Tuesday, September 24, 2013

புரியாத புதிர் கூட புனிதப்படும்..


புரிந்து கொள்ளுதல்...
புதிராக மாறினால்...
நிம்மதி கூட
நிலை இல்லாமல் போகும்...!

புரிந்து கொள்வதில்
சந்தேகமும்
துணை சேர்ந்தால்...
சந்தோசம் கூட
சிரமமாய்..உணரப்படும்..!

புரிந்து கொள்வது என்பது எது..
என்ன..என்பதை
அடிப்படையில்..
முதலிலிருந்து
நாம் புரிந்து கொள்ள
முயற்சி எடுப்போம்..!

வாழ்க்கை என்ன
என்று புரிந்து கொள்வதற்கு முன்...
வார்த்தைகள் எப்படி
என்ன
புரிந்து கொள்வோம்..!

இன்று சுகம்
என சொன்னால்..
நேற்றும்..
நாளையும் சோகம்
என புரிந்து கொள்ளுதல் கூடாது..!

இரவின் நிலவு
நெஞ்சை அள்ளும் என்றால்...
சூரியனின் பகல்
நமக்கு வெறுப்பு என்ற
புரிதல் அல்ல...!

தனிமையில்..
உன் நினைவுகள் மட்டுமே
என்னுள் சுவாசம் தந்து
உயிரை மீட்கிறது என்றால்...
நிஜத்தில்
நீ வெண்டாம் என்ற புரிதல்..
கொடுமையானது..!

புரிந்து கொள்வதில் தவறு...
உங்களிடம் தான்
என புரிந்து கொள்ளுங்கள்..!

உங்களை
நீங்கள் உணருவீர்கள்...!

புரியாத புதிர்
கூட
புனிதப்படும்..!
 
http://www.raaga.com/play/?id=308729 
 
 

No comments:

Post a Comment