க மறுக்கும்..!

சிரிப்பது கூட
செயல்பட தவிக்கும்...!

வற்றாத கண்ணீர்
துடைக்க துடைக்க
ஊற்றேடுக்கும்...!

விருப்பமானது எல்லாம்
வெறுப்பாய் தவிர்க்கபட்டு
ஒதுக்கபடும்..!

உயிர்  வாழ்வது கூட
பெரும் பாரமாய்
கஷ்டபடுத்தும்...!

எல்லாம் மறந்து போகும்...
மரத்து போகும்...
காத்திருப்பு நிறைவேறியதும்..
மீண்டும் காத்திருக்க
காத்திருக்க
மனம்
எண்ண தொடங்கிவிடும்..!

ஆக...
காத்திருப்பது
சுகமானதுதான்..!

<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="//www.youtube.com/embed/UWv56Q0854Y" width="480"></iframe>

Tuesday, September 24, 2013

புரியாத புதிர் கூட புனிதப்படும்..


புரிந்து கொள்ளுதல்...
புதிராக மாறினால்...
நிம்மதி கூட
நிலை இல்லாமல் போகும்...!

புரிந்து கொள்வதில்
சந்தேகமும்
துணை சேர்ந்தால்...
சந்தோசம் கூட
சிரமமாய்..உணரப்படும்..!

புரிந்து கொள்வது என்பது எது..
என்ன..என்பதை
அடிப்படையில்..
முதலிலிருந்து
நாம் புரிந்து கொள்ள
முயற்சி எடுப்போம்..!

வாழ்க்கை என்ன
என்று புரிந்து கொள்வதற்கு முன்...
வார்த்தைகள் எப்படி
என்ன
புரிந்து கொள்வோம்..!

இன்று சுகம்
என சொன்னால்..
நேற்றும்..
நாளையும் சோகம்
என புரிந்து கொள்ளுதல் கூடாது..!

இரவின் நிலவு
நெஞ்சை அள்ளும் என்றால்...
சூரியனின் பகல்
நமக்கு வெறுப்பு என்ற
புரிதல் அல்ல...!

தனிமையில்..
உன் நினைவுகள் மட்டுமே
என்னுள் சுவாசம் தந்து
உயிரை மீட்கிறது என்றால்...
நிஜத்தில்
நீ வெண்டாம் என்ற புரிதல்..
கொடுமையானது..!

புரிந்து கொள்வதில் தவறு...
உங்களிடம் தான்
என புரிந்து கொள்ளுங்கள்..!

உங்களை
நீங்கள் உணருவீர்கள்...!

புரியாத புதிர்
கூட
புனிதப்படும்..!
 
http://www.raaga.com/play/?id=308729 
 
 

Saturday, September 21, 2013

ஆரம்பம்...! அபூர்வ அதிசயம்..!

ஆரம்பம்...!
எப்படி என யாராலும் 
கண்டுபிடிக்க முடியாத 
அபூர்வ அதிசயம்..!

வாழ்க்கையின் ஆரம்பம்..
எது என
அறிந்து கொள்ளமுடியுமா..?

முதலில் உச்சரித்த
வார்த்தையின் ஆரம்பம்
எப்போது என
கனிக்க முடியுமா..?

சிரிப்பின் ஆரம்பம்
எப்போது எதனால்
என உறுதி படுத்த முடியுமா..?

உங்களை நீங்கள்
உணர ஆரம்பித்தது
எந்த தருணத்தில்..
சொல்லுங்கள்...!

உங்கள் பொறுப்புகளின் ஆரம்பம்...
உங்கள் தேடல்களின் ஆரம்பம்...
உங்கள் வெற்றியின் ஆரம்பம்..
உங்கள் தடுமாற்றங்களின் ஆரம்பம்...!
உங்கள் ஏக்கம் ஆரம்பித்தது எதை பார்த்து...?
உங்கள் கோபம் ஆரம்பித்தது ஏன்...?

இப்படி ஆரம்பங்களை அடுக்கலாம்..!
அடுக்கி கொண்டே போகலாம்..!

ஆனால்..
இதெல்லாம் முடிவுகள் என்ற
முற்றுப்புள்ளியுடன் முடியும்!

ஆனால்
முடிவே இல்லாத ஆரம்பம்
என உங்கள் வாழ்க்கையோடு
வந்த விசயம் எது என
நினைவுகளை புரட்டி பார்த்து
சொல்ல முடியுமா...!

ஆம்
அது காதலின் ஆரம்பம்...!

எப்போது..
எதனால்..
ஏன்..
எப்படி..
எங்கே..
என காதல் ஆரம்பி க்க தொடங்கிய
ஒவ்வொரு நொடியும்
நீங்காத கல்வெட்டு காளாய்
பதிந்து போகும்..!

ஆனால்
முற்று பெறாத
முடிவே தொடரும்..!

காதல் மட்டுமே
முடிவே இல்லாத
ஆரம்பம்...!
-B M ஷபி

Thursday, September 5, 2013

கருத்து வேறுபாடு.... ஆரம்ப புள்ளியிலேயே.. முடக்கபடவேண்டும்...!



கருத்து வேறுபாடு....
ஆரம்ப புள்ளியிலேயே..
முடக்கபடவேண்டும்...!
தொடர்ந்தால்
உறவுகளில்
முற்று புள்ளி நிரந்தரமாகிவிடும்...!

வழக்கம் போல்
இதிலும் சம்பந்த பட்டவர்கள்..
சந்தித்து..
வார்த்தைகளோடும்..விழிகளோடும்..
உளப் பூர்வமாக...
உணர்வுகளை விட்டு கொடுத்து...
ஓரிரு வார்த்தைகள் பரிமாறி கொண்டாலே போதும்...
உறவும் பலப்படும்..
உள்ளமும் வசப்படும்...!

புரிந்து கொள்வதிலும்..
புரிய வைப்பதிலும்...
புரிந்து கொண்டே ஆக வேண்டும்
என்ற கட்டாயததிலும்..
ஏற்படும் தடுமாற்றமே..
கருத்து வேறுப்பாட்டின் துவக்கம்...!

கருத்து வேறுபாடு
கவனிக்க படவேண்டிய விஷயம்..என்றாலும் ..
அலட்சிய படுத்தினால்...
அன்பின் அழிவு ஆரம்பிக்க தொடங்கும்...!

மனம் விட்டு பேசுவோம்..
விட்டு கொடுத்து விளக்குவோம்..!
ஏற்று கொண்டு..
நியாய படுத்து வோம்...!

கருத்துகளில் வேறுபட்டாலும்..
வாழ்க்கையில் ஒன்று படு வோம்...!!!

உணர்வோம்...!
உயர்வோம்.....!!!!
-B M ஷபி-சேலம்

தோல்வி கூட நமக்கு தோள் கொடுக்கும்

Add caption
எதிலும்..எங்கும்..
எப்போதும்...தோல்விதான்...
என
ஏக்கம் கலந்த பெருமூச்சு விடவேண்டாம்..!

தோல்வியின் காரணம் கண்டுபிடியுங்கள்...!

அதை தவிர்த்து பாருங்கள்...!

வெற்றி நிச்சயம்
என
உறுதி தரவில்லை...!

தோல்வி கூட
நமக்கு
தோள் கொடுக்கும்
நம்பிக்கை தரும்..!

-B M ஷபி