Friday, February 4, 2011

செயல்பட.. தாமதிக்காமல்..!

தள்ளிபோடப்படுவதும்...
தாமதப்படுத்துவதும்.....
சிலவற்றிற்கு..பொருந்தலாம்..!

பலவற்றிற்கு....சரிப்படாது...!
உங்கள் -
அன்றாட செயல்களில்
எதை தள்ளி போட்டீர்கள்..?
எதை தாமதப்படுததினீர்கள்...?
கணக்கெடுத்து பாருங்கள்...!

அதனால்
உண்டான விளைவுகளையும்...
நடுநிலையோடு அலசி பாருங்கள்...!
தெளிவு மட்டுமல்ல...
புது தெம்பும் உணரப்படும்...!

கோபத்தை தள்ளிப் போடலாம்...!
உதவியை தாமதப் படுத்த கூடாது...!

பொழுது போக்கிற்காக...
நேரம் ஒதுக்குவதை தள்ளி போடலாம்...!
நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட பணியை முடிக்க தாமதப்படுத்த கூடாது..!

வேகத்தில் அவசரம் காட்டுவதை தள்ளி போடலாம்..!
உயிர் காக்கும் எந்த விஷயத்தையும்...
தாமதப்படுத்த கூடாது..!

அவசரமாய் சாப்பிடுவதை தள்ளிப் போடலாம்..!
பிறர் பசிபோக்க தாமதப்படுத்த  கூடாது...!

கடன் பிறரிடம் பெறுவதை தள்ளி போடலாம்...!
கடன் திரும்ப செலுத்துவதை தாமதப்படுத்த கூடாது...!

காதல் வயபபடுவதை தள்ளி போடலாம்...!
காதலை களங்கப்படுத்தாமல்...
கரம் பிடிக்க.. தாமதிக்க கூடாது...!

நாம் வேலைகளை
பிறர் வசம் ஒப்படைப்பதை தள்ளி போடலாம்..!
பிறரின் வேலைகளையும்
செய்து முடிக்க  தாமதப்படுத்த கூடாது...!

தவறுகளை..
தள்ளி போடலாம்.!
திருந்திக்கொள்வதில்
தாமதம் கூடாது...!

மொத்தத்தில்...
வேண்டாதை
புரிந்து தள்ளி போடுவோம்...!

அவசியங்களை அறிந்து..
செயல்பட..
தாமதிக்காமல்..
தலை நிமிர்வோம்...!

No comments:

Post a Comment