Monday, January 31, 2011

எது கடமை...?

கடமை...

நமக்கு நாமே...
நிர்ணயித்து கொள்ளும்
பலவிஷயங்களை
நமது கடமை
என நம்புகிறோம்...!

வருமானம் ஈட்டுவது...
பெற்றோரை பராமரிப்பது...,
குழந்தைகளை வளர்ப்பது...
இறைவனை வழிபடுவது...
தான தர்மம் செய்வது...
குடும்பத்தோடு வாழ்வது...
இல்லறத்தில் ஒழுக்கமாய் இருப்பது..
நாணயமாய் நடப்பது...
நம்பிக்கையை கடைப்பிடிப்பது...
இப்படி பல..பல...

நமக்கு நாமே சரியென்று
சமாதானப்படுத்தும்
பல விஷயங்கள்
கடமை என்பதை விட
நமது மடமை
என
நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தால்
உங்களுக்கே தெரியும்...!

உங்கள் வீதியில் தெரு விளக்கு
செயலிழந்தது எப்போது..என தெரியுமா...!

உங்கள் வீட்டு சாக்கடை ..சுத்தமாக்க
எப்போதாவது முயன்றது உண்டா..!

பள்ளி..கல்லூரிகளில்..பணம் தர மறுத்து
அரசு பள்ளியில் கல்லூரியில் சேர்க்க துணிவு உண்டா...!
வருமான வரி,சொத்து வரி,தொழில் வரி,
மொத்தத்தில்
அரசாங்க வரிகளை முறையாய் செலுத்த முயன்றதுண்டா.......!

அக்கம் பக்கம் சுக விழாக்களில்
உரிமை கொண்டாடியது போல்...
எது வரை அவர்கள் துன்பங்களில்
தோள் தந்துள்ளீர்கள்...!

நடைமுறையில் அவசியமாக்கப் பட்டவைகளை
கடமை என பொய் வாழ்க்கை வாழும்
உங்கள் நிலையை மாற்றி
பிறருக்கு அவசியமான தேவைகளை
பூர்த்தி செய்வதே கடமை
என கடைப்பிடியுங்கள்..!

கடவுள் கூட
உங்கள் வழிபடுதலுக்கு துணை புரிவதையே
தன் கடமை என கடைப்பிடித்து கொள்வார்...!

எது கடமை என அறிந்து..
கவலை இல்லா வாழ்க்கையை
அனுபவிப்போம்...!

No comments:

Post a Comment