Friday, June 24, 2011

போட்டியை .. உணர்த்து .... உயர்வோம்...!

போட்டிகள் நிறைந்த வாழ்க்கை
யாராலும்
விரும்ப படுவதே இல்லை...!

அதே சமயம்
போட்டிகள் இல்லை என்றால்..
வாழ்வதில் அர்த்தமே இல்லை...!

நம்மை நாமே..
உணர்ந்து கொள்வது ..
வெற்றி அடையும் போதுதான்...!

நம்மை நாமே ...
நொந்து கொள்வது ..
தோல்விகளை ..
தொடர்ந்து சந்திக்க ...
தொடங்கும் போதுதான்..!

இந்த இரண்டுக்குமே ..
முதல் காரணம் ..
போட்டிகள் தான்..!

போட்டிகளில் வென்றவர்களை விட ...
தோற்றவர்கள் தான் ...
அதிகம் தெரிந்தும் கொள்கிறார்கள்..
அதே சமயம் ...
புரிந்தும் கொள்கிறார்கள்...!

தோற்பது தெரிந்தே ...
துணிவாய் ..
போட்டியை சந்தித்தவன் ..
ஒருபோதும் ..
வாழ்க்கையில் ..
தோற்றதே இல்லை..
மனம் உடைந்ததும் இல்லை...!

வெற்றி எளிது ...
என தெரிந்தும் புரிந்தும்..
போட்டியை ...
தவிர்க்க முயலு பவன்..
எல்லாம் இருந்தும் ..
எதையும் ..
அனுபவிக்காமல் ..
தவிக்க தொடங்குகிறான்..!
வெற்றிகளை கூட ..
தோல்வியாய் அனுபவிக்கிறான்...!

போட்டி என்றால் ..
வெற்றி
தோல்வி மட்டுமே என்ற ..
அர்த்தம் ..
அபத்தமானது..
ஆபத்துமானது...!

போட்டி ...
நம்மை நமக்கே ...
அறிமுகபபடுத்தும் ...
இரண்டாம் தாய்மை..!

போட்டி ...
சுக துக்கங்களில் ..
தோள் கொடுக்கும் ..
துணை சேர்க்கும் துணைவி...!

போட்டி ..
நம்மை நாமே ...
தட்டி கொள்ளவும்..
மீறும்போது ..
தட்டி வைக்கவும் வரும் ..
தோழமை...!

மொத்தத்தில் ..
போட்டி ..
பொறாமைக்காக இல்லை ..
பெருமைக்காக...!

போட்டியை ..
உணர்த்து ....
உயர்வோம்...!

No comments:

Post a Comment