Monday, January 31, 2011

எது கடமை...?

கடமை...

நமக்கு நாமே...
நிர்ணயித்து கொள்ளும்
பலவிஷயங்களை
நமது கடமை
என நம்புகிறோம்...!

வருமானம் ஈட்டுவது...
பெற்றோரை பராமரிப்பது...,
குழந்தைகளை வளர்ப்பது...
இறைவனை வழிபடுவது...
தான தர்மம் செய்வது...
குடும்பத்தோடு வாழ்வது...
இல்லறத்தில் ஒழுக்கமாய் இருப்பது..
நாணயமாய் நடப்பது...
நம்பிக்கையை கடைப்பிடிப்பது...
இப்படி பல..பல...

நமக்கு நாமே சரியென்று
சமாதானப்படுத்தும்
பல விஷயங்கள்
கடமை என்பதை விட
நமது மடமை
என
நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தால்
உங்களுக்கே தெரியும்...!

உங்கள் வீதியில் தெரு விளக்கு
செயலிழந்தது எப்போது..என தெரியுமா...!

உங்கள் வீட்டு சாக்கடை ..சுத்தமாக்க
எப்போதாவது முயன்றது உண்டா..!

பள்ளி..கல்லூரிகளில்..பணம் தர மறுத்து
அரசு பள்ளியில் கல்லூரியில் சேர்க்க துணிவு உண்டா...!
வருமான வரி,சொத்து வரி,தொழில் வரி,
மொத்தத்தில்
அரசாங்க வரிகளை முறையாய் செலுத்த முயன்றதுண்டா.......!

அக்கம் பக்கம் சுக விழாக்களில்
உரிமை கொண்டாடியது போல்...
எது வரை அவர்கள் துன்பங்களில்
தோள் தந்துள்ளீர்கள்...!

நடைமுறையில் அவசியமாக்கப் பட்டவைகளை
கடமை என பொய் வாழ்க்கை வாழும்
உங்கள் நிலையை மாற்றி
பிறருக்கு அவசியமான தேவைகளை
பூர்த்தி செய்வதே கடமை
என கடைப்பிடியுங்கள்..!

கடவுள் கூட
உங்கள் வழிபடுதலுக்கு துணை புரிவதையே
தன் கடமை என கடைப்பிடித்து கொள்வார்...!

எது கடமை என அறிந்து..
கவலை இல்லா வாழ்க்கையை
அனுபவிப்போம்...!

Sunday, January 30, 2011

பழி சொல்வதை.. அவமானமாய் கருதுவோம்..

பிறர் மேல் பழி சொல்வது ....
என்பது..
காலாகாலமாய்...
தொடரும் முரண்பாடு...!

உயர்வான நிலை ...
வரும்போது மட்டும்...
நம் உழைப்பையும்..
செயல்களையும் ..
உதாரணம் காட்டி...
பெருமை படுவதும்....!

தோற்கும் போதும்...
தவற விடும் போதும்....
மற்றவர்களை காரணம் காட்டுவதும்...

ஏன் ...
பலசமயம்
படைத்தவன் மேல் பழி போடுவதும்..
காலாகாலமாய்...
நம்மால் ....
கடைப்பிடிக்கபடும்...
கட்டாயங்கள்...!


நீங்கள்...
தவறு செய்ததால்தான் ....
பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றால்..
தயங்காமல்...
அதை ஏற்று...
சீர்படுத்தி பாருங்கள்...!

சரியென்று...
முடிவில்...
உங்களை .....
மதித்து ஏற்றுக்கொள்வார்கள்...!

உங்கள் மனசாட்சியும்...
உங்களை...
மதித்து விடும்...!

பிறர் மீது ....
அந்த பழியை சுமத்தினால்....
பயத்தினாலும்..
வெறுப்பினாலும்..
உங்கள் வாழ்க்கையின்
பெரும்பகுதி..
பாழாகிப்போகும்...!

உங்கள் ..
தவறுதலான செய்கை..
பிறரின்..
செயல்களில் தடை உண்டாக்கியது ...
என உணர்ந்தால்..
உடனே..
ஒததுக்கொள்ளுங்கள்...
பிறகென்ன...
உங்களை சரி படுத்த..
இந்த உலகமே ...
உங்களுக்கு துணை தரும்...!

இதை விட்டு ...
மறுப்பையும்..
காரணம் இல்லாமல் ...
பழியை தேடி பதிலளிததால்..

குற்றவாளியக்கப்பட்டு...
தவிற்கப்படுவீர்கள்...!

தவறு செய்தது ...
நீங்கள் என்றால்..
உங்கள் மேல் .....
மற்றவர்கள்
சொல்லும் பழியை....
தண்டனை என பார்க்காமல்..
மாற்றிக்கொள்ள...
மற்றுமொரு ....
வழியேன முடிவெடுங்கள்...
மகத்தான வெற்றி .....
உங்கள் வசம்...!

அதன் பிறகு...

நீங்கள் ...
தெரிந்தோ...
தெரியாமலோ ..
செய்யும் தவறுகள்..
திருத்தபடும்...

ஆறுதலான...
ஆலோசனையும் கிடைக்கும்...!

இனி-

பிறர் மீது ...
பழி சொல்வதை..
அவமானமாய் கருதுவோம்..

நம் மீது ...
பிறர் பழி சுமத்தினால்....
திருந்த கிடைத்த ...
வாய்ப்பாய் ஏற்று..
வாழ்வின் ...
வெகுமானமாய்
மாற்றி கொள்வோம்..!

Saturday, January 29, 2011

அவசர காதல்....! ஆழமான காதல்.....!

காதல்...!

காதலில்
இரண்டு வகை தான்
இதுவரை
நாம் தெரிந்த வரை...!

அவசர காதல்....!

ஆழமான காதல்.....!

அறியாமல்..
புரியாமல்...
அவசர அவசரமாய் ....
புரிந்த காதல்....

வெற்றி பெற்றால் கூட ..
சோகம் தான்...!

இது அவசர காதல்....!



அறிந்தும்..
புரிந்தும்....
ஆழமாய்...
அனுபவித்த காதல்...

தோற்றால் கூட ...
சுகம் தான்....!

இது ஆழமான காதல்.....!

காதலென்பது..
சுகம் மட்டுமே ...
தர வேண்டும்..!

உடல் சுகம்...
என...
அசிங்கபடுத்த வேண்டாம்...!

இது உணர்வுகளின் சுகம்...!

காதலென்பதது..
வெற்றி அடையும் போராட்டம..!

உயிர்களை கொன்று..
என
நியாயப்படுத்த வேண்டாம்..!

இது..அன்பின் அடையாளம்...!


காதலென்பது தெய்வீகமானது...
என போற்றபபட வேண்டும்...!

குருட்டு தனமான..
மூடத்தனமான ...
நம்பிக்கைகள் கூடாது..!

இது...உறவுகளின் புனிதம்...!


காதலில் ...
வெற்றி மட்டுமே .....
குறிக்கோள் இல்லை..!

பிறரின் ...
தோல்வியும்....
தவிர்க்க படவேண்டும்...!

இன்னும் நிறைய....

ஒன்றை மட்டும் உறுதியாக்குங்கள்....!

ஒருவரை ஒருவர் புரிந்து
பிறக்கும் காதலில்...
முதலில்
காதல் என்ன என்பதை
புரிந்து கொள்வது தான்...
முதன்மையான..
முறையான ....
காதல்...!

காதல் புரிவதற்கு
முன்...
காதலை
புரிந்து கொள்வோம்....!

Friday, January 28, 2011

ஒப்பிட முடியா ... சந்தோசம் ...!

எந்த விஷயமானாலும்...
அதை -
மற்றவர்களோடு  ஒப்பிட்டு பார்த்து ....
நிறை இருந்தால் தவிர்ப்தும்...
குறை இருந்தால்...பொருமி தள்ளுவதும்....
இனி தவிர்த்து பாருங்களேன்...!
.
நிறைகளும்.....
குறைகளும்....
இணைந்ததுதான் வாழ்க்கை
என்பதை
நான்
சொல்லித்தரவேண்டிய
அவசியமே இல்லை...!

காலாகாலமாய்...
வரும் இயற்கை..அது....!
.
அழகே இல்லை
என குறைவாக எண்ணினால் ...
எது அழகு
என விளக்கம் கேளுங்கள்...!

புரிந்து விடும்...!
.
யாரும் மதிப்பதே இல்லை ....
என ஏக்கம் இருந்தால்...
பெருமை மிகுந்த செயல்களை ....
நீங்கள் புரிந்து இருக்கிறீர்களா..
என உங்களிடமே
வினா எழுப்பி பாருங்கள்...!

மாறிக்கொள்வீர்கள்...!
.
பொருளாதார குறைவால் 
தயக்கம் இருந்தால்...

நிலையான வாழ்க்கை வாழ்ந்த ....
அரசர்கள் முதல் செல்வந்தார்கள் வரை ......
பட்டியல் இட்டு ...

நிரந்தர நிம்மதி ....
உங்களை போல்...
அவர்களிடமும்  இருந்ததா
என அலசி பாருங்கள்....

உங்கள் வாழ்க்கை....
பெருமையாய் மாறிவிடும்...!
.
காதலில்-
வெற்றி இல்லாத....
குறை இருந்தால்...

வெற்றி பெற்ற காதலுக்கு
உதாரணம் என ......
அன்று முதல் இன்று வரை ....
யாரையும்..
ஏன்..
எதையும் சாட்சி...
தர முடியாது...!

தோற்ற காதல்கள் தான் .....
சாதனை சகாப்தம் படைத்தன ......
என்பதற்கு சான்றுகள் .....
பல உண்டு...!

உங்கள் காதல் தான்....
இதிலும் ஜெயிக்கும்...!
.
கிடைக்காத ஒன்றை ....
தேடி.... தேடி.....
ஓய்ந்துபோவதை விட...
உங்களோடு தொடரும் .....
நிஜங்களை
நிறைவாக அனுபவியுங்கள்....!

ஒப்பிட முடியா ...
உண்மையான..
திருப்திகரமான சந்தோசம் ...
உங்களுக்கு மட்டுமே ...
இனி எப்போதும்-
கிடைத்து கொண்டே இருக்கும்...!

Thursday, January 27, 2011

கட்டாயம்....!

பிடிக்காத..
புரியாத...
தெரியாத..
முடியாத..
விளங்காத... 
ஏற்றுக்கொள்ள முடியாத...
இப்படி-
பல விஷயங்களில் அடங்கிபோகும்...
அனைத்தையும் செய்யவேண்டும் ....
என -
யார் நினைத்தாலும் ....
அது -
கட்டாயம் எனபதில் அடங்கிவிடும்...!

கட்டாயம் ..
என ...
சொல்லும் போதும்..
கேட்கும் போதும்...
நமக்குள் ஒரு வெறுப்பு...
வந்து போவதை ..
உணரமுடியும்...!


சில விஷயம் ...
கட்டாயம் ...
என்பது..நமக்கே தெரியாமல் ....
நடந்தால் ...
அது -
அடிப்படை ...
கடமை என்று கூட சொல்லலாம்...!

உயிர் வாழ மூச்சு...

நலமுடன் வாழ உணவு...!
இப்படி நிறைய......!

ஆனால்-
கட்டாயம்..
என்ற விஷயத்தில் தான்.....
நம் வாழ்க்கையின் ...
எல்லா விஷயங்களும் அடங்கும்...
என நினைத்து வாழ்ந்தால்..
நிம்மதி....
அமைதி..
அன்பு...
ஏன் -
எதையுமே ....
எதிர்பார்க்க முடியாது....!

அன்பை வேண்டி ....
கட்டாயப்படுத்தினால்...
கோபம்..
வெறுப்பு..
நிராகரிப்பு...
சிலசமயம்-
கொடூரம் கூட பிறக்கும்...!

உழைப்பை ....
கட்டாயப்படுத்தி வரவழைத்தால்....
நஷ்டம் நிச்சயம்....!

மன்னிப்பு வேண்டி...
கட்டாயப்படுத்தினால்...
மனிதாபிமானம் ..
மரத்து போகும்..!

உதவி நாடி ..
கட்டாயப்படுத்தினால் ...
யாசகமாய்(பிச்சையாய்) மாறும்...!

கடன் வேண்டி
கட்டாயப்படுத்தினால்.....
அடிமையாக்கப்படுவோம்...!

ஆதரவு வேண்டி
கட்டாயப்படுத்தினால்....
தனிமை படுத்தப்படுவோம்...!

இப்படி -
கட்டாயமே ...
வாழ்வின் ஆதாரம் ...
என-
வாழ்ந்தால்...
நரக வாழ்க்கை ....
நிச்சயம்...!

கட்டாயம் -
என்ற சொல்..
உங்கள் வாழ்க்கைக்கு ...
கட்டாயம் இல்லை ...
என -
முடிவெடுங்கள்...!

உங்கள் ...
சொல்...
செயல்...
வாழ்க்கை ...
என-
எல்லாமே ....
சுகமாக மாறும்...!

இது..
தான் உண்மையான
கட்டாயம்....!

காலத்தின்....
கட்டாயம்....!

Wednesday, January 26, 2011

நீங்கள் திறமைசாலி...!

மனிதனாய் பிறந்த....
ஒவ்வருவரிடமும்....
நிறைய..
திறமைகள்..
மறைந்து..
ஒளிந்து..கிடக்கின்றன...!

தனது...
திறமைகளை தெரிந்து கொண்டு ...
சரியான சமயத்தில் ..
வெளிப்படுத்திய மனிதன் ...
மாபெரும் வெற்றியில் ...
பயணிக்கிறான்...!

தனது ...
திறமைகள் தெரிந்தும் ...
வெளிப்படுத்த தயங்கியவன்...
ஏக்கத்துடன்...
முடங்கி போகிறான்...!


தனது..
திறமைகள் புரிந்து..
வெளிப்படுத்த மற்றவர்களின் ...
ஆதரவை எதிர்பார்ப்பவன்...
ஆண்டாண்டு காலமானாலும்..
அடிமை வாழ்க்கையை ...
அனுபவித்தே ....
முடிந்து போகிறான்....!

உங்கள் திறமைகள்..
உங்கள்..
புதையல்...!

எது ...
உங்கள் திறமைகள்..
என  ...
மாபெரும் ஆராய்ச்சியில்....
காலம் வீணாக்கப்படுவதைவிட....
நடைமுறையில் ....
உங்களின் ...
அனைத்து செயல்களும் ....
உங்கள் ...
திறமைகளின் வெளிப்பாடு .....
என நம்புங்கள்...!

நல்லதொரு வாழ்க்கை...
நாளும் ...
உங்களோடு தொடரும்...!

எல்லோரும்....
திறமையயாய் ...
வாழ்கிறார்கள் ..
என ..
நம்பும் உங்கள் எண்ணம்...
எவ்வளவு தவறானது ....
என ...
அந்த எல்லோரிடமும் ...
மனம் விட்டு பேசிப்பாருங்கள்....!

கானல் நீர் வாழ்க்கை எது
என்பது
உங்களுக்கு புரியும்...!

தெளிவும் பிறக்கும்...!

திறமைகளை....
நீங்கள் தேடும் அந்த நேரங்களில்...
உங்கள் திறமைகள் ....
உங்களுக்குள் இருந்து....
வெளிப்பட ...
உங்களை தேடும்....!

நீங்கள் திறமைசாலி...!

மற்றவர்கள்...
இதை ....
ஏற்றுக்கொள்வதைவிட....
நீங்கள் ...
ஒத்துக்கொண்டு...
நடைமுறை படுத்துங்கள்....!

வளமான வாழ்க்கையின்
வெற்றிப்பயணம்
உங்கள் வசம்..!

Tuesday, January 25, 2011

புது யுகம் படைத்த பெருமிதம் ....

எந்த இடத்தில்....
யார் கிடைத்தாலும் புலம்பும்....
மனோபாவம் உங்களிடம் இருக்கா...?

எதைப்பற்றி...என்ற வரைமுறை இல்லாமல்....
...யாரைப்பற்றி.. என்ற அறிமுக தேவையில்லாமல்....
ஏன் என்ற... கேள்விகளை எழுப்பாமல்....
எதற்காக என்ற.. பொறுப்பற்ற தன்மையுடன்....
நேரத்தை கொன்று...
எதிரில் அகப்பட்ட...
அத்தனை..
பேர்களுடைய...
உணர்வுகளை...உதாசினப்படுத்தி...
மொத்தத்தில்
உங்களின் சுயமாரியதையை..
சமாதியாக்கி...
எதையும்....
புலம்புபவர்களா நீங்கள்...?

இனி....

உங்கள் புலம்பல்களை மாற்றி...
எண்ணங்களில் நியாயத்தை பிரதிபலித்து....
வெளிப்படுத்தி பாருங்கள்...!

உங்கள் வருகைக்காக...
எல்லோரும் காத்திருக்க தொடங்கி விடுவார்கள்...!


பெற்றவர்கள்..அல்லது..பிள்ளைகள்... மீது உங்களுக்கு...
வருத்தம் இருந்தால்...
அதை அவர்களிடமே..விவாதியுங்கள்....!
அவரை மட்டும் விட்டு...
மற்ற எல்லோரிடமும்...
புலம்பாதீர்கள்....!

நண்பன் தவறு செய்தால்...
நேர்மையை கற்று கொடுத்து..
சரி செய்ய பாருங்கள்....
அதை விட்டு...
நொடிக்கொருமுறை குற்றம் காட்டி...
அவனிடமே..புலம்பாதீர்கள்...!


நேசிப்பவர்களிடம்...
சந்தேகம் இருந்தால்..
அன்பால் விசாரித்து...
அரவணைத்து பாருங்கள்....
ஆனால்...
ஒவ்வொரு செயலும் துரோகம்தான்......
என குத்தி காண்பித்து....
அவர்களிடமே புலம்பி....
அவர்களையே வெறுக்காதீர்கள்...!

உங்கள் புலம்பல்கள் ....
பூகம்பமாய் மாறி ...
உங்களையும் சேர்த்து ....
அழிப்பதற்குள்...

பூக்களின் மென்மையுடன்....
பூரிப்பாய்..
பேச்சில் ஆறுதல்களை...
வெளிப்படுத்தி பாருங்கள்....!

புது யுகம் படைத்த பெருமிதம் ....
உங்கள்...
வாழ்க்கை முழுவதும் தொடரும்...!

Monday, January 24, 2011

நான் ...யார்...?என்ன...?

பதட்டம் நிறைந்த...செயல்பாடு....!

சட்டென்று 
உணர்ச்சிவசப்பட்டு
கண்கள் கலங்குவது....!

ஏதாவது குறைகளை...
தேடி கண்டுபிடித்து...
மட்டம் தட்டி சந்தோசப்படுவது...!

எனக்கு மட்டும் தான்
எல்லாம் தெரியும்.... 
என பலமுறை....
பல இடங்களில்....
சொல்லி சொல்லி...
பெருமை பட்டு கொள்வது.....!

மிக சிறிய வேலையை
அரைகுறையாய் முடித்து இருந்தாலும்....
பலர் பாராட்டினார்கள்...
என பொய் பிரகடனம்..செய்வது....!

குறிப்பாக....

பார்த்த...
பழகிய...
அத்தனை பேர்களையும்....
முன்னால் பாராட்டி...
பின்னால் பழி பல சொல்வது.....!

முக்கியமாக....

இதுவரை
வாசித்த அத்தனையும்
தனக்கு பொருந்தாது..
தேவையுமில்லை...
என தவிர்த்து.....
ஆனால்...
தனிமையில்....
தவிப்பதும்...
தடுமாறுவதும்....!

இதெல்லாம்
உங்களுக்கும்.......
உங்களொடும்....
நடந்திருந்தால்...
உணர்த்தியிருந்தால்......

நீங்கள்....
திருந்தி..
திருத்திக்கொள்ள.....
இந்த நொடியிலிருந்து...
முடிவெடுத்து....
செயல்பட்டு பாருங்கள்...!

ஏனென்றால்....
இதுவரை  வாசித்தது....எல்லாம்..
மனிதனாய் பிறந்த....
எல்லோருக்கும்...
எப்படியாவது...
வாழ்வில் வந்து போகும்...
சராசரியான...சம்பவம்...!

உணர்ந்து....
தவிர்க்க...
தயங்கியவன்...
தலை குனிந்தே வீழ்கிறான்...!

புரிந்து...
தடுத்து...
முன்னேறியவன்...
தலைவன்..என
தரணியை..ஆள்கிறான்...!

Sunday, January 23, 2011

புன்னகை மட்டுமே எதையும் சாதிக்க முடியும்..

நண்பன் ஒருவனை....பெறவும் சரி.....
ஆயிரம் எதிரிகள் ....நம்மை நட்பாக்கி கொள்ளவும் சரி....
நம்மால் மட்டும் முடியும் என
மனப்பூர்வமான முடிவுடன்....
சற்றே புன்னகைத்து பாருங்கள்...!
...உங்கள் பலம்....உங்களுக்கே தெரிந்துவிடும்..!

புன்னகை மட்டுமே எதையும் சாதிக்க முடியும்..
இது
நிரூபிக்க பட்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு...!
சந்தேகம் இருந்தால்...
உங்கள் முன் யாராக இருந்தாலும்..
உங்கள் முகத்தில் மட்டும்.. அல்லாமல்..
உணர்விலும்..
செயல்பட்டிலும்..
புன்னகையை தவழ விட்டு...பேசிப்பாருங்கள்....
ஆராய்ச்சியை..உண்மை என நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள்..!

புன்னகையுடன்
உங்கள் எண்ணங்களை....வெளிப்படுதுங்கள்...!
வாழ்க்கையின் வண்ணங்கள்..வசப்படும்....!

புன்னகையுடன்..
உங்கள்..எதிர்பார்ப்புககளை...புரிய வையுங்கள்...!
புது யுகம் படைத்த பூரிப்பு உங்களுக்கே இனி சொந்தம்...!

புன்னகையுடன்
உங்கள் எதிர்ப்பை .....நியாயப்படுதுங்கள்.....
எதிர்பார்க்காத வெற்றி உங்களுக்கே சமர்ப்பணம் ஆகும்..!

புன்னகையுடன்
உங்கள் தவறுகளை...ஏற்று..சரி செய்து பாருங்கள்...!
நல்லவர் என
நாம் காலம் கடந்த பின்னும் உதாரணம் காட்டப்படுவோம்...!

புன்னகை
தொழிலொடு இணைந்தால்...
வளமான உலகம் உங்கள் வசம்...!

புனகையை
உங்கள் சக ஊழியர்களோடு பகிர்ந்தால்...
கலகாலமானாலும்...
உங்களிடம் கஷ்டமே நெருங்காது...!

ஆனால்...

புன்னகையை...
இடம்...பொருள்...அறியாமல்
வெளிப்படுத்தும் போது..
ஏளனம் செய்யப்படுவோம்..!...!

அளோவோடு புன்னகைப்போம்...!
வாருங்காலத்தை நாம் வசமாக்குவோம்....!

மனம் விட்டு இரசிப்போம்...!

நமக்குள் இருக்கும்....
ரசிப்பு தன்மையை நம்மில்...
எத்தனைபேர்... எத்தனை முறை..
இதுவரை கவனித்திருக்கிறோம்.....!
விரல் விட்டு எண்ணிவிடலாம்...!
...
வித..விதமான...
கேள்விகள் கேட்கும் மழலைகளை......
ரசிக்க தெரியாமல்...
அதிகப்பிரசங்கி என பட்டம் சூடி...
கேவலப்படுத்தி இருப்போம்...!

வானத்தில்..
வித...விதமான கோலம் போடும் மேகங்களை...
ரசிக்க தெரியாமல்....
மழைகாலங்களில் ..
மட்டும்...அண்ணாந்து பார்த்து......
நிறம் பார்த்து.......
மழை நிற்கும்....
ஜோசியம் சொல்வோம்....!

மனைவியின்...,
தாயின்...
சமையலை..
இரசித்து பாராட்டாமல்...
அவசரப்படுத்தி...
அள்ளி வாயில் திணிததுக்கொண்டே.....
வேலைக்கு கிளம்பி இருப்போம் ..உணர்வுகளை கொன்று.!


பூக்கும் மலர்களை
ரசித்ததை விட....
பறித்துதான் பழக்கம்....!


இனி..
ஒவ்வொரு...
நொடியையும்....
மனம் விட்டு இரசிப்போம்...!

ரசிக்கும் மனிதனாய்
புது பிறப்பெடுப்போம்....!

Friday, January 21, 2011

நமக்கு தான்....அறிவுரை

அறிவுரை என்பது மற்றவர்களுக்கு என்பதைவிட...நமக்கு தான் என்ற உணர்வு வேண்டும்...!

நம்மால் கடைப்பிடிக்க முடிந்ததை மட்டுமே அறிவுரையாக மற்றவர்களுக்கு உபதேசிப்பது தான் சரி...!

எதிர்மறையான அறிவுரைகள் ஏற்று கொள்வது என்பது எதிர்பார்க்க முடியாதது...!

எல்லாம் முடிந்து நஷ்டமடைந்து....மனமுடைந்து போனவரிடம்....
அதிக கடன் ஆபத்து என் அறிவுறுத்தினால்...பயன் என்ன....?

பிறரின் வெற்றிக்கு அடிப்படை....
நீங்கள் ஆரம்பதில் சொன்ன அறிவுரை தான்.... என்று ஊரெல்லாம் சொல்லி திரிவது...
உங்களுக்கு வேண்டும் என்றால் பெருமை....
ஆனால்...

நீங்கள் தவிர்க்க படுவீர்கள்...!

உலகம் படைக்கப்பட்ட நாளில் இருந்து...
எதற்கும் கட்டுப்படாத காதலுக்கு...
உங்கள் அறிவுரை....தடை.. என்ன செய்து விடமுடியும்...!

செய்யாததையோ..

மறந்ததையோ...
விடுபட்டு போனதையோ...
முடியதையோ...
எத்தனை முறை அறிவுறுத்தினாலும்..
பலனை எதிர்பார்க்க முடியாது..!

ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள்....

பிறருக்கு....நீங்கள் தரும் அறிவுரையைவிட....
உங்களுக்கு...

யாரும் அறிவுரை செய்யும்படி வாழ்ந்துவிடாதீர்கள்...!

Thursday, January 20, 2011

மனம்....! என்ன...?எது....?எப்படி...?

மனம்....!
என்ன...?எது....?எப்படி...?
இப்படி நாம் ஆராய்ந்தாலும்....உண்மையான .... பதில்...கிடைக்காது...!
மனம் என்பது யார் என... உங்களையே கேட்டு பாருங்கள்...?
இதென்ன அபத்தமான...கேள்வி என்று கேட்டவரை ஏளனமாய் பார்ப்பீர்கள்...!
...மனம் என்பது நீங்கள்தான்...!!!
எப்படி ..?.எப்படி...?எப்படி...?என உண்மை தெரிந்த பயத்தில் நீங்கள் படும் பதட்டமும் தெரிகிறது...அதை மறைக்க முயல்வதும் தெரிகிறது....!
மனம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திய மாய வலை...!
ஆனால், சிக்கிதவிப்பது நாம்தான்...!

நம் ஏக்கம்..இயலாமை...பொறாமை....
பயம்...கோபம்...வெறுப்பு....துரோகம்...ஏளனம்...
இப்படி பல வடிவங்களின் மொத்த வெளிப்பாடே.....நாம் மனம்.....!
இந்த மனசு இதை நினைத்து துடிக்கிறதே.....இப்படி புலம்புபவர்களை.....

என் மனசு என்ன சொல்லுதோ அதுதான் சரி..... இப்படி அதிரடியாய் ஆட்கொள்பவர்களையும்....

மனசே விட்டு போச்சு..வெறுததுட்டேன்....இப்படி விரக்தியாய் பின் வாங்குபவர்களையும்...

தனி தனியாய் பேசி பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும்....!

மனசு என்ற முகமூடிக்கு பின்னால் அவர்கள்தான் மறைந்து வெளிப்படுகிறார்கள் என்று...!
மனம் என்பது...
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகால்....!

உங்களை கட்டுப்படுத்த கூடாது...!

ஏன்...பல சமயம்....உங்கள் சுயரூபத்தை..வெளிப்படுத்திவிடும்...!
மனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை....!

மனம் என் சொல்லுக்கு கட்டுப் பட மறுக்கிறது....!

என வேசம் கட்ட...காட்ட...வேண்டாம்...!
மனம் என்பதை
மறுத்து...
மறந்து...
மறைத்து...
இனி வாழ தொடங்குவோம்...
மனிதன் என பெருமை கொள்வோம்...!

Wednesday, January 19, 2011

அளவுக்கு அதிகம் கிடைத்தால்...!?!?

தேவைக்கு அதிகம் எது...?
முரண்பாடான பல பதில்கள் கிடைக்கும்.....ஆனால் விடை கிடைக்காது....!
நேரம் அளவுக்கு அதிகம் கிடைத்தால்...சோம்பல் பிறக்கும்...!
பணம் அளவுக்கு அதிகம் கிடைத்தால்....பயம் மட்டும் அல்ல பொய்யும் வெளிப்படும்...!
பாசம்அளவுக்கு அதிகம் கிடைத்தால்...எதிர்காலம்,நிகழ்காலம் எல்லாம்....பாழகிப்போகும்...!
உழைப்பை அளவுக்கு அதிகம் வெளிப்படுத்தினால்...உடலும் மனமும் காயப்பட்டு போகும்...!
அன்பை அளவுக்கு அதிகம் கொடுத்தால்....அடிமையாக்கும் சக்தி நம்மை அறியாமலே நம்மில் பிறந்துவிடும்...!
கோபத்தை அளவுக்கு அதிகம் வரவழைத்தால்.....முற்றும் துறந்த முனிவன் கூட..தீவிரவாதியாக மாறிப்போவான்...!
காமத்தை அளவுக்கு அதிகம் தூண்டினால்....கண்ணில் விழும் எல்லாமே தாசியாக மாறி தெரியும்...!
பொறுப்புகளை அளவுக்கு அதிகம் ஏற்று கொண்டால்...எல்லோரையும் அதிகாரம் செய்யும்...ஆணவம் பிறக்கும்...!
இப்போது தெரிந்திருக்கும்...புரிந்திருக்கும்....
உங்களுக்குள் எது அதிகம் என....
அதை...அடக்குங்கள்.....
உங்கள் உள்ளங்கைகளில் உலகம் மட்டும் அல்ல..
நீங்களே  அடங்கி போவீர்கள்...!

Tuesday, January 18, 2011

உணர்வோம்...உயர்வோம்.....!

உணர்வுகள்...!மதிப்பது,ஏற்றுக்கொள்வது,தருவது...என எல்லாவற்றையும் விட....புரிந்து கொள்வதுதான் முக்கியம்...!வயதில் மூத்தவர்கள் சபையில்.....தலைவன்,முதலாளி,அறிஞன்,என யாராக நீங்கள் இருந்தாலும்...கால்மேல் கால் போட்டு அமர்ந்து...உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவது உங்கள் அறியாமை..... என நீங்கள் சமாதானம் சொன்னாலும்...சபையின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லை என சொல்லலாம்...!குதூகலமான சூழ்நிலைகளில்...தாமதமான குழந்தை பேறு,,,வேலையின்மை....திருமண பொருத்தம் அமையாமை...போன்ற கலாகாலமாக..தொடரும் பிரச்சனைகளை..அக்கறையுடன்..ஆறுதலாய்..விசாரிப்பது என்பது..உங்கள் பொதுநல போக்கு என நியாயப்படுத்தினாலும்..சம்பந்தப்பட்ட நபர்களின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.. என்பதைவிட கொச்சை படுத்திவிட்டீர்கள் என்பதே உண்மை...!சாலையில் சரசத்துடன் உரசி போகும் இளம் ஜோடி.....பஸ்ஸில்,இரயிலில்....நகர்ந்து உட்கார்ந்து இடம் தராதது....பொது இடங்களில் நீங்கள் மட்டும் சாப்பிடுவது....இப்படி வரிசை படுத்தி..உங்களை நீங்களே சமாதானம் செய்யாமல்....உதாசீனம் செய்த உணர்வுகளை..பட்டியல் இட்டு பாருங்கள்....!உங்கள் உணர்வே உங்களை மதிக்காது...!இனி...சரியாக உணர்வோம்...உயர்வோம்.....!

Monday, January 17, 2011

"பாராட்டு...!"

"பாராட்டு...!"நம் செயல்களுக்கு...ஊக்கம்...என்றாலும்...ஒருவிதத்தில்...நம் முன்னேற்றத்திற்கான தடை எனலாம்...!" பாராட்டு..."நமக்கு கிடைக்கும்  வரை தான் முழுமையான ஈடுபாடு...முடித்தே ஆக வேண்டும் என்ற வெறி....சுறுசுறுப்பான..உழைப்பு...இப்படி எல்லாமும் நம்மை அறியாமல்...நாமே நடைமுறை படுத்தப்படும் நெறிமுறைகளக இருக்கும்..!பாராட்டு கிடைத்த பிற்கு...நம்மை அறியாமல் நமக்குள் ஒரு அகங்காரம்...ஆணவம்...பெருமை...என எல்லாம் சேர்ந்து நம்மை மற்றவர்களிடம் சிறுமை படுத்திவிடும்...நம் செயல்களுக்கும் தடை போட்டுவிடும்...!நமக்கு கிடைக்கும் பாராட்டுககளை...படிக்கட்டு என நினைப்போம்...!ஆரம்பம் தான் பாராட்டு..... வெற்றியானமுடிவு என்பது தூரத்தில் உள்ளது என செயல்படுவோம்...!

Sunday, January 16, 2011

ஏக்கம்...!

ஏக்கம்...!உலகில் எதை கண்டும் ஏங்காதவர்களை...வரிசைப்படுத்துங்கள்.....முடியாது....யாருமில்லை....!முற்றும் துறந்த முனிவர்கள் கூட அமைதி,சாந்தம்,தனிமை,இறைவன்,அருள்.....இப்படி எதற்காவது ஏங்கி கொண்டே இருப்பார்கள்...!அதனால்...நம் ஏக்கம் அநாகரிகமானது என உங்களுக்குள் தடை போட்டு கொள்ளாதீர்கள்...!எது சரியானது...  என வரையிருததிக்கொள்ளுங்கள் எந்த ஏக்கம் சரியேன புரியும்...!உங்கள் ஏக்கத்தை..உங்கள் உழைப்பொடு இணைத்து பாருங்கள்...சிறந்த தொழில் அதிபர் ஆகி பலருக்கு உங்களால் வழி பிறக்கும்...!உங்கள் ஏக்கத்தை..உங்கள் அணுகுமுறையில் கொடுத்துபாருங்கள்....உங்கள் அன்புக்கு கட்டுப்பட்டு உங்கள் சொல்லை..மதிப்பார்கள்...!உங்கள் ஏக்கத்தை..உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக்கிவிடுங்கள்...பந்தம் இணைந்த சொந்தம் கிடைக்கும்...!கற்பனையில் ஏக்கம் வேண்டாம்..கனவுகளாகவே போய்விடும்...!காதலில் ஏக்கம் வேண்டாம்..சோகமே வாழ்க்கையாகிவிடும்...!பணம்,பொருளுக்கு...ஏக்கம் வேண்டாம்...பேராசை..உங்களை பாழ்படுத்திவிடும்...!தூக்கததிற்கு ஏக்கம் வேண்டாம்....சோம்பேறி ஆகிவிடுவோம்...!
நம் ஏக்கத்தை நெறிபடுத்தி கொள்வோம்...!நம் வெற்றி வாழ்க்கையை பார்த்து மற்றவர்களை...ஏங்க..வைப்போம்...!

Saturday, January 15, 2011

"பயம்....!"

"பயம்....!"

நமது இயலாமையின் வெளிப்பாடு....என
உங்களை நீங்களே
சமாதானம் செய்து பாருங்கள்....
பயத்தின் உண்மை
உங்களுக்கே தெரிந்துவிடும்...!

பயப்பட்டு கொண்டேருந்தோம் என்றால்...
எதுவுமே..
ஏன்...
எல்லாமே...விரக்தியாகும்...!

பயம் என்ன என்பதை விட..
ஏன்  என்பதை விட...
எப்படி என்பதை விட..
எதனால் என்பதை விட...
எப்போது என்பதை விட....
பயம் ஆரம்பித்த
அந்த முதல் நொடியை...
ஆராய்ந்து  பாருங்கள்....!
உங்கள் இயலாமை என்ன...
எது...எப்படி...எங்கே..
எதனால்.. என
எல்லாமே.. புலப்படும்..
அப்புறமென்ன
அதை சரி செய்துவிடுங்கள்....
பயம் எங்கே போய்
யந்து ஒளிந்துவிட்டது
என
நீங்கள் தேடினால் கூட தெரியாது....!

நம் தாய்
பிரசவம் கண்டு பயந்திருந்தால்...
நம் பிறப்பு ஏது..?

சத்தத்தை கேட்டு பயந்திருந்தால்
நம்மால் பேச்சை...
மொழியை...
கற்றுக்கொள்ள முடியுமா...?

முதல் நடை தடுமாறிய போது
பயந்திருந்தால்....
முடங்கிபோயிருப்போம்...!

இப்படி அடுக்கி கொண்டே போனால்...
உங்களுக்கு வாழ்க்கையின் பயத்தை
அறிமுக படுத்தி விடும்...!

பயத்தை அறிவோம்....
வெற்றி பலனை அனுபவிப்போம்....!

Friday, January 14, 2011

"எதிர்பார்ப்புகள்"

"எதிர்பார்ப்புகள்".....மற்றவர்களை... பழி சொல்ல நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு வழி....!அன்பை கட்டாயமாக எதிர்பார்த்தால்...வெறுப்பு தான் கிடைக்கும்..!உதவியை கட்டாயமாக எதிர்பார்த்தால்...நிராகரிப்பு...தான் கிடைக்கும்...!நம்  எதிர்பார்ப்பு யாரையும் நிர்ப்பந்தம்..செய்வது போல் இருக்கக்கூடாது...! நம்  எதிர்பார்ப்பு நமக்கு வேண்டும் என்றால்...அவசியமாக இருக்கலாம்...!மற்றவர்களுக்கு... அது அநாவசியம் ஆகத்தான் தெரியும்...!மற்றவர்களின் எதிர்பார்ப்புககளை...நீங்கள் எந்த அளவு நிறைவேற்றி இருப்பீர்கள் என கணக்கெடுத்து பாருங்கள்...!நீங்கள் சொல்லும் சமாதானம்...உங்களுக்கே...ஏன்  உங்கள் மனசாட்சிக்கு கூட பொருந்தாது...!இனியாவது இதை கடைப்பிடிக்க முயலுங்கள்....."எதிர்பார்ப்புககளை யாரிடமும் கட்டாய படுத்துவதும் கூடாது.....மற்றவர்களின்.. எதிர்பார்ப்புககளை நிராகரிக்கவும்...கூடாது..!"

Thursday, January 13, 2011

ஆரம்பம்...முடிவு....நம்பிக்கை...!

ஆரம்பம்...முடிவு....
இரண்டையும் எதிர்கொள்ள துணிவு...தைரியம்....என்பதை விட நம் மீத...ு நமக்கே நம்பிக்கை வரவேண்டும்...!
தள்ளிப் போடப்படும் ஆரம்பம்...முடிவை சீக்கிரமே நம்மிடம் சேர்த்து விடும்...!
ஆரம்பம் செய்வததுற்க்கு முன் யோசிக்கலாம்....திட்டம் போடலாம்....
ஆனால், ஆரம்பித்த பிறகு மறு யோசனை என்ற என்ணத்திற்கு இடமில்லை...!
அதைப்போலவே....முடிவு உங்களுக்கு சாதகமாகவே..வரவேண்டும் என செயல்பட்டால்...உங்கள் தோல்வி உங்களை முடக்கி போட்டு விடும்...!
ஏன் வெற்றியும் கூட உங்களை முன்னேற விடாமல் தடுத்து விடும்...!
ஆரம்பிக்கும்போது நம்பிக்கையும்....முடிக்கும் போது பொறுமையும் இருந்தால்...
உங்களை தலைவன் என்று கொண்டாட எல்லோருக்கும் நம்பிக்கை வரும்...!

பொங்கல் வாழ்த்துகள்

வாசல்கள் தோறும் மீண்டும் திண்ணை வேண்டும்...!
ஒவ்வொரு வேளையும் தரையில் தட்டை வைத்து சாப்பிடும் வரம் வேண்டும்...!
பொங்க வைத்த சோறும்...மண் பானையின் குளிர்ந்த நீரும் வேண்டும்...!
வாரம் தோறும் தாயின் சொந்தமும்..தந்தையின் பந்தமும்...வந்து போக வேண்டும்..!
வீதிகள் தோறும்  குழந்தைகள் இருட்டும் வரை பாண்டி விளையாட வேண்டும்...!
அந்தி சாய்ந்த பிறகும்..கொல்லைப்புரங்களில் பெண்களில் பேச்சு சத்தம் கேட்க வேண்டும்...!
மழலைகள்.. பாட்டியின் கதைகள்...பூச்சாண்டி  பயத்தில் சாப்பிட வேண்டும்...!
எல்லாம் சரி........
அடுத்த வருடம் பொங்களை கொண்டாட நியாபகமவது.....வரவேண்டும்....!

Monday, January 10, 2011

இன்று மட்டுமே நிஜம்

இன்றுமட்டும் ஜெயிப்பவர்களின் வேலை...பலமுறை தோற்றதை பெருமையாய் நம்மீது திணிப்பதே ..!

தோற்றவர்களின் இன்றைய நிலை..... பலமுறை ஜெயித்து வந்திருந்தாலும்  இன்றைய தோல்விமட்டுமே சுட்டி காட்டி ஒதுக்கி வைக்கப்படுவதே...!

நேற்றைய வெற்றி கனவு....!
நாளைய வெற்றி கற்பனை...!
.இன்று மட்டுமே நிஜம்.. அது வெற்றி என்றாலும் சரி...!
தோல்வி என்றாலும்... சரி..!

Sunday, January 9, 2011

நம்பிக்கை.... நிரந்தரம் இல்லை...!

நம்பிக்கை...!
நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கை....! பிறர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை....!
மற்றவர்கள் மேல், நாம் உருவாக்கும் நம்பிக்கை, அவர்களின் செயல்கள் தான் என்றாலும், நம் எதிர்பார்ப்பு அதில் மறைந்து இருக்கும்...!
நம்மீது மற்றவர்களால், உருவாகும் நம்பிக்கை, நிரந்தரம் இல்லை, என எப்போதும் நினைத்து, செயல்பட்டு பாருங்கள்...  உங்கள் மீது உங்களுக்கே, பெருமையான நம்பிக்கை வந்து விடும்...!

புரிந்து கொண்டீர்களா...?

                       புரிந்து கொண்டீர்களா...?

புரிந்துக்கொள்வது என்பது தான் எதற்குமே அடிப்படை. !
சொற்களை தவறாக புரிந்தால் செயல்கள் வீணாகும்...!
செயல்கள் தவறாக புரிந்தால் நஷ்டம் தான் மிஞ்சும்..!
நேசத்தை தவறாக புரிந்தால், பகைமை வெளிப்படும்..!
அன்பை தவறாக புரிந்தால்,விரக்தி தான் மிஞ்சும்..!
காமத்தை தவறாக தவறாக புரிந்தால் அவமானம்தான் மிஞ்சும்..!
நம்மை நாம் தவறாக புரிந்தால்,ஆணவம் வெளிப்படும்...!,
நம்மை மற்றவர்கள் தவறாக புரிந்தால், தனிமை தனிமை படுத்த படுவோம்..!

உங்களிடம் குறைகள் இருக்கா....?

                   உங்களிடம் குறைகள் இருக்கா....?


குறைகள்,யாரிடம் அதிகம் என ஆராய்ந்து ஆராய்ந்து...நம்மை நாம் உயர்த்தி, சந்தோசப்பட்டு, சமாதானாமாகி இதுவரை வாழ்ந்தது போதும்...!
இனி, நம்மிடம் தான் குறைகள் தொடங்குகின்றன என முடிவெடுத்து திருத்தி,திருந்த பாருங்கள்,திருப்திகரமான சந்தோசம் எது என்பதை, உங்கள் ஆத்மா,ஏன்...மனசாட்சி கூட உங்களுக்கு புரிய வைத்து விடும்...!
இனி,, மற்றவர்களை குறை கூறிய நீங்கள் உங்கள் குறைகளை இனம் கண்டு,,,, சரி செய்து பாருங்கள் ...உங்களை குறைப்பட்டு கொள்ள, யாரும் முன்வரமாட்டார்கள்...!

தெரியும் என்பது தெரியுமா...?

   
                 தெரியும் என்பது தெரியுமா...?



தெரியும் என்பதை கூட.... தெரியாது என வெளிப்படுத்தினால்.... புது புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்...!
எல்லாம் எனக்கு தெரியும் என்பவர்களுக்கு...  எதுவுமே தெரியாது என்பதை பழகிப்பார்த்தால் புரிந்துவிடும்...!
ஆரம்பம் எது என தெரியாதவர்களுக்கு...முடிவு தோல்வியாய்... தான் வெளிப்படும்....!
வரவு எப்படி வருகிறது... என தெரியாதவர்களுக்கு,  கடன் சுமை அவர்களுக்கே தெரியாமல்.... ஏறிக்கொண்டே போகும்...!
எது காதலென தெரியாதவர்களுக்கு....சோகம் ஒன்றுதான் நிச்சயம்...!
ஆகா,இனி  தெரிந்தவைகளை.. மட்டுமே செய்வோம்..!
தெரியாததை  தெரிந்து கொள்ள முயற்சி எடுப்போம்....!

தினம் தினம் ஒரு ஊற்று...!

தோற்பதுகூட சுகம்...!
தோற்று பாருங்கள் புரியும்...!
தாயிடம் தோற்று பாருங்கள்.... பாசம் கிடைக்கும்...!
தந்தை யிடம்  தோற்று பாருங்கள்.....அனுபவம்  கிடைக்கும்...!
சகோதர,சகோதரிகளிடம் தோற்று பாருங்கள்.....நேசம் கிடைக்கும்...!
நண்பர்களிடம் தோற்று பாருங்கள்.....ஆறுதல் கிடைக்கும்...!
நேசிப்பவர்களிடம்  தோற்று பாருங்கள்.....நல்ல துணை கிடைக்கும் ....!
நேரத்திடம்  தோற்று பாருங்கள்.... சுறுசுறுப்பு கிடைக்கும்...!
உங்களிடம் நீங்களே தோற்று பாருங்கள்.......நல்ல எதிர்காலம் கிடைக்கும்.....!