Sunday, October 20, 2013

அலைபாயும் எண்ணம் .. கொடுமையான ஆபத்து...!







அலைபாயும் எண்ணம் ..
கொடுமையான ஆபத்து...!

அடிக்கடி மாறும் ...
எதுவுமே ..
அவலத்தை மட்டுமல்ல ...
நம்மை ..
அசிங்கமும் படுத்தி விடும்....!

நமது ...
சொல் செயல்...
மாறாமல் ...
இருக்க வேண்டும்...!
இதற்கான ..
அடிப்படை இலக்கணம்...
சொல்லுவதற்குமுன் ..
சாதக பாதகங்களை ...
அலசுவது அவசியம்..!

செயல்பட துவங்குமுன்..
ஆரம்பம் இப்படித்தான் ...
முடிவுகள் இது தான் ....
என -
வரையறுத்து கொள்ளுவது ..
மிக முக்கியம்...!

பிறகென்ன...

உங்களின் அணுகுமுறை ..
பிறரால் ...
அலட்சிய படுத்த பட்டாலும்...
தரக்குறைவாக ..
அலச பட்டாலும்...
உங்களுக்கு மட்டும் ..
திருப்தியை ...
தந்து கொண்டிருக்கும்...!

வரக்கூடிய முடிவுகளை..
உறுதி படுத்தி கொள்ளுங்கள்...
அதுவரை..
உங்களின்..
அலசல்கள்..
தீர்மாணங்கள்...
அணுகுமுறை..
உங்களுக்குள் ..
நீங்களே செய்யும்...
விவாதங்கள்...
எப்படி வேண்டுமானாலும்..
இருந்து விட்டு போகட்டும்...
ஆனால்..
முடிவெடுத்து ..
தொடங்கிய பிறகு..
அலை பாயும் மனத்தோடு..
உங்கள் முடிவுகளையே
அலச ஆரம்பித்தால்...
அது
கொடுமையான கேவலம்..!

முடிவுகளுக்கு பிறகு...
புது தொடக்கம்..
புத்துணர்வு..
புரிந்து அனுபவியுங்கள்...!

தொடங்கிய பின்...
தொடரும் ..
கடந்ததின் தடுமாற்றங்கள்..
வாழ்க்கையின் அஸ்தமனம்...!

அலை பாயும் ..
எண்ண அலைகளுக்கு...
உங்களிடம் ..
காரணம் இருக்கலாம்...
ஆனால் ..
நிம்மதி..
சந்தோசம்...
திருப்தி...
அன்பு...
அழிந்து போகும்...!

அலை பாயும் ...
மனதை அடக்கி ...
வாழ்வின் ...
அர்த்தத்தை ...
அனுபவிப்போம்...!


Friday, October 18, 2013

முடிவுகள் ... முழுமை பெறும்....!









முடிவெடுக்க
தடுமாறுவது இயல்புதான்...!
அதர்க்காக
முடிவெடுப்பதை
தள்ளி போடுவது
தவறானது...!

வெற்றியோ
தோல்வியோ...
நம்மை கட்டுபடுத்தாது
என தெளிந்தால்..
தெரிந்தால்...
சட்டென்று முடிவெடுத்து
செயல் படுத்தியும் காட்டுவீர்கள்...!

வெற்றிதான் என
உறுதியுடன் இருந்தால்
பக்கவிளைவுகள்
யோசிக்காமல்
முடிவெடுத்ததை
விட்டுதர மாட்டீர்கள்...!

தோல்விதான் என
லேசாக சந்தேகம்
பொறி தட்டினால் கூட...
சரியான
முடிவெடுததல் கூட
நிராகரிக்க பட்டுவிடும்..!

பயம் கலந்து
முடிவெடுத்தால்..
பரிதாபம் மட்டுமே
பக்கபலமாய்
நம்மை
பாழ் படுத்திவிடும்..!

கோபம் கலந்து
முடிவெடுப்பது..
நம்மை
பாவம் சுமக்க
வைத்து விடும்..!

ஏக்கம் கலந்து
முடிவெடுப்பது....
நம் ஏற்றத்தை கூட
திருப்தியில்லாமல்
ஆக்கிவிடும் ...!

விரக்தியில்
முடிவெடுப்பது
விபரீதம் தரும்..!

சோகத்தில் முடிவெடுபபது..
சோதனையாய் மாறி
சுமை தரும்..!

புரியாமல் முடிவெடுப்பது....
புதிராய் மாறி
எல்லாவற்றையும்
சிக்கல் ஆக்கிவிடும்...!

பாசத்தில் முடிவெடுப்பது...
மறுபரிசீலனை
செய்ய முடியாதது..
சுயததை
அழிக்க தொடங்கி விடும்..!

எப்படி..
எப்போது
ஏன்
எதர்க்காக
என
எதுவுமே
சேராமல்
முடிவெடுக்க முயலுங்கள்..!

முடிவுகள் ...
முழுமை பெறும்....!

முழு வாழ்க்கையிலும்
தெளிவு
தொடரும்...!

Wednesday, October 9, 2013

நீ வேண்டும் எனக்கு...!

உனக்கெங்கே
தெரிய போகிறது .
புரிய போகிறது...
என் ஒவ்வொரு
அணுவின் தேடல்கள்..!

என் பெண்மையின் உண்மை...
நீ பார்க்கும்
என்னில் இல்லை..
என்னுள்..
உனக்காக மட்டுமே
ஏங்கும்...
துடிப்பில் வாழ்கிறது..!

என்
பார்வைகள் மட்டுமே
உனக்கு பரிச்சயம்..!
எனக்கோ..
உன் விழி
அசைவுககளே
அன்பின் அரிசுவடி...!

பார்த்தும்...
பாராமல் போவது....
உனக்கு வாடிக்கை...!

நீ
பார்க்காத போதும்...
உணர்வுகளை கூட...
வெட்கபட வைப்பதே..
என் வாழ்க்கை..!

உன்
விருப்பத்தை...
மட்டுமே தெரிய படுத்தி
தொடங்கினாய்
 உன் நேசத்தை...!

உன் பெயரின்..
ஒவ்வொரு எழுத்தும்..
என்னுள்
உச்சரிக்கபபடும்போது
உதடுகள்
உன்னையே
சுவைக்கின்றன...!

தொட்டுவிடும் தூரத்தில்
நீ
அமர்ந்து
என்னை
தொட மறுத்து..மறந்து..
என்ன
சாதிக்க போகிறாய்...!

ஒட்டாமல்
உரசி செல்லும்
உன் அருகாமை...
என்னுள்
உன்னை
விதைத்து போகிறது..!
வதைத்தும் போகிறது!

என் மேலே படரும்
உன் மூச்சு காற்று...
உன்னுள்...
என்னை...
மூழ்கடிக்க தொடங்குகிறது,.

உனக்காக
காத்திருப்பதும்...!
வந்தபின்
தவித்ிருப்பதும்..
போனபின்
துடித்திருப்பதும்...
நீ
அறியாத..
நான்..!

என்னிடம்..
உனக்கு எதுவுமே..
தேவை இல்லாமல்
இருக்கலாம்...!

ஆனால்

என்
எல்லாமும்...
உன் பார்வைக்காக...
உன் சிரிப்புக்காக...
உன் பேச்சுக்காக..
உன் அருகாமைக்காக...!

இரவுகளில்
விழித்திருந்து..
உன்னையே
நினத்திருந்து..
தலையணை நனைந்து..
உன்னால்
நான் விடும்
கண்ணீர் கூட
சுகம் தான்...!

எதுவுமே ..
தேவை இல்லை..
எப்போதும்....!

சேர்ந்து வாழ
முடியாவிட்டாலும்..
நினைத்து
வாழ...

நீ
வேண்டும்
எனக்கு...!

Sunday, October 6, 2013

நம்மால் மட்டுமே முடியும்..!

நம்மால் மட்டுமே முடியும்..!




முடியும்...!
முடியாது..?

இந்த
இரண்டு வார்த்தைகளுக்குள்
எல்லாமே அடங்கி விடும்....!

எப்படி முடிவெடுக்கிறோம்..
என்பதுதான்
நம்மை வழி நடத்தும்...!

எதுவுமே
தொடங்குமுன்..
முடியுமா..?..முடியாதா..?..
என அலசலாம்..!
தொடங்கியபின்
தடுமாறினால்
நிம்மதி தடம் மாறிப் போகும்..!

முடியும்..
என தீர்மானிக்கும்போதே..
உங்கள்
முதலடியும்..முடிவும்..
முகம் மலர செய்யும்...!

முடியாது
என எண்ணம்
உங்களுக்குள் எழும்
அந்த நொடியிலிருந்து...
தடுமாற்றங்கள்..
உங்கள் நிம்மதியை ..
உங்கள் சந்தோசங்களை...
தடம் மாற செய்துவிடும்...!

தொடங்கிய
அடுத்த நொடி
உங்களிடம் ...
முடியும்...முடியாது...
என
கேள்விகள் வர தொடங்கினால்
சஞ்சலத்தை மட்டுமல்ல
சங்கடங்களை..
உங்கள்
தொடரும் வாழ்க்கை
முழுவதும்
நிரந்தரமாக்கிவிடும்...!

முடியாது..
என்ற எண்ணம்..
நமது பயத்தின்
பரிதாபம்...!

நம்
இயலாமையின்..இழிவு...!

ஏக்கம் தரும்
துக்கம்..!

தன்னம்பிக்கையின்
தலைகுனிவு.....!

சந்தேகத்தின் சதி...!

சந்தோசத்தின் சாபக்கேடு...!

முன்னேற்றத்தின் முடக்கம்..!

முடியாது என்ற வார்த்தை..
இனி
உங்கள் நினைவுகளில் கூட
நீக்கப்படவேண்டும்...!

முடியும் என்று
மனத்துக்குள்
நினைத்து பாருங்கள்...!

தோற்பது கூட சந்தோசமாகும்..!
கிடைக்காதது கூட திருப்தி தரும்..!
உதாசீனம் கூட உற்சாகம் தரும்...!
ஏக்கம் கூட ஏற்றம் தரும்..!
சோகம் கூட சுகம் தரும்..!

முடியும்
எதுவுமே
நம்மால் மட்டுமே
முடியும்..!

Tuesday, October 1, 2013

நிமிடமும்..உன் நினைவுடன்..!

நிமிடமும்..உன் நினைவுடன்..!

சில உறவுகள்..
எப்படி என புரியாமலேயே...
நம்முள் பதிந்து போகும்..!

ஏன் இப்படி
என எண்ணம்
எழும் முன்...
ஏங்க வைக்க தொடங்கி விடும்...!

சரியா..தவறா..
என தீர்மானிப்ப தற்குள்..
அதிலேயே தஞ்சமடைந்து விடும்..!

மாறமுடியாதது..
என உறுதி..
தருவ தற்குள்..
அதிலேயே உறைந்து போகும்...!

தவிர்க்கலாம்
என நினைக்கும்போதே
தவிப்புகள் தொடங்கி விடும்...!

வேண்டாம்
என எண்ணினால்...
நினைவுகள்
அதை சுற்றியே வட்டமிடும்...!

விலகி விட
ஒரு நொடி நினைத்தாலும்..
நெஞ்சம் அணைத்து
செல்ல தீட்டம் தீட்டும்..!..

புரிய வைத்து
பிரிய நினைக்கும் போதே
புரிந்து கொண்டு
புது தொடக்கத்தை
தொடர செய்யும்...!

விழிகளை
தவிர்க்க நினைத்தால்..
பார்க்கும் பார்வைகள் வலிக்கும்...!

பேசுவதை குறைத்தால்....
வாழ்வதே கசக்கும்....!

சின்ன சின்ன
தீண்டல்களை நிராகரித்தால்..
உணர்வுகளின் தூண்டல்
உச்சம் பெரும்...!

வேண்டாம் என
கட்டுபடுத்தினால்..
வேண்டும் வேண்டும்
என கட்டளை பிறப்பிக்கும்..!

இது வேதனையின் சோகம்
என முடிவெடுக்கும் போதே..
சேர்ந்திருந்த
நொடிகளின் சுகம்
வந்து போகும்...!

சரி தவறு என
அலச போவதில்லை...
முடியும் முடியாது என
காத்திருக்க போவதில்லை...
வேண்டும் வேண்டாம்
என தயங்குவதில்லை..

நேற்றும் நாளையும்..
நிஜமில்லை...!

இன்று மட்டுமே போதும்..!

நிதமும் உன் நினைவுடன்...!