Wednesday, September 28, 2011

நமது எண்ணங்கள் ... பொய்த்து போகும் போது ...!

சில சமயம் ...
நமது எண்ணங்கள் ...
பொய்த்து போகும் போது ...
நாம் விதியை ....
குற்றம் சொல்கிறோம்...!

உங்கள் ...
எண்ணம் போல் ...
உங்களால் செயல் பட முடிகிறதா...?

நிச்சயமாக முடியாது...!

பிறகெப்படி...
உங்கள் எண்ணங்கள் படி ..
மற்றவர்களால் மாற முடியும்...!

நீங்கள் ..
எண்ணுவதெல்லாம் ..
ஈடேற வேண்டும் ..
என்ற கட்டாயம் கிடையாது...!

உங்கள் ..
எண்ணங்கள் படியே ..
எல்லாமே நடக்க வேண்டும் ...
என்ற நிர்பந்தம் கிடையாது...!

சூழ்நிலைகள்..!
அவரவர்களின் மனநிலைகள்...!
சுய தேவைகளின் அவசியங்கள்...!
எதிர்பார்ப்புக்ளின் ஏமாற்றங்கள்....!
நிறைவேறா நிஜங்களின் நிர்பந்தங்கள்...!
அங்கீகாரம் இல்லா உழைப்புகளின் வெளிப்பாடு...!
இப்படி பல உண்மைகள் ..!
உங்கள் ...
எண்ணங்களின் தோல்விக்கு ...
காரணமாய் அணிவகுக்கும்....!

நிஜத்தை...
நினைவு படுத்தி கொள்ளுங்கள்...!

உங்கள் எண்ணங்கள் சரி...!
ஆனால்....
அது நிறைவேற கட்டாயம் ஏதும் இல்லை...!

அதற்காக...
உங்கள் எண்ணங்களுக்கு ...
தடையும் போட வேண்டாம்...!

எண்ணங்களின் ...
முடிவை ...
ஏற்கும் மனநிலையை ...
நீங்கள் ...
வளர்த்து பாருங்கள்....!

வாழ்வு வளம் பெரும்....!

Saturday, September 17, 2011

நம்பிக்கைகள் ...!

நம்பிக்கைகள் ...
பொய்த்து போகும் போது ....
உங்கள் நிலை என்ன...?

உங்களை உணர்ந்து கொள்கிறீர்களா..?

உடைந்து போகிறீர்களா..?

அல்லது -

கடந்து சென்று விடுகிறீர்களா..?

நம்பிக்கை என்பது ..
இயற்கையாய் உதிப்பது அல்ல..!
நம்மால் ..
உருவாக்கப் படுவதுதான்...!

இயலாது ..
என மனதில்..
தோன்றும் போதெல்லாம்..
.நம்பிக்கைகள்..
தகர்ந்து போகின்றன...!

முடியும் என ..
முடிவெடுக்கும் போது ....
நம்பிக்கைகள் ...
முழு வெற்றி தருகின்றன...!

நம்பிக்கைகள் ...
நடக்காது போனால்...
தலைவிதியை...
நொந்து நம்புகிறோம்...!

நிறைவான சூழ்நிலையில் ..
உங்கள்...
திருப்திகரமான வெற்றி....
உங்கள் மேல் ...
பிறர் கொண்ட நம்பிக்கையை ..
உங்களுக்கே அறிமுகம் செய்கின்றன...!

எது நம்பிக்கை..?
இப்போது புரிந்திருக்கும்...!

உங்கள் ...
எண்ணம்..எதிர்பார்பு..செயல்..
இந்த கலவையின் பரிணாமம்..
நம்பிக்கை..!

நீங்கள் ..
உருவாக்கிய படைப்பு ...
நம்பிக்கை..!

உங்களால் நம்பிக்கை ...
உருவாகும் போதே ..
அதில் ..
வெற்றி.. தோல்வியை படைப்பதும் நீங்கள்தான்..!

உங்களை நீங்கள் ...
நம்பினால்..
உங்கள் நம்பிக்கைகள் ...
அடுத்த பட்சம் தான்...!

Friday, September 16, 2011

பழி போடுபவரா நீங்கள்...!

உங்கள் குறைகளையும்,..
பிழைகளையும்,..
தவறுகளையும்,...
தோல்விகளையும்...ஏற்றுக்கொள்ளாமல்...
பிறர் மீது ..
பழி போடுபவரா நீங்கள்...!

ஆம் என்றாலும்..
இல்லை என்றாலும்...
தொடருங்கள்...!

உங்கள் மனசாட்சி ...
உங்களை மதிக்கிறதா..?

நிம்மதியாக தூங்கியது ..
எப்போது என ...
நினைவில் உள்ளதா...?

எதையாவது இழக்கப்போகும் ..
உணர்வுகள் ..
உங்களை சூழ்ந்துள்ளதா...?

யாரை கண்டாலும் ..
பொறாமை பட ..
தூண்டுகிறதா..?

எதிர்மறையாக பேசுகிறீர்களா..?

இதெல்லாம்..
உங்கள் ..
சார்வாதிகார போக்கின் ...
அறிகுறிகள் அல்ல...!

உங்கள் ...
சரிவின் அடிப்படை...!

கொஞ்சம் திருந்தி..
பிறரை ...
பழி சொல்வதையும்,...
குற்றப் படுத்துவதையும்,,
குறை கூறுவதையும்...
விட்டொழித்து...
மற்றவர்களை ..
முகத்திற்கு நேராக மட்டுமல்லாமல் ..
மனதோடும் மதியுங்கள்,,,!

மனிதனாய் ...
உணரபபடுவீர்கள்...
மற்றவர்களால் அல்ல..

உங்களாலேயே...!

Thursday, September 15, 2011

எந்தவித பாதிப்பும் கிடையாது ...!

உங்களால் ...
யாருக்கும் ...
எந்தவித பாதிப்பும் கிடையாது ...
என உறுதி தரமுடியுமா...?

தரமுடியும் என்றால் ..
உங்களின் ...
வாழ்க்கையின் அர்த்தம் ....
யாராலும் ...
ஏன்...
உங்களால் கூட உணர முடியாதது...!

மனிதன் என்றால் ...
எப்போதும்..
எதற்காக என வரைமுறை படுத்தாமல் ....
பாதிக்க வைக்க பட வேண்டும்...!

அது ...
நியாயம்.... அநியாயம்...
என ...
பாகுபடும் இல்லாமலிருக்க வேண்டும்...!
சரி..தவறு..
என்ற ...
அலசாலும் கூடாது...!

நீங்கள் வெளிப்படுத்திய ...
சுகமான பாதிப்புகள்...
உங்களின் ...
வெற்றி சரித்திரத்தை ..
வருங்காலத்தில் பதிக்க தொடங்கும்...!

உங்களின் ..
கோபம் வெறுப்பு...
துரோகம்..பழிவாங்கும் இயல்பு..
பொறாமையின் வெளிப்பாடு  சார்ந்த பாதிப்புகள்....
உங்களை ...
அடியோடு ...
அழிக்க தொடங்கி விடும்...!

உங்களால் ...
தோற்கடிக்க படுவது கூட  ....
பெருமை படுத்த படவேண்டும்..!

முயலுங்கள்....!  

முடியாதது ...
ஒன்றுமே இல்லை ...

உங்கள் வாழ்வில்..!

Wednesday, September 14, 2011

காரணம்....!

காரணம்....!

இந்த வார்த்தை
இப்போதெல்லாம்
எரிச்சலை
உற்பத்தி செய்து விடுகிறது...!

எங்கு..எதற்கு..
ஏன்...எப்படி..
எதனால்...என புரியாமலே
காரணம்
நம்முள் திணிக்கபபடும்போது...
எரிச்சலோடு...
நமது நம்பிக்கைகள் தகர்க்கபபடுகின்றன...!

காரணம் சொல்வது
உங்களின் கற்பனை திறன் ...
என் பெருமை வேண்டாம்.....!
உங்கள் அவமானத்தின் தொடக்கம்...!
உங்கள் தோற்றலின் உச்சக்கட்டம்...!
உங்கள் மனிதத்தின் மாற்றம்...!

இனி காரணம் ..
தேடி அலைவதை தவிர்த்து ..
உண்மையை உரைப்போம்..!
ஏற்றுக்கொள்வோம்...!
எப்போதும்...!.....

Friday, June 24, 2011

போட்டியை .. உணர்த்து .... உயர்வோம்...!

போட்டிகள் நிறைந்த வாழ்க்கை
யாராலும்
விரும்ப படுவதே இல்லை...!

அதே சமயம்
போட்டிகள் இல்லை என்றால்..
வாழ்வதில் அர்த்தமே இல்லை...!

நம்மை நாமே..
உணர்ந்து கொள்வது ..
வெற்றி அடையும் போதுதான்...!

நம்மை நாமே ...
நொந்து கொள்வது ..
தோல்விகளை ..
தொடர்ந்து சந்திக்க ...
தொடங்கும் போதுதான்..!

இந்த இரண்டுக்குமே ..
முதல் காரணம் ..
போட்டிகள் தான்..!

போட்டிகளில் வென்றவர்களை விட ...
தோற்றவர்கள் தான் ...
அதிகம் தெரிந்தும் கொள்கிறார்கள்..
அதே சமயம் ...
புரிந்தும் கொள்கிறார்கள்...!

தோற்பது தெரிந்தே ...
துணிவாய் ..
போட்டியை சந்தித்தவன் ..
ஒருபோதும் ..
வாழ்க்கையில் ..
தோற்றதே இல்லை..
மனம் உடைந்ததும் இல்லை...!

வெற்றி எளிது ...
என தெரிந்தும் புரிந்தும்..
போட்டியை ...
தவிர்க்க முயலு பவன்..
எல்லாம் இருந்தும் ..
எதையும் ..
அனுபவிக்காமல் ..
தவிக்க தொடங்குகிறான்..!
வெற்றிகளை கூட ..
தோல்வியாய் அனுபவிக்கிறான்...!

போட்டி என்றால் ..
வெற்றி
தோல்வி மட்டுமே என்ற ..
அர்த்தம் ..
அபத்தமானது..
ஆபத்துமானது...!

போட்டி ...
நம்மை நமக்கே ...
அறிமுகபபடுத்தும் ...
இரண்டாம் தாய்மை..!

போட்டி ...
சுக துக்கங்களில் ..
தோள் கொடுக்கும் ..
துணை சேர்க்கும் துணைவி...!

போட்டி ..
நம்மை நாமே ...
தட்டி கொள்ளவும்..
மீறும்போது ..
தட்டி வைக்கவும் வரும் ..
தோழமை...!

மொத்தத்தில் ..
போட்டி ..
பொறாமைக்காக இல்லை ..
பெருமைக்காக...!

போட்டியை ..
உணர்த்து ....
உயர்வோம்...!

Saturday, June 18, 2011

உங்களால் மட்டுமே ..... இல்லை..!

தவிர்பது.,
நிராகரிப்பது..,
தாமதபடுத்துவது..,
ஒதுக்குவது...,
உதாசினபடுத்துவது..,
அவமான படுத்துவது...,
அங்கீகாரம் தர மறுப்பது..,
இப்படி இதெல்லாம்..
வேறு வேறாக அர்த்தம் தந்தாலும்...
பலன் ஒன்றுதான்..
அது -
மனம் உடைய செய்வதுதான்...!

உங்கள் சுய லாபங்கள்..
உங்களின் சுகம்...
சரிதான்..!
அது எத்தனை பேர்களுக்கு..
சோகம்..
சுமை..
சோதனை..
என எண்ணி பார்த்தது உண்டா..?

உங்களின் ..
இன்றய வெற்றி ..
ஈடு இணை இல்லாதது..
உண்மைதான்..!

ஆனால்-

உங்களால் ..
வலுக்கட்டாயமாக தோற்கடிக்க பட்டவர்களின்...
நேற்றைய...
இன்றய...
நாளைய நிலை ...?

உங்களின்உயர்வு ..
உங்களால் ..
பெருமை படுத்த படலாம்...!

அதற்கு தோள் கொடுத்தவர்கள் ..
இன்னமும் ..
கீழிருந்து ..
உங்களை ..
உயர்த்தி கொண்டே உள்ளார்கள்...!

அவர்களின்
சுகமான சுமைகளின் ...
பிரதிபலிப்பு ..
நீங்கள் ..
சொந்தம் கொண்டாடும் ..
சந்தோசங்களின் ...
சோகமான சுயரூபம்...!

உங்கள் ..
வளர்ச்சி ..
உங்களால் மட்டுமே ..
விதைக்க பட்டது அல்ல...!
முகம் தெரியாத ..
மனம் மட்டுமே ..
வெளிக்காட்டிய ...
பலரால் வளர்க்க படுவது...!

எதையும்..
யாரையும்..
தவிர்பதற்கு முன் ..
அவர்களோடு ...
வாழ்ந்த .
கடந்த காலத்தை ..
உணர்ந்து பாருங்கள் ..!
யாரையும் உதாசீனம் செய்ய
உங்கள் ..
மனசாட்சி இடம் தராது..!

நாளைய வாழ்க்கை
உறுதி தா முடியாதது..!

நேற்றைய வாழ்க்கை
நிஜத்தில் நிலைக்காதது..!

இன்றய வாழ்க்கை..
..........
...........

உங்களால் மட்டுமே ..... இல்லை..!

Sunday, June 12, 2011

நட்பின் .... இலக்கணம்...!

பல சமயம் ..
நண்பர்களை விட ...
எதிரிகள் ...
நம்மை ..
ஏற்று கொள்ளும் சம்பவம்....
உங்களுக்கும் நடந்திருக்கலாம்...!

உண்மையான நட்பு...
ஊமையாகத்தான் இருக்கும் ...
நம்மை ..
மனதளவில் ஊனமாக்காது...!

உங்கள் ..
முகத்தொடும் ..
முதுகொடும் ..
யார் நிஜமாய் ..
செயல்படுகிறார்கள் ..
என உணருங்கள்...
உண்மையான ...
நட்பின் இலக்கணம் ..
உங்களுக்கு ..
புரிய தொடங்கிவிடும்...!

உங்கள் வளர்ச்சி ...
உங்கள் ..
நட்பு வட்டாரத்தால்..
பெருமை படுத்த பட்டால்..
நம்பிக்கையான நண்பர்கள் ...
உங்களிடம் அதிகம் ...
என நம்பலாம்...!

தனிமையில் ...
உங்களை ..
உங்கள் ஆற்றலை...
விண்ணை தொடுமளவுக்கு...
உயர்த்தி..
சபையில் ...
உங்களை ..
மட்டம் தட்ட ...
மாபெரும் கூட்டத்தை ...
மறைமுகமாக உருவாக்கும்...
உங்கள் ..
நட்பை ...
இனம் கண்டு...
களை பிடுங்கி ...
உங்கள் ..
உணர்வுகளில் ...
வெற்றி உரமிட்டு கொள்ளுங்கள்...!

உங்கள் ...
உண்மை நண்பன்...
உங்கள் ...
தவறை திருத்த ..
ஆலோசனை வழிகள் ...
பல சொல்லி ..
உங்களை ..
உயர்வுக்கு வழி நடத்துவான்...!

ஒரு போதும்..
பிறரை தூண்டி விட்டு ...
பழி பேச துணை தர மாட்டான்...!


மறைந்திருந்து ..
உங்களை புகழ்வது போல் ...
இகழ்ந்து தள்ளும்...
நண்பர்களை விட...
நேராக நின்று ..
உங்களை ...
எதிர்க்கும் பகைவனை கூட ...
நட்பாய் மாற்றிக்கொள்ளுங்கள்...!

நட்பின் ....
இலக்கணம் சரிபடும்..!

Monday, May 30, 2011

மன காயங்கள்... மாறாத வடுக்கள்..!

மன காயங்கள்...
மறைக்க..
மறக்க... முடியாத ..
மாறாத வடுக்கள்..!

எதிர்பார்க்கும் போது ...
ஏற்படுவது சிலசமயம்..!

எதிர்பாராமல் ...
உண்டாக்கபபடுவது..
பல சமயம்...!

முன் பின் தெரியாதவர்களின் உதாசீனம்..
ஒரு போதும் ..
உணரபபடுவதும் இல்லை..!

காயங்களை ..
உருவாக்குவதும் இல்லை.!

ஆனால்..

உயிரானவர்களின்....
உதட்டு சுளிப்பு கூட...
உலகமே இருள செய்து விடும்..
கூடவே ....
மனதை காயபபடுத்தும் ..
என்பதை விட ...
காயததையே மனதக்கி விடும்..!

யாரையும் ..
முன்னே புகழ்ந்து...
அவர்களின் பின்னால் ...
அவர்களின் ..
சின்ன...சின்ன குறைகளை மட்டுமே
உயர்த்தி அலசாதீர்கள்...!

காயம் ..
அவர்களின் மனதுக்கு தான் என்றாலும்...
உங்கள் எண்ணங்களில்
பொறாமை ...
புற்று நோயாய் பரவி இருப்பதை
உங்களால் உணரவே முடியாது...!

நம்பிக்கைகளில்
சந்தேகம் வேண்டாம்..
நரக வாழ்க்கை
நாளெல்லாம் தொடரும்...!

பிறரின் வெற்றியை
மனதால் கொண்டாடுங்கள்...

வெறித்தானமாக
அவர்களின் வெற்றியின் காரணங்கள்
என
உங்கள் பொறாமைகளை
கட்டவிழ்த்து விடாதீர்கள்...!

உங்கள் சொல் ...
செயல்  ...
நடவடிக்கை ...
அணுகுமுறை ....
என ...
எதிலும் ..
எப்போதும் .....
யாருடைய மனதையும் ....
காயப்படுத்திவிடாதீர்கள்.. !

மனக்காயங்கள் ...
ஒரு போதும் ..
மறைவதுமில்லை.....
குறைவதும் இல்லை..!

ஆறுவதுமில்லை..!

அதனால் ஏற்படும்
உங்கள் பாவங்கள்
மன்னிக்க படுவதுமில்லை..!

Thursday, May 26, 2011

உணர்வுகளும் பலப்படும்..!

உணர்வுகளை மதிப்பது ..
என்பது ...
உங்களை மட்டுமே ..
சார்ந்தது அல்ல..!

உங்கள் முன் ..
உள்ளவர்களும் ..
மனதால் ஒப்புக்கோள்வதே..!

இதை..
நீங்கள் உணர்ந்தால்...
உயர்ந்தவர்கள் வரிசையில் ..
உங்களுக்கென்றே ..
ஓர் நிரந்தர இடம் கிடைத்துவிடும்..!

முதலில் ..
உங்கள் உணர்வுகள்..
மட்டுமே ..
உண்மை என்றே ...
சுய மதிப்பீடு விட்டு வெளியெறுங்கள்...!

பிறரின் உணர்வுகளுக்கு ...
உங்கள் ..
அங்கீகாரம் வேண்டாம்.!
உங்கள் ..
ஆதரவும் வேண்டாம்..!
உங்கள் ..
பாச்சாதாபமும் வேண்டாம்..!
உங்கள் ..
கனிவு..பரிவு...பாசம்...ஆறுதல்..
இப்படி ...
எதுவுமே வேண்டாம்..!

அவரவர் உணர்வுகளை ..
அவரவர்கள் ..
உணர்ந்து கொள்ள ...
நீங்கள் ..
மவுனம் காப்பதே மகத்தானது...!

மொத்தத்தில் ..
அவரவர்கள் ....
உணர்வுகளை ...
அவரவர்களே ...
அனுபவித்து கொள்ளட்டும்...!

இதற்கு .
உங்கள் துணை இருந்தாலே போதும்...
வேறெதுவும்..
எப்போதும் அவசியமே இல்லை..!

பிறர் உணர்வுகளை...
அலசுவது..
குறைப்பட்டு கொள்வது..
சந்தேகபபடுவது....
பொய் புகழ்ச்சி..தருவது....
புறம் பேசுவது...
உதாசனம் செய்வது...
இப்படி ...
வரிசை படுத்திய
எதையும் தவிர்ப்பது...

பிறர் உணர்வுகள் ...
காயபபடுவதை தடுப்பது ...
மட்டும் இல்லாமல்..

உங்கள்
உணர்வுகளும் பலப்படும்..!

உணர்வுகளை
உண்மையாய்
உணர்ந்து
உயர்வோம்...!

Friday, May 13, 2011

மாற்றம்...!

இயற்கை...
உருவாக்கிய செயற்கை..
மாற்றம்...!

மாற்றம் மட்டுமே ..
இரு தோற்றம் கொண்டது...
சுகமும்  சோகமும்...!

வெற்றியிலிருந்து தோல்விக்கு ...
மாற்ற பட்டவர்கள்...
துவண்டு போவதும்..
துடித்து புலம்புவதும்..
வரலாற்றை..
வகை வகையாய் ..
வாசிபபவர்களுக்கும்..
வரலாறு படைத்தவர்களுக்கும் தெரியும்...!

தோல்வியிலிருந்து வெற்றிக்கு பயண படுபவர்கள்...
தன் பெருமையை ..
கட்டாய பதிவு செய்வதும்...
முழு பொறுப்புக்கு...
தன்னையே நிலை நிறுத்தி கொள்வதும்..
நிஜ வாழ்க்கை பயணத்தின் ...
நிதர்சன உண்மைகள்..!

தோல்வி தண்டனை அல்ல.. !

சீர் படுத்தி ...
சரியாக மட்டுமல்ல ...
முறையாக செயல் பட ...
யாருக்கும் கிடைக்காத..
அனுபவத்தின் வாய்ப்பு...!

உங்கள் கண் முன்னே
புலப்படும் 
பிரகாசமான வெற்றியின் தொடக்கம்...!

வெற்றி தொடக்கம் அல்ல ...!

தோல்விகளின்அனுபவங்களால் ..
தீர்மானிக்கப்பட்ட முடிவு..!

மறுமுறை தோற்க கூடாது
என்பதின் எச்சரிக்கையும் கூட...!

வெற்றியிலிருந்து..தோல்வி...!
தோல்வியிலிருந்து..வெற்றி... !

வாழ்க்கை பயணத்தின்
வழிகாட்டும் மைல் கற்கள்..!

நம்மை தடுத்து நிற்கும்
தடை கற்கள் அல்ல..!

வெற்றி... தோல்வி ....முடிவு அல்ல...!
மாற்றம்  ...
என ..
உறுதி படுத்தி பாருங்கள்...!

மாற்றங்கள் .....
உங்களின் பாதையை
திருப்திகரமான வழியில்
மாற்றி விடும்...!

Wednesday, May 11, 2011

விமர்சனங்கள்..

விமர்சனங்கள்..
நம்முள்
எப்படி பிரதிபலிக்கின்றன ..
என்பதை பொறுத்தே ...
நம்மை நாமே ...
அடையாளம் கண்டு கொள்ள முடியும்...!

விமர்சனம்
நம்மை பட்டை தீட்டி கொள்ளவும்..
மெருக்கெற்றி கொள்ளவும்
என நினைத்தால்..
எப்படி பட்ட விமர்சனங்களும்
நம்முள்
எந்த ஒரு பாதிப்பையும் தராது...!

நமக்கு வந்த விமர்சனம்
நம்மால்
தரக்குறைவாக ..
இழிவாக விமர்சனம் செய்ய பட்டால்..
நீங்கள்
நிச்சயம் குற்றவாளி என்பது
உங்களுக்கு மட்டும்
கட்டாயம் புரிந்து விடும்..!

உங்கள் மனசாட்சி
உங்களை மன்னிக்காது..!

தலைக்கனம்..
கர்வம் நிறைந்தவர்களால் மட்டும் 
இதை
ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது..!

விமர்சிப்பது என்பது ..
அவர்களின் சுதந்திரம்..
ஏற்றுக்கொள்வதும் ....
ஒதுக்கி தள்ளுவதும்..
உங்கள் விருப்பம்..

ஆனால்-

ஒரு போதும் ..
விமர்சனங்களை ...
விமர்சனம் செய்து ...
உங்கள் ...
குறுகிய மனதை ...
உலகத்திற்கு அடையாளம்..காட்டி விடாதீர்கள்...!

விமர்சனங்களை ...
தரக்குறைவாக ...
விமரீசித்தவர்கள் ...
வாழ்ந்தததை  விட ...
வீழ்ந்த வரலாறுகள் அதிகம்...!

விமர்சனங்களை ...
தலை வணங்கி ஏற்று ....
தலைவன் ஆவோம்..!

Friday, May 6, 2011

களை ... எடுத்து கொள்ளுங்கள்..!

தலைகனமும்..
திமிரும்..
உதாசினமும்..
அலட்சியுமும்...
உழைத்து வெற்றி பெற்றவர்களிடம் இருப்பதில்லை..!

பணம்..புகழுக்குகாக...
அடிக்கடி நிலைமாறி..
செயல் மாறி...
நேர்மையாய் .....
வாழ்வது போல்
நடிப்பவர்களிடம் தான் அதிகமாய் இருக்கும்...!

அவர்களை ..
இனம் கண்டு ..
களை ...
எடுத்து கொள்ளுங்கள்..!

உங்கள் மனம் பத்திரப்படட்டும்...!

உருவாக்கியவர்கள்..
தோள் தந்து நடை பழக்கியவர்கள்..
என ...
யார் யார் எல்லாம்...
தன் வளர்ச்சிக்கு..உறுதுணை ...
என தொடர்ந்தார்களோ...
அவர்களை..
மட்டம் தட்டுவதை ....
தன் வாழ்க்கையின் ..
குறிக்கொளாக்கி கொள்வார்கள்...!

இவர்களால் சுயமாய் ..
எதையும் செய்ய முடியாது..
எதையாவது சார்ந்து மட்டுமே
செயல் பட முடியும் ..!
அதையே
தன் திறமை
என ...
மூச்சுக்கு முன்னூறு முறை
புலம்பி பெருமை பட்டு கொள்வார்கள்...!

தனியே வந்து செயல்பட்டு ,,,
தன் திறமையை  காட்ட துணிவு அற்றவர்கள்..!

அடிக்கடி தன் நிலையை மாற்றி ,,,,
பசையுள்ள பக்கம் போவதை தான் ,,,,,
லட்சியம் என மறைமுகமாக வெளிப்படுத்திவிடுவார்கள்..!

தன்னை ஏற்றி விட்டவர்களை..
மறவமால் திரும்பி பார்த்து
எச்சில் உமிழமல் வரமாட்டார்கள்....!

நம் வாழ்வொடு
இவர்கள் கட்டாயம் வேண்டும்...!

அப்போதுதான்  ...
உங்கள் வாழ்க்கையில்  ....
உங்கள் உழைப்பால் கிடைக்கும் ....
சின்ன வெற்றி கூட ....
இனிதது கொண்டே இருக்கும்...!

Friday, April 22, 2011

கனவுகள் மெய்ப்பட.. காத்து கொண்டே இருப்போம்...!

காத்திருப்பு....
சுகமானாதா..?
கொடுமையானதா...?

நம் எதிர்பார்ப்பு பலித்தால்...
...சுகம்..!
இல்லையென்றால்...
கொடுமை..!
இது
காலம் காலமாய் கடைப்பிடிக்க படும்...
கட்டாயம்...!

பிரசவ காத்திருப்புகளில்...
வலி கூட..வரமாகும்..!

திரையரங்கு காத்திருப்புகளில்....
நமக்கு முன்னே...
நிற்கும் அப்பாவி கூட..
பயங்கர தீவிரவாதி யாக..
உருமாறி போவான்...!

ரயில்நிலைய காத்திருப்புகளில்..
விளக்கை சுற்றும் விட்டில் பூச்சி கூட..
நம்மை சொந்தம் கொண்டாடும்...!

பொருளாதார காத்திருப்புகள்..
பிச்சைக்காரனின் யாசிப்பை கூட
நியாய படுத்த வலியுறுத்தும்..!

பெற்றவர்களுக்கான ..
பள்ளி குழந்தைகளின் காத்திருப்பு...
கண்ணீர் விழிகளில் ..
பாசத்தை மட்டும் சேமித்து வைக்கும்...!

முதியோர் இல்லங்களில்..
நொடிக்கு நூறுமுறை தெரியும்
ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு....
சுருக்கப்பட்ட..
இருண்ட விழிகளில்...
பதிந்து போகும் பிம்பங்களில்..
வம்சங்கள்...
வழி மாறிய வரலாறு...
மட்டுமே நெடு தொடராய் தெரியும்..!

காதலில் மட்டுமே
காத்திருப்பு...பந்தம்..சொந்தம்..
என எல்லாவற்றையும்..
பலபடுத்தி வைக்கும்...!

தேர்வு (தேர்தல்)முடிவுக்கான காத்திருப்பு...
சித்திரவதையின்
உச்சக் கட்டம்..என்றாலும்..
வெற்றிக்கு...மட்டுமல்ல..
தோல்விக்கு கூட வாழ்த்துகளை...
பெற வைக்கும்...!

நம்பிக்கைகளை..
பல பரிணாமங்களில் நட்டு வைக்கும்...!

காத்திருப்போம்...

கனவுகள் மெய்ப்பட..
காத்து கொண்டே இருப்போம்...!

Tuesday, April 19, 2011

இனம் கண்டுகொள்ளுங்கள்...!

நம்மோடு சுற்றி திரியும்
துரோகிககளை
எப்படி தெரிந்து கொள்வது
என்பதைவிட..
எப்படி எதிர்க்கொள்வது என்பதுதான்
மிக முக்கியம்...!

வளரும் வரை
நம்மை வணங்குவது போல்
வேஷம் கட்டி..
கொஞ்சம் தலை நிமிர தொடங்கியவுடன்..
கால்களால் கூட
வணக்கம் வைப்பார்கள்...!

உங்களால்
ஒரு காரியம் ஆகும் வரை..
உங்களை பின் தொடர்வதையே
பெரும் பாக்கியம் என
புலம்பி தள்ளுவார்கள்...!
காரியம் நிறைவேறிய
அடுத்த நொடி வரை காத்திருக்காமல்..
பின்னால் இருந்து
முதுகில் குத்துவதையே..
குறிக்கோள் என தெளிவுபடுத்துவார்கள்...!

உங்களை புகழ்வது 
யாராக இருந்தாலும் 
அவர்களின் வம்சங்களையே
இழிவு படுத்த தொடங்கி விடுவார்கள்...!

உங்கள் பெருமைகளை முடிந்தளவு..
முடக்கி வைக்க 
முழு மூச்சாக 
முயன்று கொண்டே இருப்பார்கள்...!

உங்களை பாராட்ட
ஒரு போதும் நினைக்காமல்..
சின்ன தவறுகளை கூட..
ஊரெல்லாம் செய்தியாக்கி..
குரூரமான..சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்...!

இனியாவது
இவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்...!

உங்கள்
மன்னிக்கும் தன்மையையும்..
மதிக்கும் தன்மையையும்..
பலப் படுத்தி பாருங்கள்....!

உங்கள் துரோகிககளின்...
செயல்கள்....
உங்களை
ஒரு அணுவும் பாதிக்காது...!

Tuesday, April 12, 2011

சரித்திரம் படைப்போம்...!

உண்மைகள்  ஊனமாக்கப்படும்போது ....
ஊமையாகி போகிறோம்...!

நிஜம் எது..?
பொய் எது...?
புரியாத பயணத்தில்...
புதிராகி கரையும்  சிநேகிதங்கள்...!

நம்பிக்கைகள் சிதைக்கபபடும்போது....
உணர்வுகளும் சிதைந்து போகின்றன....!

எதை நோக்கி பயணம்
என்ற நிலை மாறி..
எது பயணம் என
தடுமாறி 
தடம் மாறுகிறோம்..!

எதிர்பார்ப்புகள் நிராகரிக்கபபடும்போது...
ஏமாறுவது  மட்டுமல்ல...
எல்லாமே மாற தொடங்குகிறது...!

தனி மனித ஒழுக்கத்தின் இலக்கண மீறல் கூட...
ஊடகங்கள் வழியாக...
அரிசுவடி யாக ..
போதிக்கப்படுகிறது...!

தேவை எது என்றே..
தெரியாத தேடலில்...
தொலைந்து போகும்...
மனம் கொல்லும் மனிதன்...!

சுயம் மட்டுமே சுகம்...
என சுருங்கிபோகும்...
சாபம்  ஈட்டும் வாழ்க்கை...!

பொய்யான கனவு...!
பொறாமை நிறைந்த..வெளிப்பாடு...!
வீண் பெருமையால்...வீழும்....மனிதாபிமானம்....!
மரத்துப் போகும்..மனசாட்சி....!
சந்தோசம் கூட செயற்க்கையாய்...!
சோகம் கூட வேசமாய்....!

இப்படி தொடரும் நாம்....

இந்த நொடி முதல்
சபதம் எடுப்போம்...!
சரித்திரம்  படைப்போம்...!

மனிதனாய் மாறி 
புனிதப்படுவோம்...!

(வாக்களிப்போம்... !
மனிதனாய் மட்டுமல்ல...
இந்தியன் எனவும்
பெருமை கொள்வோம்...!)

Saturday, March 26, 2011

சந்தேகம் எப்போதும் நிரந்தரமாவதில்லை..!

புரிந்து கொள்வதில் ஏற்படும் ..
தடுமாற்றமே..!

சந்தேகம்...!

சந்தேகம் எப்போதும் நிரந்தரமாவதில்லை..!
நொடி பொழுதின் கணிப்பின் தவறுதல்...
தலை எழுத்தையே பிழையாக்கிடும்..!

சில நேரம்
சந்தேகம் நேசத்தை பாசமாய் மற்றிவிடும்....!

பலநேரம் ..
பாசத்தில் விஷம் சேர்த்துவிடும்..!

உங்கள் சந்தேகம் முறையானது என ..
உங்கள் மனசாட்சி ஒப்புக்கொண்டால்...
உடனே மனம் திறந்து
உங்கள் உணர்வுகளை
அவர்களிடமே   வெளிப்படுதுங்கள்..!

உங்கள் அக்கறையையும்... பரிவையையும்..
உணர்வின் மூச்சாக மாற்றி ...
மாறிகொள்வார்கள்...!

ஒருபோதும்...
உங்கள் மனமே ஒப்புக்கொண்டாலும் ..
சந்தேகங்களை அவர்களை விட்டு ..
மற்றவர்களிடம் பகிர்ந்து..
ஆறுதல் தேட முயளாதீர்கள்..!

மரண வாழ்க்கையை அனுபவிக்க
செய்த பாவம்
உங்களை மட்டுமே எப்போதும் சார்ந்து விடும்..!

சந்தேகப்படுவது குற்றம் என்பது எப்படி சரியோ...
அதேபோல்...
சந்தேகபபடும் விசயங்களை..
நிவர்த்தி செய்யாமல் வேண்டுமென்றே..தொடர்வதும்
மாபெரும் குற்றம்..!பாவமும்கூட...!

புரிந்து கொள்ளுதலை..பலப்படுத்தினாலே...போதும்
சந்தேகம் பிறக்க வழியுமில்லை...!வாய்ப்புமில்லை...!

சந்தேகபபடுவதை...குற்றம் சொல்லாமல்..
புரிய வையுங்கள்...புது வாழ்க்கையின் அர்த்தமும் புரியும்...
நம்பிக்கையும் பிறக்கும்...!

புரியாவைத்து..புரிந்து கொண்டாலே போதும்...
சந்தேகம்....
சரி செய்து கொள்ளப்படும்...!

Tuesday, March 22, 2011

இழப்பு இயற்கை அல்ல...!

இழப்பு எல்லோருக்கும் பொதுவானது..!
எதை இழந்தோம் என்பது முக்கியம் என்றாலும்...
ஏன்..எப்படி..எதனால்...
என ஆராய்ச்சியை அவசியமாக்குவதும் முதன்மையானது..!

இயற்கையின் இழப்புகளை அலச வேண்டும்
என்பது அவசியமில்லை...அது நிரந்தரமானது...!

நம் இழப்புகளை ஆழமாய் ஆராய்ந்தால்....
புது புது...சுய மதிப்பீடு வெளிப்படும்...!

மரியாதை இழப்பு...மாபெரும் அவமானம்...!
பழியை பிறரிடம் போடுவதை சற்று மாற்றி
பிறரிடம் உங்கள் மரியாதை மட்டுபட
துணை தந்த உங்கள் செயல்களை
மறுபரிசீலனை செய்து பாருங்கள்...
இழந்த மரியாதை மீண்டும் உங்கள் வசம்...!

பொருளாதார நஷ்டம் மூலம்..இழப்பு..
நடைப்பிணத்தின் நிஜம்...!
ராசி...அதிர்ஷ்டம்..தோசம்..மூடநம்பிக்கை
என காரணம் காட்டி சமாதானம் ஆகாமல்...
உண்மை காரணங்களை தேடி கண்டுபிடித்து
சரி செய்து பாருங்கள்...
உங்கள் மனதளவில் நீங்கள் மட்டுமே முதல் இடம்
உலக செல்வந்தார்கள் வரிசையில்...!

காதலில் இழப்பு...முதலிலே முடிவாக்கப்படும் முதலெழுத்து...!
உங்கள் கதையை முடிக்கும் முற்றுப்புள்ளி அல்ல...!
காதலில் இன்பங்களை விட சோகம் தான் சுகமானது...!
எதிர்பார்ப்புகள் ஈடேறி விட்டால்..காதல் கசந்து போகும்..!
காதலில் காமத்தை கட்டாயமாக்காமல்...அனுபவித்து பாருங்கள்..
உள்ளம் மட்டுமல்ல உடல்கள் இணைவது கூட புனிதப்படும்...!

இழப்பு இயற்கை அல்ல...!
உங்கள் செயல்களின் வெளிப்பாடு...!
மறப்பதும்...மாற்றுவதும்..தடுப்பதும்...தவிர்ப்பதும்...
உங்களால் மட்டுமே முடியும்...!

Monday, March 21, 2011

எண்ணங்கள்

நம் எண்ணங்களின் படி ..
வாழ்க்கை தொடர்ந்தால்
எவ்வளவு சுகமாக இருக்கும்....!
ஆனால்
சுவையாக இருக்குமா..?

நம் எண்ணங்கள் பொருளாதார ரீதியில்...
கற்பனையை விதைத்தால்..
நிம்மதி தொலைந்து போகும்...!

கட்டாயமாக்கப்பட்ட
எண்ணங்களின் வெளிபாட்டால்....
மனிதாபிமானம் மரத்து போகும்...!

காதல் வயப்படும் போது ..
எண்ணங்களின் மாற்றங்களை
தடுக்க முடியாது...
அனுபவிக்க மட்டுமே முடியும்...!

எண்ணங்கள் அப்படியே நிறைவேற தொடங்கினால்..
ஆணவமும்...சுய தம்பட்டமும்..
நம்மிடம் இருந்து வெளிப்படுவதை
மறுக்கவே முடியாது...!

எண்ணங்கள் நிறைவேறாமல் போனால்
எல்லாமே எதிரிகளாக மாறிவிடும் .....
கடவுள் உட்பட.....!

எண்ணங்களை நம்மோடு மட்டும்
நிறுத்திக்கொள்ளாமல்
மற்றவர்களுக்கும்
அதை கட்டாயமாக்கும்போதுதான்..
விரோதம்..பகைமை..எதிர்ப்பு
என
எல்லாமே முரண்பட்டு போகும்...!

எண்ணங்களை செதுக்கி கொள்ளுங்கள்..
சீர் படுத்தி பாருங்கள்..
நியாயப்படுத்தி பாருங்கள்...
நடுநிலைமையை கடைப்பிடியுங்கள்...
பிறகென்ன...
உங்கள் எண்ணங்கள் ...
வரலாற்று பதிவாக மாறுவதை ...
யாராலும் தடுக்க முடியாது...!

எண்ணங்களால் ஏமாற்றி..
ஏமாறுவதை மாற்றி...
எண்ணங்களையே மாற்ற தொடங்குவோம்...!

Friday, March 18, 2011

இந்தியன் என்ற உணர்வு உங்களுக்கும் உண்டா...?

இந்தியன் என்ற உணர்வு சரியாக வெளிப்படுகிறதா...?
விரல் விட்டு எண்ணி பாருங்கள்...!

விளயாட்டு விஷயங்களில்..
இந்தியா ஜெயிக்க வேண்டுமென்ற
எதிர்பார்ப்பு மட்டுமே
உங்களால் வெளிப்படுத்த முடியும்...
பங்களிப்பை நிரூபிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை..!

வெளிநாடுகளில் இந்தியர்கள் புரியும் சாதனையை...
மேற்கோள் காட்டி பெருமை தான் பட முடியும்..!
பகிர்ந்து கொண்டு பங்கு போட
மனதளவில் கூட முடியாது....!

எல்லைகளில்
இந்திய வீரர்களின்
உணர்வுகளை
கடமைகளை..
தியாககங்களை.....
விழிகளில் வழியும் கண்ணீர் கொண்டு
ஏக்கமாய் தான்
வெளிப்படுத்த முடியும்...
அவர்கள் தோளொடு தோள் நின்று
எல்லைகளை பாதுகாக்க
நீங்கள் துணை தர முடிவதில்லை....!

சேவை புரிய....யாரோ சிலர்....!
அவர்களோடு
நம் தொடர்பு என்ன
என்று விளக்கவும் வழியில்லை...!

காசுக்காக அரசு பணியில் பலர்...
கடமை என அவர்கள் செய்யும் பணி...
நேரம்பார்த்து மட்டுமே வெளிப்படும்..!

காசுக்காக..அரசையே விலை பேசும் சிலர்....
அதை தடுக்க எப்போதும் முயலாமல்...
குற்றம் என நிரூபித்து
சுயலாப  குளிர் காய நினைக்கும் பலர்..!

அரசியல் கொததடிமைகளாய்..மாறி
காட்சிக்காக ..
நாட்டையே காட்டி கொடுக்கும்..
வெள்ளை உடை..கொள்ளையர்களை..
வேரருக்க வழியின்றி
அவர்களிடமே விலை போகும்..பலர்..
அதற்க்காக எதையும் செய்யும் சிலர்...!

இந்தியன் என்ற உணர்வு உங்களுக்கும் உண்டா...?

உண்மை என்றால் உணர்ந்து பாருங்கள் ..!

எதையெல்லாம்...
எப்படியெல்லாம்...
எப்போது எல்லாம்
இந்தியன் என உங்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள்..?

மனசாட்சியை மறந்து சொல்ல வேண்டாம்..?

ஒரு விசயம் யோசித்தீர்களா...?

நாம் இந்தியன்
என்ற உணர்வு வெளிப்படுத்த
முதல் படியாக...
அடிப்படையாக..
எளிதான..
ஒரு விஷயம் உண்டு...

அது...
வாக்களிக்க வேண்டும்....!

அவசியம்..என்பதை விட..
கட்டாயமாக்கி கொள்ளுங்கள்...!

விலை போய் விடாதீர்கள்...!

வரும் தேர்தலில்
நூறு சதவீதம் வாக்களித்து
நாமும் இந்தியன்
என
நிமிர்ந்து நிற்க தொடங்குவோம்...!

Wednesday, March 9, 2011

நீங்கள் தான் .. திறமைசாலிகள்...!

வெளிப்படுத்தப்பட்ட..
திறமைகளை மட்டுமே..
பெருமையாய் பேசி..பேசி...
உங்கள் வளர்ச்சிக்கு...
நீங்களே ...
முட்டுகட்டை...
போட்டு கொள்ளாதீர்கள்...!

மறைந்து இருக்கும் ...
உங்கள் திறமைகள்..
வெளிப்படாமலே...
போய் விட கூடும்...!

திறமைகள்...
என்பதின் முழு அர்த்தமும்..
உங்களுக்குள் ....
புரிந்து கொள்ள பட வேண்டும் ...!

உங்கள் ....
செயல்களின் வெளிப்பாடு...
உங்களுக்கு..
முதலில் திருப்தி தரவேண்டும்...!

மற்றவர்களின்
எண்ணமும்...வரவேற்பும்...
ஒத்துக்கொள்வதும்...ஏற்று கொள்வதும்....
அடுத்த பட்சம்தான்...
என ....
பரி பூரணமாக ....
உணர்ந்து கொள்ளுதல்தான் ....
முக்கியமான அடிப்படை...!

அதுதான் ...
உங்கள்...
திறமைகளுக்கான அங்கீகாரமும் கூட...!

சாதாரண செயல்கள்.....
உங்களின் திறமைகள்..
என... 
அறிமுகம் செய்யப்பட்டால்.....
பரிகாசம்மட்டுமே பரிசாக கிடைக்கும்...!

உங்களின் ...
அற்புதமான திறமைகள் ...
சராசரிதான் ...
என ..
உங்களால் அறிமுகபபடுத்த பட்டால்....
பலரிடம்..பலமுறை..
பெருமை படுத்தப்படும் ..
பெரு மதிப்பு ...
என்றுமே ...
நிலைத்து நிற்கும்...!

எல்லோருக்கும் திறமைகள் உண்டு....!
வெளிப்படுத்தவும் முடியும்...!
ஆனால்...
அங்கீகாரம் கிடைப்பதும்..
அவமதிக்கபபடுவதும்...
உங்களின்
செயல்களால்தான்....
முடிவு செய்யப்படும்...!

உங்கள் திறமைகள் ...
உங்களால் பேசப்படுவதை விட..
மற்றவர்களால்...
உணர பட வேண்டும்..!

இதை உணர தொடங்கி விட்டாலே ...

நீங்கள் தான் ..
திறமைசாலிகள்...!

துரோகியாக உருமாறதீர்கள்...!

பகைவன்...எதிரி....விரோதி...துரோகி....
இப்படி உங்களுடன் பழகுபவர்களை
வகைப்படுதுங்கள்...!

உங்களை பற்றி
நீங்களே மதிப்பிட்டு கொள்ளலாம்...!

யார் யாரெல்லாம் ...
உங்கள் வளர்ச்சி...
உங்கள் உயர்வு..
உங்களின் வெற்றி..என
எல்லாவற்றையுமே தரக்குறைவாக...விமர்சிகிறார்களோ....
அவர்கள்தான்
உங்கள் பகைவர்கள்....!

நீங்கள்
எத்தனை பேர்களுக்கு
பகைவர்களாக மாற
தொடங்கி இருக்கிறீர்கள்...
கணக்கெடுத்து கொள்ளுங்கள்...!
 
காரணமே இல்லாமல்...
குறைகளை பெரிதாக்கி..
உங்களை தவிர்த்து...
சிறு சிறு விஷயங்களை
புலம்பி தள்ளுபவர்கள்..
உங்களை வெறுத்து ஒதுக்குபவர்கள்....
நிச்சயம்
விரோதிகளில் அடங்குவர்....!

நீங்கள் யார் யாருக்கு விரோதி ...
விரல் விட்டு எண்ணி வையுங்கள்..!

எதிலுமே தடை ஏற்படுத்துவது....
முன்னேற்றங்களை..முறியடிபபது....
முதலுக்கே மோசம் செய்வது...
இப்படி உள்ளவர்களை
உங்கள் எதிரிகள் என்று
அறிமுகம் செய்து கொள்ளுங்கள்....!

எத்தனை பேர்களுடன்
எதிரியாய் அறிமுகப்படுத்தபடுவீர்கள்....
வரிசை படுத்துங்கள்...!

உங்களுடன் ...உங்களுக்குக்காகவே....
எதையுமே  செய்யத் துணிந்தது போலவும்....
வாழ்க்கையை உங்களுக்காக..
அர்பணித்தது போலவும்
பொய் வேசம் காட்டுபவர்களை ...
இனம் கண்டு துரோகிகள்
என முத்திரை குத்தி..
ஒதுக்கி வைத்து விடுங்கள்...!

நீங்கள் யார் யாருக்கு துரோகி என மாறினீர்கள்....?
வரிசைப்படுத்தி கொள்ளுங்கள்...!

உங்களுடன் யார் யாரெல்லாம்....
பகைவன்...எதிரி....விரோதி...துரோகி...
என
வரிசைப்படுத்தியதையும்..
வகைப்படுத்தியதையும்....விட்டு தள்ளுங்கள்...!

நீங்கள் யார் யாருக்கெல்லாம்...
பகைவன்...எதிரி....விரோதி...துரோகி...
என
மாறததொடங்குவதை..
மாற்றி கொள்ளுங்கள்...!

அது சாத்தியமில்லை என்றால்.....
குறைந்த பட்சம்..
துரோகியாக உருமாறதீர்கள்...!

அது ..
மனித குலத்திற்கே...
நீங்கள் செய்யும் ....
மாபெரும் துரோகம்...!

Friday, March 4, 2011

போட்டிகள் நிறைந்த வாழ்க்கையை வரவேற்போம்...!

திறமை உள்ளவர்கள்
போட்டிகளை கண்டு
பயப்படுவதில்லை...!
பட்டை தீட்டி கொள்வார்கள்..!

போட்டிகள் நிறைந்த வாழ்க்கையை வரவேற்போம்...!

எது போட்டி என்று
வரிசைப்படுத்தி பாருங்கள்...
வகை படுத்தியும் பாருங்கள்...!
போட்டி என்று நினைப்பதே
பொய் என்று புரியும்..!

உங்களால் முடியாததை
யாராலும் தொடர முடியாது..
ஏன்..
தொட கூட முடியாது
என மனப்பூர்வமாக நம்புங்கள்...!
உங்களுக்கு இணை என
யாராலும்..யாரையும்...
சமபடுத்தி பார்க்க முடியாது...!

தனித்துவம் உங்கள் தன்னம்பிக்கை...!

போட்டிகளை
தவிர்பது...தடுப்பது..தடுமாறுவது..என
எதையுமே  நீங்கள்
அவசரமாய் செயல் படுத்த
முயல வேண்டாம்...!
துணிச்சலுடன் போட்டிகளை
எதிர்த்து நின்று பாருங்கள்...
எது...போட்டி என்று
உங்களாலே கண்டுபிடிக்க முடியாது...!

போட்டிகளை
பொக்கிஷமாய் பத்திரப்படுத்துங்கள்...!
பொறாமையாக மாற
விட்டு விடாதீர்கள்...!

போட்டிகள் இல்லை என்றால்...
உங்களுக்குள்
புது வேகம் பிறப்பேடுக்காது...!

நாம் பிறருக்கு
போட்டியாய் மாறுவோம்...!

நமக்கு
போட்டியாய்..
யாருமில்லை என
எப்போதும்...
நம்புவோம்...!

Monday, February 28, 2011

ஏன்.... மாறிக்கொள்ள கூடாது...!

உங்கள் ஏமாற்றங்களை மட்டுமே ...
புலம்பி தீர்க்கும் நீங்கள்..
எப்போதாவாது..
நீங்கள் ஏமாற்றியததை நினைத்து ....
வருந்தியது உண்டா..?

இல்லை என்று சொன்னால்...
அதுவே ..
நீங்கள் ஏமாற்ற தொடங்குவதின்....
அரிசுவடி...!

சொன்ன சொல்லை..
நிறைவேற்ற முடியாமல் போகும்போது.. .
நீங்கள் செய்யும் சமாதானங்களில் ...
எத்தனை ஏமாற்ற வார்த்தைகள்...
எண்ணி பாருங்கள்..!

உங்களுக்கு தேவை என்று வரும்போது..
அதை அடைய ..
நீங்கள் ஏமாற்றிய விஷயங்கள்..
பட்டியல் போட்டு பாருங்கள்...
உங்களுக்கே அவமானமாய் புரியும்...!

உங்கள் நேசிப்பவர்களின் மனம் கவர .
நீங்கள் நடத்திய நாடகங்களில் ...
ஏமாற்றம் தராத செயல் ஏதாவது தென்படுகிறதா...?
உங்கள் பாசம்
பல வேசம் மாறும் ...!

உங்கள் மேல் ...
நம்பிக்கையை மற்றவர்கள் தரவேண்டும் ..
என்ற ஒரே நோக்ககத்தில் ...
நீங்கள் ஏமாற்ற ...
துணை தந்த ..
நிஜமாக்கப்பட்ட பொய்களை ..
கணக்கெடுத்து பாருங்கள்...!
தவறான விடைகளே கிடைக்கும்...!

உங்களை நிலை நிறுத்த..
நியாயப்படுத்த...
நீங்கள் ஏமாற்றியவர்களின் ...
வரிசையை பாருங்கள்..!
பரிதாப முகம்களுடன்..
பாசம் நிறைந்த....
உங்கள் பந்தங்களுக்கு..
நீங்கள் தந்த துரோகம்
உங்களை மட்டுமே சுடும்..!

நீங்கள் செய்யும் ஏமாற்றம்...
உங்களுக்கு ...
நொடிப்பொழுதின்..
நிறைவான நிம்மதி தரலாம்...
ஆனால்....

வம்சங்களை தாண்டியும்.....
அவப்பெயர்..
உங்கள் சந்ததியையே .
அவமதிப்பில் ....
அழித்து விடும்...!

ஏமாற்ற தொடங்குமுன்னே...
ஏன்....
மாறிக்கொள்ள கூடாது...!

Friday, February 25, 2011

உண்மையாக இருக்க முயற்சி எடுங்கள்...!

எல்லோரிடமும் உண்மையாக இருக்க வேண்டும்...!
முடியாது என மறுத்தால்...
உங்களை நேசிப்பவர்களிடம்..மட்டும்
உண்மையாக இருக்க முயற்சி எடுங்கள்...!

உங்களின் நேசம்,பாசம்,அன்பு,
தனித்து விளங்க வேண்டும்...!
பங்கு போடப்பட்டால்..
பாவம் அவர்கள்..நொறுங்கி போவார்கள்...!

உங்களை நேசிப்பவர்களை..
எந்த சூழ்நிலையிலும்
யாரிடமும்..விட்டு தந்து விடாதீர்கள்..!
விட்டுதரப்படுகிறோம்...
என மனதளவில் உணர்ந்தாலே..
அவர்கள் மனதளவில் மரணித்து போவார்கள்...!

உங்கள் நேசிப்பவர்களின் எதிர்பார்ப்புகள்..
அவர்கள் மூலமே வெளிப்பட வேண்டும்
என காத்திருக்காதீர்கள்..!
உங்களை எதிர்பார்த்து..
காத்திருந்து..காத்திருந்து...
அவர்களின் உள்ளம் காயப்பட்டு போகும்..!

ஒருபோதும்..
அவர்கள் உணர்வுகளை
உதாசீனம் செய்யாதீர்கள்...!
அதுவே
நீங்கள் அவர்களுக்கு சொல்லாலும்..செயலாலாலும்...
செய்யும் துரோகம்...!

அவர்களின் தன்மானம் தகர்க்கப்பட்டது என
உங்களிடம் புலம்பினால்..
அவர்களையே குற்றம் சாற்ற வேண்டாம்...
விரக்தி அடைந்து போவார்கள்...!

மற்றவர்களுக்காக
உங்களை நேசிப்பவர்களை...
தவிர்த்து விடாதீர்கள்...!
தனிமை சிறையில்
மீதி ஆயுளை முடித்து கொள்வார்கள்....!


மற்றவர்கள் உண்மையாக இருக்க வேண்டும்
என நினைக்கும் நீங்கள்...
முதலில்
உண்மையை கடைபிடிக்க தொடங்குங்கள் ...!

இன்று முதல்...!

Thursday, February 24, 2011

சுயபலத்தின் அஸ்திவாரம்..!

நினைப்பதும்..நடப்பதும்..
வேறு வேறாக இருந்தால்..
இனி சங்கடபடுவதை ...
ஓரம் தள்ளி ..
சந்தோசப்பட்டு பாருங்கள்...!

நினைப்பதெல்லாம்..
நடந்து கொண்டே இருந்தால் ..
வாழ்க்கை ..
அர்த்தமில்லாமல் அஸ்தமித்து போகும்....!

ஏமாற்றத்தின் அறிமுகம்தான் ....
புதியவைகளின் வெளிப்பாடு ...!

நிராகரிப்பின் மறுபக்கம் தான் ..
நமக்குள் விஸ்வரூபமேடுக்கும் ...
சுயபலத்தின் அஸ்திவாரம்..!

மறுக்கபடும் உதவிகளின் மூலம் ...
நம் தனித்துவத்தின் மறு பிறப்பை...
மகத்துவமாக்குவோம்...!

உதாசீனபடுத்தப்படும் போதெல்லாம்..
உழைப்பை உணர்ந்து..
உறுதிப்படுத்துவோம்...!

கிடைக்காததற்கெல்லாம் ...
இனி ஏக்கம் வேண்டாம்..
வானஎல்லை தாண்டும் முயற்சியின்...
ஏற்றம் விதைப்போம்..!

ஒதுக்கப்படும்போதும்..
ஒடுக்கபபடும்போதும்..
ஓடி ஒளிவதை தவிர்த்து..
துணிவை ..
வாழ்க்கையின் ஒளியாக்குவோம்..!

நினைப்பது நடப்பதைவிட..
நடந்ததை சந்தோசமாய்..
நினைத்தே வாழ்வோம்...!

Wednesday, February 23, 2011

இனி மாற்றி... மாறி பாருங்கள்..!

நம்மால் முடியும் என்பதை மட்டுமே
உணர்த்தினால் போதுமானது...!

பிறரால் முடியாது
என  சுட்டி காட்ட தேவையுமில்லை..
அவசியமுமில்லை...!

நமது முடக்கமும்..
தடைகளும்...
தோல்வியும்...வந்ததன் காரணம்
எது..யாரால்..எப்படி..
என அலசி..ஆராய்ந்து..
நம்மை நாமே சமாதானப்படுத்தி
பரிதாபபட்டு கொள்வது..
நம் வீழ்ச்சியின் பாதை...!

நமது முன்னேற்றததை தடுத்து கொண்டு இருப்பது...
இவைகள் தான் என வரிசைப்படுத்தி ...
புலம்பி தவிப்பதை...விட ....

இந்த நொடியில் இருந்து ...
நீங்கள் வரிசை படுத்தி...
அழகு பார்த்த அத்தனையையும் விட்டு  பாருங்கள்....!

உங்ககளாலும் ...
மிக... மிக.... மிக.... எளிதாக வெற்றியை ...
அனுபவிக்க முடியும்...!

உங்கள் வெற்றிக்கு காரணம் நீங்கள் இல்லை ..
என்பதை எப்படி
உங்களால் ஏற்று கொள்ளமுடிவதில்லையோ..

அதேபோல்..
உங்கள் தோல்விக்கு மட்டும் ...
ஏன் மற்றவர்களை..
காரணப்படுத்த வேண்டும்...?

கொஞ்சம்
இனி மாற்றி...
மாறி பாருங்கள்..!

உங்கள்
வெற்றியின் காரணம்
பலர் என
கை காட்டி பாருங்கள்...!

தொடரும்
உங்கள் வெற்றிக்கு ..
பலர் பாதுகாப்பை
தந்து கொண்டே இருப்பார்கள்..!

உங்கள் தோல்விக்கு காரணம்
நீங்கள் மட்டுமே
என உறுதியாக இருங்கள்...!

வெற்றியின் வழியில்
உங்கள் தோள் கொடுக்க
பலர் போட்டி போடுவார்கள்...!


Saturday, February 19, 2011

நீங்கள் நீங்கள் தான்...!

நான் நானாக இருக்க வேண்டும்...!
சொல்லிப்பார்ப்பததில்  சுகமில்லை...!
வாழ்ந்து பாருங்கள்
வலியின்...வகைகள் புரியும்...!

அன்பானவன்...என நீங்களே உறுதி கொள்ளவேண்டாம்...!
பிரதி பலன் இல்லா அன்பா உங்களது..?
மனசாட்சி உதறல் எடுத்து மறுத்து விடும்..!

அழகு உங்களுக்கு மட்டுமே அதிகம் என கற்பனை வேண்டாம்..!
எது அழகு..?எப்படி அழகு..!
பதிலில்லா கேள்விகள் பல உங்களிடம்...!

உழைப்பில் உங்கள் இணையாக வெளிப்படுத்த யாராலும் முடியாது
என இறுமாப்பு வேண்டாம்..!
சுயத்தேவையின் கட்டாயங்கள்...
கலக்காத உழைப்பை வரிசைப்படுதுங்கள்...
ஏதுமே இருக்காது..!

தியாகமும்..விட்டு கொடுப்பதுமே...உங்களின் சொத்து
என பொய் கணக்கு காட்ட வேண்டாம்...!
வேண்டாததை...கிடைக்காததை...எல்லாம்  விட்டு கொடுப்பது என....
யாராலும் நியாயப்படுத்த முடியாது...!

தான தர்மத்தில்...நீங்கள் கொடை வள்ளல் என பட்டம் சூடி கொள்ளாதீர்கள்...!
தனக்கு மிஞ்சியதுதான் உங்கள் தானமா...?
ஆம் என்றால் அதுவே உங்கள் அவமானம்....!

எதுவுமே கட்டாயமில்லாத....
எதையுமே எதிர்பார்க்காத...
தற்பெருமை இல்லாத..
தலை கணம் கொள்ளாத..

உங்களில்..இருக்கும் உங்களை
தேடி பிறப்பெடுங்கள்..

இனி...

சொல்லி பார்க்கவோ ...
உணரவோ தேவை இல்லை...

நீங்கள் நீங்கள் தான்...!

Sunday, February 13, 2011

காதல் மட்டுமே மெய்ப்படும்..!

காதல்....!

வரைமுறைகளில்
அடங்காத விதிமுறை...!

கருவில் உருவாகும்..
நம் முதல் அணு...!

சுகமாய் சுமக்கும் சோகம்...!
ஏக்கம்கூட இன்பமாய்...!

காதல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்...
இதுவரை
பிறந்திருக்க வாய்ப்பே இல்லை...!
இனி
பிறப்பேடுக்க...சாத்தியமும் இல்லை...!

விழிகளில் 
இலக்கியம் கற்கும் மொழிகளும்...

அசைவுகள்
ஆயிரம் அர்த்தங்கள்...சொல்வதும்...

எதுவுமே
அழகாய் மாறிவிடுவதும்...

காதலித்து பாருங்கள்...புரியும்....!

காத்திருப்பின் கோபம் கூட
ஆறுதலை
தருவதும்..பெறுவதும்...
அருகிலிருந்தால்.....
தவிர்த்து..தவிப்பத்தும்...
விலகி இருந்தால்...
துடித்து.. ஏங்குவதும்...நெருங்குவதும்...
காதல் வசபபடுவத்தின்
நிஜங்கள்...!

ஓயாத இரைச்சல் கூட
இன்பமாய் இசைக்கும....

அமைதிகூட  ...
நெஞ்சை ஆழமாய் கிழிக்கும்....

எப்போது அழவேண்டும்..
ஏன் சிரிக்க வேண்டும்..
எதுவுமே தெரியாத
கட்டாய உணர்வுகளின் வாழ்க்கை...!

காதல் அனுபவத்தின்
வழி இல்லா வலிகள்...!

வெற்றி..தோல்வி..
எப்படி ..எது..ஏன்..என்று
தீர்மானிக்கப்பட முடியாத
வேடிக்கையான விபரீத விளயாட்டு...!

முதல் எது
முடிவு எது என கண்டுபிடிக்க முடியாத..கூடாத..
குழப்பம் இல்லாத சிக்கல்...!

காதல் உணர்த்தும் உன்னதம்..!

மொத்தத்தில்...

எதுவுமே...
பொய்த்து போகலாம்...!

காதல் மட்டுமே
மெய்ப்படும்..!


நேற்றைய..மிச்சங்கள்...!

புதியது...
என எதை எல்லாம் சொல்ல முடியும்...!

விரல் விட்டு எண்ணி வையுங்கள்..!

எண்ணிய விஷயங்களில்
எத்தனை..உங்களுக்கு புதிது...
எத்தனை உலகத்திற்கு புதிது...
வரிசை படுத்தி பாருங்கள்..
உண்மை புரியும்....!

புதியது என்பதெல்லாம்..
 உங்களுக்கு அதிசயம்..
 என தோன்றலாம்...!
மற்றவர்களுக்கு அது ..
சகஜம்தான்....!

உங்கள் மழலையின்..கொஞ்சல் மொழி..
உங்களுக்கு...
ஆயிரம் புதிய அர்த்தம் தரலாம்...!
உங்களை சார்ந்தவர்களும் ..
அதை ரசித்து தான் ஆக வேண்டும் ..
என...
கட்டாயப்படுத்த முடியாது..!

உங்களின் செயலை...
உங்கள்  தாய்...
புதுமையின் உயர்வாய் ஒப்பிடலாம்...!
மற்றவர்களுக்கு  ...
அது சராசரி வாழ்வியலின்
வழக்கமான ஒன்று..!

உங்கள் தோள் படர்ந்து..
நடை பயிலும் ...
உங்கள் துணை உங்களுக்கு  புது இதம் தரலாம்...!
மற்றவர்களின் பார்வையில்...
அது கொச்சை படுத்த படும்...!...!

கஷ்டம்..துக்கம்...சோதனை...
இதெல்லாமே...
நீங்கள் மட்டுமே...
புதிதாய் அனுபவிப்பதாய் சொந்தம் கொண்டாடுவது..
எவ்வளவு தவறு ....
என.. மற்றவர்களின் ...
அன்றாட.... வரலாறு புரட்டி பார்த்தால் புரியும்...!

அதேபோல்..

உங்கள் வெற்றி..சாதனை..தியாகம்....
என எதுவுமே புதியது ...
என நிரூபிக்க முடியாது...!
யாரோ..எங்கோ..எதையாவது..
வெற்றி..சாதனை..தியாகம்... 
என வழக்கப்படுத்தி கொண்டிருப்பார்கள்...!

நிறைவாக..

உங்களின் ...
இன்றைய..புதுமைகள்..
நேற்றைய..மிச்சங்கள்...!

நாளைய...புதுமைகள்...
நம்பிக்கையின் தேடல்கள்...!

Saturday, February 12, 2011

பண்பான....உலகம் உங்கள் வசம்...!

பரிமாற்றம்....!

இந்த சொல்
உண்மையில் ஒரு மந்திர சொல்..!

எதையும் ..எதற்கும்....
எப்படியும்...ஏன்...
என்று காரணம் கேட்காமல்...
ஏற்க வைக்கும்....
ஒரு ஆளுமை சொல்..!

பரிமாற்றம் ஒரு வழி பாதை அல்ல...!
பல்முனை
பல வழி கொண்ட
முடிவே இல்லாத  பாதை ...!

அதே போல்
உங்களை பிரதிபலிக்கும் சக்தியும்
பரிமாற்றம் எனபதில் அடங்கி விடும்...!

பரிமாறி கொள்வதை விட...
எதை பரிமாற வேண்டும்...
என்ற வரைமுறையும் வேண்டும்...!

அன்பை பரிமாறி பாருங்கள்.....
அமைதியான வாழ்க்கை உறுதி..!

அறிவை பரிமாறி பாருங்கள்....
பண்பான....உலகம் உங்கள் வசம்...!

உதவியை பரிமாறி பாருங்கள்...
நிம்மதியான சுகம் உங்களை சூழும்...!

மரியாதையை  பரிமாறி பாருங்கள்...
மானமுள்ள மதிப்பு...எப்போதும்...!

ஆனால்..

கோபம்..
வெறுப்பு..
துரோகம்..என இது போன்ற எதையும்
பரிமாறிக்கொள்ள இடம் தராதீர்கள்...!

இடம் தர எண்ணினாலே....

நம்மை அறியாமல்
நம் வாழ்க்கையின்
அத்தனையும் அழிந்து போகும்...!
அவபெயர்..மட்டுமே மிஞ்சும்..!

ஆக..

பரிமாற்றம்...

நம்மை தலை கவிழ செய்யாமல்...
தலைவனாக மாற்ற வேண்டும்..!

Thursday, February 10, 2011

விதியின் தத்துவமும்... ! மதியின் மகத்துவமும் ...!

எல்லாமே விதிப்படித்தான் நடக்கும்....!

விதியை மதியால் வெல்லலாம்...!

இந்த இரண்டுமே சரி.. தவறு..
என விவாதித்து...
நேரத்தை இழப்பதை விட..
இந்த இரண்டுக்குமே  அடிப்படை
எது..?   யார்..?   என்ன...?
என உங்களையே கேட்டு தெளிவு பெற்று பாருங்கள்..
உண்மை புலப்படும்..!

விதியை நம்புகிறவர்கள்....
தடைகளுக்கு அஞ்சி வாழ்வை நகர்த்த கூடாது..!

மதியை நம்புகிறவர்கள்....
தடைகளை உடைத்து வாழ்வுக்கு வழி தேட வேண்டும்..!

தோல்வி என்றால்..விதியை...நொந்து கொள்வதும்..
வெற்றி என்றால்..மதியை..புகழ்ந்து கொள்வதும் கூடாது...!

எல்லாமே விதி வசம் தான் என ஒதுங்கும் போது..
நம்மை அறியாமலே..நாம் புறக்கணிக்க படுகிறோம்....!

எல்லாமே மதியால் தான் என மற்றவர்கள் புரிந்து கொண்டால்..
உங்கள் வளர்ச்சி..புகழ்...எல்லாமே அரவணைக்கபடும்...!

விதியை குருட்டு தனமாக நம்புகிறவனின்....
சொல்.. செயல்..எல்லாமே நிலையாய் இருக்காது...!

மதியை உறுதியாய் நம்பி வெளிப்படுத்துப்பவனுக்கு..
முடக்கம்..தடை என எது வந்தாலும்
அது
அவனை நிலைகுலைய வைக்காது....!

விதி...என்பது.. .
உண்மை.. பொய்.. 
நடக்கும்... நடக்காது..
இருக்கும் ..இருக்காது..
என எதையுமே போட்டு குழம்பி கொள்வதை விட..
விதிபடித்தான் நடக்கிறது என ஓரம் தள்ளி
உங்கள் எண்ணங்கள் படி 
வாழ்ந்து பாருங்கள்..!

விதியே உங்கள் வசம் வந்து
உங்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு அடி பணியும்...!

மதியால் தான் எல்லாமே நடந்தது
என ஆணவத்துடன்  அகங்காரத்துடன்..
எதையும் மட்டமாய் கருதுவதே
குறிக்கோள் என கொள்ளாமல்....
புரிந்து..
புரியவைக்க வைத்து தொடரும் ..
உங்கள் வாழ்க்கையில் ...
விதி என்று ...
ஏதாவது குறுக்கிட்டதா..?
என கேட்டுப்பா ருங்கள்..!

விதியின் தத்துவமும்...
மதியின் மகத்துவமும் .
தெளிவாகும்...!


விதியையும்..மதியையும்..
உங்கள் செயல்களுக்கு அடிமையாக்குங்கள்...!

இனி..

விதிக்கும் ..
மதிக்கும்..
உங்களால் தான் ....
வாழ்வு என மாறட்டும்...!

Wednesday, February 9, 2011

அடுத்தது என்ன..!?!

அடுத்தது என்ன..!?!

இந்த கேள்வியை...வெளிப்படுத்துவதில் பல விதம் உண்டு..!

நிறைய பணி சிரமத்துடன் முடித்து கொண்டிருக்கும் போது....
அடுத்தது என்ன..!?!
இது
நிர்பந்தததின் வெளிப்பாடு...!

எல்லா வேலைகள் முடித்தபின் ..எதிர்பார்க்கபடும்
அடுத்தது என்ன..!?!
இது
ஈடுபாட்டின் எடுத்து காட்டு..!

வெவ்வேறு விசயங்களை...புரிந்து கொண்டிருக்கும் போதே..வரும்..
அடுத்தது என்ன..!?!
இது
குழப்பததின் உச்சகட்டம்...!

கடன் சுமைகளால் மூழ்கும்போது வரும்..
அடுத்தது என்ன..!?!
இது
விரக்தியான வாழ்க்கை..!

நிராகரிக்கபடும் போது  தொடரும்...
அடுத்தது என்ன..!?!
இது
ஆதரவுக்கான தேடல்.....!

நிம்மதியை தொலைத்த பின்..
அடுத்தது என்ன..!?!
இது
போலி நிறைந்த வாழ்க்கை..!

காதலில்..
அடுத்தது என்ன..!?!
இது
சுகம்.. சோகம்.. இணைந்த பரவசம்..!

வெறுப்பின் வெளிப்பாடு..
அடுத்தது என்ன..!?!
இது
உறுதியாகும் பகைமை...!

பொறாமையின் உச்சகட்டம்
அடுத்தது என்ன..!?!
இது...
வலம் வரும் கீழ்தரமான கருத்துகள்...!

இயலாமையின் தொடர் பாதிப்பு..
அடுத்தது என்ன..!?!
இது
வழி நடத்தும் தோல்வி...!

அன்பு..உதவி..உழைப்பு..நாணயம்..நம்பிக்கை...நேசம்..பாசம்..
அடுத்தது என்ன..!?!
இது
உண்மையான மனித தன்மை...!

அடுத்தது என்ன..!?!
எல்லோரும் போற்றி பின்பற்ற தூண்டும்..
வெற்றியான சுக வாழ்வு..!

Tuesday, February 8, 2011

"களை" எடுங்கள்..!

தொல்லை கொடுப்பதற்கென்றே...
சில ஜீவராசிகள்...
நம்மோடு வசிக்கும்...!

அவர்களை..
...அடையாளம்..கண்டு ..கொள்ள
சில விதிமுறைகள்...!

உங்கள்மேல்
அளவுக்கு அதிகம்
அக்கறை இருப்பது போல்
வேசம் கட்டுவார்கள்..!

கிரங்கி போய்..
அவர்களை...மனதில்..வைத்தால்.....
உங்கள் மதிப்பு
அவர்களால் மழுங்க வைக்க படும்..!

உங்கள் புகழை...
அவர்களால்..
ஜீரனித்து கொள்ள முடியாமல்...
இல்லாத குறைகளை...
அம்பல படுத்துவார்கள்..!

நீங்கள் அசிங்கப்படும்..
முன்..
அவர்களை
உங்கள் வாழ்க்கை பாதையில் இருந்து அப்புறபடுத்துங்கள்...!

மாபெரும் சபையில்
நீங்கள் மதிக்கப்படும் போதெல்லாம்...
மறைந்திருந்து...
உங்களை ஏளனப்படுத்துவார்கள்..!

அவர்களின்
முகத் திரை..கிழித்து..
உங்கள்முகவரியை..பத்திரபடுத்துங்கள்...!

காரணமே இல்லாமல்
உங்கள் கருத்துகளை
மிருகதனமாக..விமர்சிப்பார்கள்...!

அவர்களை
விட்டு விலகி பாருங்கள்..
வித்தியாசத்தை உணருவீர்கள்..!

உங்களை சுற்றி படர்ந்து...
உங்களை இடறி ..வீழ்த்துவார்கள்...
இடம்கொடுக்காமல்....
முன்னெச்சரிக்கையுடன் முறியடியுங்கள்..!

தனிமையில்....
மலையளவு ..பாராட்டி புகழுவார்கள்...!

மயங்காமல்...
மறைந்து அவர்களின் செயல்களை நோட்டமிடுங்கள்...
தெளிவாகும்..!

உங்களை சுற்றிய அவர்களை
"களை" எடுங்கள்..!

வெற்றியாய் வாழும் "கலை "
உங்களுக்கே வந்து விடும்..!

தவறுகளின் வெளிப்பாடு...!

தவறுககளில் இருந்து தான்
நிறைய கற்று கொள்ள முடியும்...!

தயங்கி..பயந்து..
ஒதுங்கி...ஓடுவதைவிட...
துணிந்து மேற்கொள்ளுங்கள்..!

தவறு ஏற்பட்டாலும்...
மறுமுறை
அது உங்கள் மூலமே சரி செய்ய படும்..!

தவறே இல்லாமல் போனால்...
புதிய கண்டுபிடிப்புகள்...
பிறந்திருக்க...வாய்ப்பே இல்லை..!

தெரியாமல்..
புரியாமல்....
அறியாமல்...
தவறை யார் செய்திருந்தாலும்..
அதை திருத்திக்கொள்ளும்..சக்தியும்
அவர்களிடமே உண்டு..!

பிறர் உதவி தேவையுமில்லை..
அவசியமும் இல்லை...!

தவறுகளின் அனுபவம்..
பக்குவத்தின்..பலம்...!

தவறுகளின் வெளிப்பாடு...
தன்னம்பிக்கையின் அறிமுகம்...!

தவறுகளின் பலன்....
தடை தகர்க்கும் துணிவு...!

தவறுகள் முடக்கம் அல்ல ..
முன்னேற்றம்..!

தவறுகள் தோல்வி அல்ல....
வெற்றியின் சரியான வழி...!

ஆனால்..

பிடிவாதத்தால்..
தொடரப்படும் தவறுகள்..
உங்கள் வேரறுக்கும்...
விஷ வேர்கள்...!

தவறும்..
புரிதலின் பயிற்சி
என தெளிவு பெறுவோம்....!

தவறுகள்
நமக்கு கற்று தரும் பாடம் 

அனுபவம்...!

அனுபவம்
நமக்கு கற்று தரும் பாடம் ..

நம் வெற்றிக்கு வழி ...!

Monday, February 7, 2011

வாழ்க்கையின் அஸ்திவாரங்கள்..!

கற்பனை..
கனவு....
இது இல்லாமல்
யார் வாழ்க்கையும் தொடராது...!

கற்பனையில்...
எதை வேண்டுமானாலும் 
எதிர்பார்க்கவும் கூடாது...!

கற்பனையில்....
கண்ட அனைத்தும்
நிஜ வாழ்க்கையில்..
நடக்கும் என்ற
எதிர்பார்ப்பும் கூடாது..!

நியாயமான...
அத்தனையும்..
உங்கள் கனவில்
வர வேண்டும்..!

அந்த கனவுகள் தான்
உங்கள் நிஜ வாழ்க்கையை
வழி நடத்தும்....!

கற்பனையும்..
கனவும்...
பொழுதுபோக்கென வீணாகமல்..
நம்மை வழிநடத்தும்
திசைக்காட்டியாக
மாறி விட வேண்டும்...!

கற்பனையும்..
கனவும் ..
உங்கள்
வாழ்க்கையின் அஸ்திவாரங்கள்..!

சரியாகவும்...
முறையாகவும்....
அதை அமைத்துகொள்வது...
உங்களை மட்டுமே சார்ந்தது..!

வெறும் கனவும்... ...
வீணான கற்பனையும்..
நம் வாழ்வின்
திசையையே மாற்றிவிடும்..!

நிஜத்தை மட்டுமே
கற்பனை செய்வோம்..!

நடப்பதை மட்டுமே
கனவாக்குவோம்...!

Sunday, February 6, 2011

அளவோடு வெளிப்படுத்துவோம்..!

பின் வாங்குதல்....
தோல்வியின் கடைசி படி...
என
சோர்ந்து போகாமல்..

வெற்றியின் முதல் படி..என
எதிர்கொள்ளுங்கள்...!

இயற்கையின் சீற்றங்களில்..
எதிர்த்து நிற்பதை விட
பின் வாங்குவதே பாதுகாப்பு...!

எதிரியின்
படை பலத்தை கண்டு பயந்து
பின் வாங்குவதை விட..

எதிர்ப்பதில் மனபலத்தை..
வெளிப்படுத்துவதே..
வீரத்தின்..அடையாளம்..!

பிறரின் சாதனைகளை 
ஏக்கதோடு...பாராட்டி...
அதை செயல்படுத்த 
துணிவில்லாமல் பின்வாங்குவதை விட....

சாதனைகளை  முறியடிக்கும் 
புது சரித்திரத்தை... உருவாக்கி ...
எல்லோரையும் பெருமையுடன்
நம் மேல் பார்வைகளை பதிக்க செய்வோம்...!

நம்மிடம்...
அளவிலாத சக்தி உண்டு...

அதை ...
அளவோடு வெளிப்படுத்துவோம்..!

முரண்பாடுகளில்
பின் வாங்குவோம்..!

முடியும் என்றால்....
முதலில் நிற்போம்..!

முடியாததை
காற்றுக்கொள்வோம்...!

தெரியாததை...
தேடி பெறுவோம்...!

புரியாததை...
தெரிந்து கொள்வோம்..!

திருப்தி அடையும் வரை
ஓய்வே வேண்டாம்..!

ஆக..

பின்வாங்குதலில்கூட
புத்திசாலித்தானத்தை
பயன்படுத்துவோம்...!

நாம் முன்னேறுவதை
பாராட்டுவதற்கு..
யாரும்..
பின்வாங்க மாட்டார்கள்....!

Friday, February 4, 2011

செயல்பட.. தாமதிக்காமல்..!

தள்ளிபோடப்படுவதும்...
தாமதப்படுத்துவதும்.....
சிலவற்றிற்கு..பொருந்தலாம்..!

பலவற்றிற்கு....சரிப்படாது...!
உங்கள் -
அன்றாட செயல்களில்
எதை தள்ளி போட்டீர்கள்..?
எதை தாமதப்படுததினீர்கள்...?
கணக்கெடுத்து பாருங்கள்...!

அதனால்
உண்டான விளைவுகளையும்...
நடுநிலையோடு அலசி பாருங்கள்...!
தெளிவு மட்டுமல்ல...
புது தெம்பும் உணரப்படும்...!

கோபத்தை தள்ளிப் போடலாம்...!
உதவியை தாமதப் படுத்த கூடாது...!

பொழுது போக்கிற்காக...
நேரம் ஒதுக்குவதை தள்ளி போடலாம்...!
நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட பணியை முடிக்க தாமதப்படுத்த கூடாது..!

வேகத்தில் அவசரம் காட்டுவதை தள்ளி போடலாம்..!
உயிர் காக்கும் எந்த விஷயத்தையும்...
தாமதப்படுத்த கூடாது..!

அவசரமாய் சாப்பிடுவதை தள்ளிப் போடலாம்..!
பிறர் பசிபோக்க தாமதப்படுத்த  கூடாது...!

கடன் பிறரிடம் பெறுவதை தள்ளி போடலாம்...!
கடன் திரும்ப செலுத்துவதை தாமதப்படுத்த கூடாது...!

காதல் வயபபடுவதை தள்ளி போடலாம்...!
காதலை களங்கப்படுத்தாமல்...
கரம் பிடிக்க.. தாமதிக்க கூடாது...!

நாம் வேலைகளை
பிறர் வசம் ஒப்படைப்பதை தள்ளி போடலாம்..!
பிறரின் வேலைகளையும்
செய்து முடிக்க  தாமதப்படுத்த கூடாது...!

தவறுகளை..
தள்ளி போடலாம்.!
திருந்திக்கொள்வதில்
தாமதம் கூடாது...!

மொத்தத்தில்...
வேண்டாதை
புரிந்து தள்ளி போடுவோம்...!

அவசியங்களை அறிந்து..
செயல்பட..
தாமதிக்காமல்..
தலை நிமிர்வோம்...!

Thursday, February 3, 2011

நிம்மதியின் அஸ்திவாரங்கள்..!

சிலசமயம்...
மன்னிப்பே ...
தண்டனையாக மாறும்...!

பல சமயம்
மன்னிப்பே...
மறுப்பிறப்பை தரும்...!

தெரியாமல் செய்த தவறுக்கு ..
மன்னிப்பது
திருந்த தரும் வாய்ப்பு...!

திரும்ப திரும்ப செய்யும் தவறுக்கு..
தண்டனை தருவது... 
மட்டுமே மன்னிப்பு...!

தாயின் கர்ப்ப காலம்...
மறந்து....
முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பந்தத்திற்கு ..
தாய் தரும் மன்னிப்பு...
கண்ணீர் கலந்த வாழ்த்து...!

நேசம் மறந்து..
பாசம் மறந்து...
சகோதரத்துவத்தை....
சொத்து..சுகத்திற்காக ...
பங்கு போடுவது..
மன்னிக்க முடியாது...என்றாலும்...
விட்டு கொடுப்பதே
மாபெரும் மன்னிப்பு..!

மறுக்கபடும்... உதவி...!
மறக்கபடும்... ஊக்கம்..!
மறைக்கபடும்..  தியாகம்...!
துரத்தப்பபடும்..இரக்கம்..!
சுயநலம் தந்த... கொடூரம்..!
வருமானத்திற்க்காக இழக்கபடும் ....தன்மானம்..!
புகழ் வேண்டி புதைக்கபடும்... தோழமை...!
இல்லற சுகத்தை பங்கு போடும் ....ஆண்மை..!
தாய்மையை...மண்மூட...செய்யும்....  பெண்மை...!
புறம் பேச சொல்லும்.... பொறாமை..!
குற்றம் மறைக்கும் ..பொய்மை...!
ஓரம் கட்டபடும்...பிறர் பெருமை...!
ஓயாது புலம்ப படும்..தற்பெருமை...!

இதெல்லாம்..
மன்னிப்பே தர முடியாத
மாபாவங்கள்..!

தவிர்பது...
தடுப்பது..
நம் வருங்கால
நிம்மதியின் அஸ்திவாரங்கள்..!

மன்னிப்பு வேண்டுவது ..
மட்டும் அல்ல...

மன்னிப்பு மறுப்பதும்.....

உயிரற்ற வாழ்க்கைக்கு
வழி வகுக்கும்...!

Wednesday, February 2, 2011

மனம் உடந்து போன பின்பு தான்...!

உடைந்து போவது என்ற நிலை 
நம்மை முடித்து விடக்கூடாது...
தொடங்கி வைக்க வேண்டும்...!

எதிர்பார்ப்பு உடைந்து போனால்...
ஏமாற்றம் என்பதை விட...
புதிய மாற்றம் தர வழி
என தொடர வேண்டும்...!

உதவி இன்றி உடைந்து போனால்...
சிதைந்து போகாமல்....
சுயபலத்தை..
உணர்ந்து வெளிப்படுத்த முடியும்...!

ஆதரவு மறுத்து உடைந்து போனால்...
ஆடி போகாமல்...
ஆளுமை திறமையை புரிந்து
எதையும் ஆட்படுத்த முடியும்..!

பண.. பொருள் ஈட்டும் முயற்சி உடைந்து போனால்....
முடிந்து போகாமல்...
முடிவு வரை முயற்சிக்க வேண்டும்...!

காதலில் தோற்று உடைந்து போனால்...
கல்லறை புகாமல்...
காவியம் படைக்கும் கவிஞனாக
புது பிறப்பேடுக்க வேண்டும்...!

கற்றுக்கொள்வதில்..தடை வந்து உடைந்து போனால்...
பின் தங்கிடாமல்...
திறமைகள் தந்து
புது வழி படைக்க வேண்டும்..!

உடைந்து போவது தொடர்ந்தால்..
உறைந்து போகாமல்..
உங்களை உணர கிடைத்த
உன்னத வாய்ப்பு
என உயிர் வாழுங்கள்..!

ஏனென்றால்...

மனிதன்...

மனிதன் என மாறுகிறான்..

மனம் உடந்து போன பின்பு தான்...!

Tuesday, February 1, 2011

நம்மால் தான் தீர்மானிக்கபபடுகிறது...!

நம்மோடு பழகுபவர்களின் தன்மை
நம்மால் தான்
தீர்மானிக்கபபடுகிறது...!

இதை
...ஏற்றுகொள்பவர்கள்
சந்தோசமாய் படியுங்கள் தொடர்ந்து....!

மறுப்பவர்கள்...
பலமுறை ..படியுங்கள் ....
புரிந்து கொள்வீர்கள்...!

உதவி தேவை என்றால்....
எதிர்பார்ப்புடன் கேளுங்கள்...
நிர்பந்தம் கூடாது...!

ஆலோசனை அவசியப்பட்டால்....
அனுபவங்களை கேளுங்கள்....
அலட்சியம் கூடாது...!

பண,பொருள் தேவைக்கு....
நம்பிக்கையை உறுதியாக்கி கேளுங்கள்...
சமாதானம் ..கூடாது...!

அன்பை வெளிப்படுத்த....
ஆதரவாய் இருங்கள்.....
சந்தேகம் வேண்டாம்...!

செய்யும் தொழிலில்
விசுவாசம் வெளிப்பட வேண்டும்...
ஒப்பிடுதல் கூடாது...!

முடிவெடுக்கும் முன்
பலவாறு யோசியுங்கள்....
செயல்படுத்தும் போது...
மறு பரிசீலனை...ஆகாது...!

முன்னேறும் போது...
எதிரே கவனம் தேவை...
பின்னோக்கி பார்த்து...
பிசகிட கூடாது....!

உங்கள் உயர்வுக்கும்..
வளர்ச்சிக்கும்...
நீங்கள் போதும்....
மற்றவர்களை நம்பி
தோற்பது கூடாது...!

ஆக,

உங்கள் முன் உள்ளவர்களை...
உருமாற்றும் சக்தி உங்களிடமே..
இதில்
உறுதியாய் வாழுங்கள்...!

உலகம் பற்றிய கவலை
உங்களை மட்டும்
ஒன்றுமே செய்யாது...!

Monday, January 31, 2011

எது கடமை...?

கடமை...

நமக்கு நாமே...
நிர்ணயித்து கொள்ளும்
பலவிஷயங்களை
நமது கடமை
என நம்புகிறோம்...!

வருமானம் ஈட்டுவது...
பெற்றோரை பராமரிப்பது...,
குழந்தைகளை வளர்ப்பது...
இறைவனை வழிபடுவது...
தான தர்மம் செய்வது...
குடும்பத்தோடு வாழ்வது...
இல்லறத்தில் ஒழுக்கமாய் இருப்பது..
நாணயமாய் நடப்பது...
நம்பிக்கையை கடைப்பிடிப்பது...
இப்படி பல..பல...

நமக்கு நாமே சரியென்று
சமாதானப்படுத்தும்
பல விஷயங்கள்
கடமை என்பதை விட
நமது மடமை
என
நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தால்
உங்களுக்கே தெரியும்...!

உங்கள் வீதியில் தெரு விளக்கு
செயலிழந்தது எப்போது..என தெரியுமா...!

உங்கள் வீட்டு சாக்கடை ..சுத்தமாக்க
எப்போதாவது முயன்றது உண்டா..!

பள்ளி..கல்லூரிகளில்..பணம் தர மறுத்து
அரசு பள்ளியில் கல்லூரியில் சேர்க்க துணிவு உண்டா...!
வருமான வரி,சொத்து வரி,தொழில் வரி,
மொத்தத்தில்
அரசாங்க வரிகளை முறையாய் செலுத்த முயன்றதுண்டா.......!

அக்கம் பக்கம் சுக விழாக்களில்
உரிமை கொண்டாடியது போல்...
எது வரை அவர்கள் துன்பங்களில்
தோள் தந்துள்ளீர்கள்...!

நடைமுறையில் அவசியமாக்கப் பட்டவைகளை
கடமை என பொய் வாழ்க்கை வாழும்
உங்கள் நிலையை மாற்றி
பிறருக்கு அவசியமான தேவைகளை
பூர்த்தி செய்வதே கடமை
என கடைப்பிடியுங்கள்..!

கடவுள் கூட
உங்கள் வழிபடுதலுக்கு துணை புரிவதையே
தன் கடமை என கடைப்பிடித்து கொள்வார்...!

எது கடமை என அறிந்து..
கவலை இல்லா வாழ்க்கையை
அனுபவிப்போம்...!

Sunday, January 30, 2011

பழி சொல்வதை.. அவமானமாய் கருதுவோம்..

பிறர் மேல் பழி சொல்வது ....
என்பது..
காலாகாலமாய்...
தொடரும் முரண்பாடு...!

உயர்வான நிலை ...
வரும்போது மட்டும்...
நம் உழைப்பையும்..
செயல்களையும் ..
உதாரணம் காட்டி...
பெருமை படுவதும்....!

தோற்கும் போதும்...
தவற விடும் போதும்....
மற்றவர்களை காரணம் காட்டுவதும்...

ஏன் ...
பலசமயம்
படைத்தவன் மேல் பழி போடுவதும்..
காலாகாலமாய்...
நம்மால் ....
கடைப்பிடிக்கபடும்...
கட்டாயங்கள்...!


நீங்கள்...
தவறு செய்ததால்தான் ....
பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றால்..
தயங்காமல்...
அதை ஏற்று...
சீர்படுத்தி பாருங்கள்...!

சரியென்று...
முடிவில்...
உங்களை .....
மதித்து ஏற்றுக்கொள்வார்கள்...!

உங்கள் மனசாட்சியும்...
உங்களை...
மதித்து விடும்...!

பிறர் மீது ....
அந்த பழியை சுமத்தினால்....
பயத்தினாலும்..
வெறுப்பினாலும்..
உங்கள் வாழ்க்கையின்
பெரும்பகுதி..
பாழாகிப்போகும்...!

உங்கள் ..
தவறுதலான செய்கை..
பிறரின்..
செயல்களில் தடை உண்டாக்கியது ...
என உணர்ந்தால்..
உடனே..
ஒததுக்கொள்ளுங்கள்...
பிறகென்ன...
உங்களை சரி படுத்த..
இந்த உலகமே ...
உங்களுக்கு துணை தரும்...!

இதை விட்டு ...
மறுப்பையும்..
காரணம் இல்லாமல் ...
பழியை தேடி பதிலளிததால்..

குற்றவாளியக்கப்பட்டு...
தவிற்கப்படுவீர்கள்...!

தவறு செய்தது ...
நீங்கள் என்றால்..
உங்கள் மேல் .....
மற்றவர்கள்
சொல்லும் பழியை....
தண்டனை என பார்க்காமல்..
மாற்றிக்கொள்ள...
மற்றுமொரு ....
வழியேன முடிவெடுங்கள்...
மகத்தான வெற்றி .....
உங்கள் வசம்...!

அதன் பிறகு...

நீங்கள் ...
தெரிந்தோ...
தெரியாமலோ ..
செய்யும் தவறுகள்..
திருத்தபடும்...

ஆறுதலான...
ஆலோசனையும் கிடைக்கும்...!

இனி-

பிறர் மீது ...
பழி சொல்வதை..
அவமானமாய் கருதுவோம்..

நம் மீது ...
பிறர் பழி சுமத்தினால்....
திருந்த கிடைத்த ...
வாய்ப்பாய் ஏற்று..
வாழ்வின் ...
வெகுமானமாய்
மாற்றி கொள்வோம்..!

Saturday, January 29, 2011

அவசர காதல்....! ஆழமான காதல்.....!

காதல்...!

காதலில்
இரண்டு வகை தான்
இதுவரை
நாம் தெரிந்த வரை...!

அவசர காதல்....!

ஆழமான காதல்.....!

அறியாமல்..
புரியாமல்...
அவசர அவசரமாய் ....
புரிந்த காதல்....

வெற்றி பெற்றால் கூட ..
சோகம் தான்...!

இது அவசர காதல்....!



அறிந்தும்..
புரிந்தும்....
ஆழமாய்...
அனுபவித்த காதல்...

தோற்றால் கூட ...
சுகம் தான்....!

இது ஆழமான காதல்.....!

காதலென்பது..
சுகம் மட்டுமே ...
தர வேண்டும்..!

உடல் சுகம்...
என...
அசிங்கபடுத்த வேண்டாம்...!

இது உணர்வுகளின் சுகம்...!

காதலென்பதது..
வெற்றி அடையும் போராட்டம..!

உயிர்களை கொன்று..
என
நியாயப்படுத்த வேண்டாம்..!

இது..அன்பின் அடையாளம்...!


காதலென்பது தெய்வீகமானது...
என போற்றபபட வேண்டும்...!

குருட்டு தனமான..
மூடத்தனமான ...
நம்பிக்கைகள் கூடாது..!

இது...உறவுகளின் புனிதம்...!


காதலில் ...
வெற்றி மட்டுமே .....
குறிக்கோள் இல்லை..!

பிறரின் ...
தோல்வியும்....
தவிர்க்க படவேண்டும்...!

இன்னும் நிறைய....

ஒன்றை மட்டும் உறுதியாக்குங்கள்....!

ஒருவரை ஒருவர் புரிந்து
பிறக்கும் காதலில்...
முதலில்
காதல் என்ன என்பதை
புரிந்து கொள்வது தான்...
முதன்மையான..
முறையான ....
காதல்...!

காதல் புரிவதற்கு
முன்...
காதலை
புரிந்து கொள்வோம்....!

Friday, January 28, 2011

ஒப்பிட முடியா ... சந்தோசம் ...!

எந்த விஷயமானாலும்...
அதை -
மற்றவர்களோடு  ஒப்பிட்டு பார்த்து ....
நிறை இருந்தால் தவிர்ப்தும்...
குறை இருந்தால்...பொருமி தள்ளுவதும்....
இனி தவிர்த்து பாருங்களேன்...!
.
நிறைகளும்.....
குறைகளும்....
இணைந்ததுதான் வாழ்க்கை
என்பதை
நான்
சொல்லித்தரவேண்டிய
அவசியமே இல்லை...!

காலாகாலமாய்...
வரும் இயற்கை..அது....!
.
அழகே இல்லை
என குறைவாக எண்ணினால் ...
எது அழகு
என விளக்கம் கேளுங்கள்...!

புரிந்து விடும்...!
.
யாரும் மதிப்பதே இல்லை ....
என ஏக்கம் இருந்தால்...
பெருமை மிகுந்த செயல்களை ....
நீங்கள் புரிந்து இருக்கிறீர்களா..
என உங்களிடமே
வினா எழுப்பி பாருங்கள்...!

மாறிக்கொள்வீர்கள்...!
.
பொருளாதார குறைவால் 
தயக்கம் இருந்தால்...

நிலையான வாழ்க்கை வாழ்ந்த ....
அரசர்கள் முதல் செல்வந்தார்கள் வரை ......
பட்டியல் இட்டு ...

நிரந்தர நிம்மதி ....
உங்களை போல்...
அவர்களிடமும்  இருந்ததா
என அலசி பாருங்கள்....

உங்கள் வாழ்க்கை....
பெருமையாய் மாறிவிடும்...!
.
காதலில்-
வெற்றி இல்லாத....
குறை இருந்தால்...

வெற்றி பெற்ற காதலுக்கு
உதாரணம் என ......
அன்று முதல் இன்று வரை ....
யாரையும்..
ஏன்..
எதையும் சாட்சி...
தர முடியாது...!

தோற்ற காதல்கள் தான் .....
சாதனை சகாப்தம் படைத்தன ......
என்பதற்கு சான்றுகள் .....
பல உண்டு...!

உங்கள் காதல் தான்....
இதிலும் ஜெயிக்கும்...!
.
கிடைக்காத ஒன்றை ....
தேடி.... தேடி.....
ஓய்ந்துபோவதை விட...
உங்களோடு தொடரும் .....
நிஜங்களை
நிறைவாக அனுபவியுங்கள்....!

ஒப்பிட முடியா ...
உண்மையான..
திருப்திகரமான சந்தோசம் ...
உங்களுக்கு மட்டுமே ...
இனி எப்போதும்-
கிடைத்து கொண்டே இருக்கும்...!